05 Mar 2024 12:07 amFeatured

05.03.2024 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மும்பை - திலக் நகர் செம்பூரில் உள்ள தருண்பாரத் சேவா சங்க அரங்கில் வைத்து நடைபெற்றது
மும்பை புறநகர் மாநிலத் தி.மு.கழகத்தின் பொருளாளர் பி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் துணைச்செயலாளர் அ.இளங்கோ வரவேற்புரை ஆற்றினார்.
மும்பை புறநகர் மாநிலத் திமுக செயலாளர் அலிசேக் மீரான் விழாவில் எண்ணற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு குறிப்பேடுகள், எழுதுகோல்கள், மற்றும் வடிவியல் பெட்டிகளும் (Geometry boxes) வழங்கிச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புறநகர் திமுக துணைச்செயலாளர், முனைவர் வதிலை பிரதாபன், திராவிட கழகத் தலைவர் பெ.கணேசன் , மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், இலக்கிய அணித் துணை அமைப்பாளர் வெ.அ.ஜைனுல்லாபுதீன்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மும்பை மாநிலத் தி.மு.கழக அவைத்தலைவர் வே.ம.உத்தமன், புறநகர் திமுக இலக்கிய அணிப் புரவலர் சோ.பா.குமரேசன், டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை.சோ.பாபு, இளைஞரணி துணை அமைப்பாளர் அமரன் உத்தமன், தோழர் கண்ணன், பிவண்டி கிளைப் பொருளாளர் முஸ்தாக் அலி, வாஷி கிளைக்கழகம் சார்ந்த தில்லை, ஆறுமுகம், எம்.ஈ.முத்து, டி.சங்கர், குலசேகரன், ஜி.பசுபதிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்கறிஞர் க.கணேசன், சங்கர் திராவிட், அ.பாலசுப்பிரமணியன், பூ.சு.அழகுராஜா, குரு, எம்.மலையாண்டி தாஸ், ம.பரமசிவன், அசைலன், ராணி, அழகம்மாள், வீரம்மா, மாயா, சக்குபாய், காமாட்சி, சந்திரா, பிச்சையம்மா, பார்வதி, சின்னப்பொன்னு, மாதுரி, சந்திரகலா, அமுதா கிருஷ்ணன், ராஜேஸ்வரி, மாரியம்மா, சேக் அலாவுதீன், அஞ்சலை, சீத்தாராமன், திருநாவுக்கரசு, தினேஷ், வேலு, அறிவு, மணி, ராணி, அர்விந், ராதாகிருஷ்ணன், ஆனந்தன், சேகர், பட்டு, மீரா, ரேகா, சுரேந்தர், மணி, சைமன், பாக்யலட்சுமி, மாரியம்மா, செல்வக்குமார், அஞ்சனா, கமல், ராமு, விஜயா, நாகு, கமீலா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
நிறைவாக, செம்பூர் கிளைச் செயலாளர் நம்பி நன்றியுரை ஆற்றினார்.






Users Today : 21
Total Users : 105723
Views Today : 28
Total views : 433229
Who's Online : 0
Your IP Address : 18.97.14.85
நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை அருமை தென்னரசு இதழுக்கு வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்
Very Happy.Nice arrangement.