12 Jun 2019 7:24 amFeatured

Mumbai-11 மராத்திய மண்ணில் தி,மு.க.வை வழி நடத்திய முன்னாள் செயலாளர் திரு. த.மு.பொற்கோ அவர்கள் நினைவையொட்டி மும்பை தி.மு.க. தலைமை அலுவலகம், கலைஞர் மாளிகை, தாராவியில் 10.06.2019 திங்கட்கிழமை மாலை 8.00 மணியளவில் பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி அவர்கள் தலைமையில், அவைத் தலைவர் வே.ம.உத்தமன் அவர்கள் முன்னிலையில் மராத்திய மாநில முன்னாள் அமைச்சரும், தாராவி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான திருமதி வர்ஷாதாய் கெய்க்வாட் அவர்கள் அய்யா பொற்கோ அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்வில் பொருளாளர் ச. பொன்னம்பலம், மூத்த தலைவர் பணகுடி சண்முகவேல், துணைச் செயலாளர் எஸ். பாஸ்கர், தானே கே.ஏ.ஜாகிர் உசேன், மலபார் குன்று செயலாளர் சேரை பிரகாஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் க. மூர்த்தி, வழக்கறிஞர் ஜோ, வழக்கறிஞர் எஸ். சிட்டராசன், சாந்திவிலி தாலுகா காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவர் அருண்குமார், அலுவலகச் செயலர் க. இராசன் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37