25 Apr 2025 9:35 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், வலைத்தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா
இணைந்து இணையம் வழியாக வழங்குகிறது.
27-04-2025 ஞாயிறு மாலை அன்று மாலை 6 மணியளவில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் அமெரிக்கா- வலைத்தமிழ் தொலைக்காட்சி இணைந்து இணையம் வழியாக வழங்கும் பாவேந்தர் பிறந்தநாள் விழா மற்றும் உலகத் தமிழ் நாள் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
நிகழ்வுத் தலைவர்
புரவலர், தமிழ் எழுத்தாளர் மன்ற புரவலரும் தொழிலதிபருமான அலிசேக் மீரான் தலைமை தாங்குகிறார். தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பாவரசு வதிலை பிரதாபன் அறிமுகவுரையாற்றுகிறார்.
பாவேந்தர் பிறந்தநாள்விழா பட்டிமன்றம்
பாவேந்தர் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழியுணர்வா! சமுதாய உணர்வா! என்றத் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது
பட்டிமன்ற நடுவர்
மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது பெற்றவரும், கவிக்கோ விருது பெற்றவருமான கவிச்சுடர் கவிதைப் பித்தன் நடுவராக இருந்து நடத்தும் பட்டிமன்றத்தில்
மொழியுணர்வே! என்றத் தலைப்பில்
தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகரும், புதுக்கோட்டை-ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி பேராசிரியர் முனைவர் மு பாலசுப்பிரமணியன்,சென்னை-வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ச.பிரியா மற்றும் தமிழ் எழுத்தாளர் மன்ற கருத்துரைஞர் பிரவினா சேகர் ஆகியோரும்
சமுதாய உணர்வே! என்றத் தலைப்பில்
புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் மகா சுந்தர், தமிழ் எழுத்தாளர் மன்ற முன்னணிப் பேச்சாளர் உரைத்தென்றல் CS கி.வேங்கடராமன், தஞ்சாவூர், தமிழத்துறை பேராசிரியர் முனைவர் சு.பாஸ்கர் ஆகியோர் வாதிடுகின்றனர்
கலைப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் ராணி சித்ரா நெறியாள்கை செய்கின்றார்
Zoom செயலி வாயிலாக நிகழ்வில் கலந்துகொள்ள
Meeting ID: 945 0336 0817 Passcode: 123123 உள்ளிட்டு கலந்துகொள்ள மன்றத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
நேரலையாக www.valaitamil.tv ல் நிகழ்வைக்காணலாம்