02 Mar 2023 10:17 pmFeatured

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளில் ஏழைப் பிள்ளைகளுக்கு உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம் புறநகர்ப் பகுதியில் உள்ள ஜெரிமெரி கிளைக்கழகம் சார்பாக மரோல் விஜய்நகர் பகுதியைச் சார்ந்த வின்சென்ட் பலோட்டி சர்ச் அருகில் உள்ள ஸிஸ்ட்டர் அடோர் - நவ்ஜ்யோத் அனாதை இல்லத்தில் உள்ள ஏழைச் சிறுமிகளுக்கு புறநகர் தி.மு கழகத்தின் துணைச்செயலாளர் பொ.அ.இளங்கோ தலைமையில் உணவு வழங்கப்பட்டது.
புறநகர் தி.மு. கழகத்தின் துணைச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ ரா.தமிழ்நேசன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், துணை அமைப்பாளர் இரா.கணேசன், பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெஹபூப் பாட்சா, லிட்டில் பிளவர் ஆங்கிலப் பள்ளித் தலைமையாசிரியர் விஜயலெட்சுமி கணேசன், ஸ்ருதி இளங்கோ மற்றும் தமிழன்பர்கள் நிகழ்வில் கலந்து மகிழ்ந்தனர்.
இல்லத்தின் நிர்வாகிகள் சோனியா உள்ளிட்ட சகோதரிகள் முன்னிலை வகித்தார்கள்.
நிறைவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரது நன்னாளில் வழங்கப்பட்ட உணவிற்காக குழந்தைகள் நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள்.






Users Today : 13
Total Users : 118872
Views Today : 15
Total views : 449974
Who's Online : 0
Your IP Address : 18.97.9.172