25 Sep 2020 9:39 amFeatured

மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்தும் சூம் செயலி வழி மெய்நிகர் காணொளி நிகழ்ச்சி 27.09.2020 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களில் தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் இருப்பு வங்கி,சென்னையின் துணைப் பொது மேலாளர் முனைவர் ரத்தினம் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆலோசகரும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவருமான எஸ்.இராமதாஸ் தலைமை தாங்குகிறார்
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் துணைச் செயலளர் பொற்செல்வி கருணாநிதி தொடக்கவுரையாற்றுகிறார்
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் துணைப் பொருளாளர் அந்தோணி சேம்ஸ் வரவேற்புரையாற்றுகிறார்
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் ஆட்சி குழு உறுப்பினர் கு.மாரியப்பன் நன்றியுரையாற்றுகிறார்.
அனைவரும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்கும்படி மன்றத் தலைவர் வதிலை பிரதாபன், செயளாளர் அமலா ஸ்டேன்லி, பொருளாளர் அ.இரவிச்சந்திரன் மற்றும் மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொள்கிறார்கள்






Users Today : 7
Total Users : 119787
Views Today : 7
Total views : 451066
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90
அருமை. அனைத்து அமைப்புகளின் நிகழ்வுச் செய்திகளை சிறப்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி