Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் தமிழர் திருநாள் பொங்கல் விழா

18 Jan 2020 12:55 amFeatured Posted by: Sadanandan

You already voted!

பத்லாபூர்  தமிழர்  நலச்  சங்கம் சார்பில்   தமிழர் திருநாள்  பொங்கல் விழா, சங்க நான்காம் ஆண்டு விழா 19.01.2020 ஞாயிறு மாலை  5.30 மணி முதல் பத்லாபூர்  கிழக்கில் உள்ள மோகன்  பாம்ஸ்,பென்டுல்கர்   மங்கள் காரியாலயா வில் நடைபெறவிருக்கிறது

பத்லாபூர்  தமிழர்  நலச்  சங்கத் தலைவர் கருவூர்  இரா. பழனிச்சாமி தலைமையில், பொருளாளர் ஜே. எபினேசர் வரவேற்புரையாற்ற, இணைச் செயலாளர் முனைவர் இரவிக்குமார் ஸ்டீபன் தொடக்கவுரையாற்றவுள்ளார்.  

என்.சி.பி. நகரத் தலைவர் கேப்டன் ஆஷிஷ் தாம்லே, ஜனதா  கட்சியை  சேர்ந்த  நகர்மன்ற துணைத் தலைவர் ராஜேஷ்வரி   கோர்படே, அபூர்வா கெமிகல்ஸ் உரிமையாளர் சண்முக சுந்தரி கண்ணன்,   இந்தியன் வங்கி பத்லாபூர் கிளை மேலாளர் எஸ்.எஸ். சாரி, பெடரல் வங்கி கிளை மேலாளர் ரோஹித் முரளிகுமார், டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் கவிஞர் நெல்லை பைந்தமிழ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.  

அபூர்வா கெமிகல்ஸ் நிர்வாக இயக்குநர் சக்தி கண்ணன்  துணைத் தலைவர்கள்  ச. அருணாச்சலம்,  எஸ்.பழனியப்பன், முனைவர் பா. வெங்கடரமணி ஆகியோர் முன்னிலை வகிப்பர்.   

பத்லாபூர் தமிழர் நலச் சங்கம் சார்பில் இந்திய ஏவுகணை நாயகன் முனைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் 88வது பிறந்த தின விழா “வாசிப்போம் நேசிப்போம்” நிகழ்வினை முன்னிட்டு 12.10.2019,   13.10.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பல வண்ணக் கோலப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள், மற்றும்  கலை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள்  பரிசுகள் வழங்கி பாராட்டுவர். 

இணைச் செயலாளர் சரோஜா உதய்குமார் நன்றியுரையாற்றவுள்ளார்.

மீனாட்சி வெங்கட், ஜெயந்தி சிவானந்த் ஆகியோர் கலை நிகழ்ச்சிகள் பொறுப்பும் சங்க நிர்வாகிகள்,  அ. அகஸ்டின்,  டி.வெங்கடேசன், எஸ். கோவிந்தராஜ், கணேஷ் கண்ணன் கார்த்திக் மனோகர் துரை  ஆகியோர் விழா  ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். சங்க ஆயுள்,  ஆண்டு சந்தா உறுப்பினர்கள் மற்றும் பத்லாபூரில் வாழும் தமிழர்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க நிர்வாகிகள் மற்றும் ஆயுள் உறுப்பினர்கள் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

102404
Users Today : 28
Total Users : 102404
Views Today : 47
Total views : 427706
Who's Online : 1
Your IP Address : 18.97.9.169

Archives (முந்தைய செய்திகள்)