Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

20 Oct 2020 12:50 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

நேற்று 18-10-2020 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் ஸூம் செயலி வழியாக மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவும் காலஞ்சென்ற திரையிசை மேதைகளின் நினைவலைகள் என்ற நிகழ்ச்சியும் மன்றத்தின் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெற்றது.

மன்றப் பேச்சாளரான கவிஞர் பிரவினா சேகர் வரவேற்புரையாற்ற மன்றத்தின் ஆலோசகரும் ஐ.டி.பி.ஐ வங்கியின் துணைப் பொது மேலாளருமான டாக்டர் ஜி.வி.பரமசிவம் தொடங்கி வைத்த நிகழ்வில் நடுவணரசின் இந்திய அணுமின்துறையைச் சார்ந்த ந்யூக்ளியர் பவர் கார்பரேசன் நிறுவனத்தின் பொது மேலாளர்
சு.மு.முகமது மன்சூர் பி.ஈ. எம்.பி.ஏ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

அறிவியலறிஞர் கலாம் அவர்களின் பிறந்தநாள் சிறப்புரை அறிவியல் சார்ந்த நிறுவனத்தின் பொது மேலாளர் ஒருவர் சிறப்புரை ஆற்றுவது மெத்தப் பொருத்தமான ஒன்றாகும். அதோடு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்த அனைத்து அன்பர்களுக்கும் பி.ஏ.ஆர்.சி (Bharat Automatic Research  Corporation) நிறுவன விஞ்ஞானியும் அணுசக்திநகர் கலைமன்றத்தின் தலைவருமான ந.கனகசபை அவர்கள் நன்றி கூறி விழாவை நிறைவு செய்தது கலாம் அவர்களுக்குச் செய்யும் மற்றுமொரு சிறப்பாகவே கருதத்தக்கது.

நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வாக தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவும் டி.எம்.எஸ்.நரசிம்மன் இசைக்குழுவும் இணைந்து வழங்கிய - "திரையிசை மேதைகளின் நினைவலைகள்" என்ற பெயரில் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

(டி.எம்.எஸ்)எம்.என்.நரசிம்மன், ஆர்.டி.இராசன்(கீ போர்ட்) சாய்முரளி, ராணிச்சித்ரா, அலி(கீபோர்ட்), சங்கர் (தப்ளா) போன்ற இசைக் குழுவினர் நிகழ்வில் கலந்துகொண்டு பாடல்களை வழங்கிச் சிறப்பித்தனர்.

நிகழ்வில் மன்றப் புரவலர்கள் அலிசேக் மீரான், சேதுராமன் சாத்தப்பன், அரியகுடி மெய்யப்பன் ஆலோசகர்கள் பாவலர் முகவை திருநாதன், கருவூர் இரா.பழனிச்சாமி மற்றும் அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக இலெமூரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், பெங்களூரைச் சார்ந்த கவிஞர் காந்தி சுப்பு ஆறுமுகம், நல்லாசிரியர் மாசிலாமணி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிகிருந்து பல தமிழுணர்வாளர்களும் கலந்து கொண்டு தமது கருத்துத்துரைகளையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன்,  பொருளாளர் அ.இரவிச்சந்திரன், துணைத் தலைவர் கவிஞர் இரஜகை நிலவன், நிர்வாகக் குழுத் துணைச் செயலாளர் தேவராசன் புலமாடன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

சூம் செயலி மூலம் ஆட்சிமன்ற குழுவைச் சார்ந்த வே.சதானந்தன் இருபெரும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்தார்.

ஆர்வமுள்ள அனைத்துத் தமிழன்பர்களும் நிகழ்வில் கலந்து மகிழ்ந்தனர்.

ஜூம் நிகழ்ச்சியின் முழு காணொளி

ந்யூக்ளியர் பவர் கார்பரேசன் நிறுவனத்தின் பொது மேலாளர்
சு.மு.முகமது மன்சூர் அவர்கள் சிறப்புரை

தலைமையுரை

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 3.128.190.102

Archives (முந்தைய செய்திகள்)