Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தென்னரசு மின்னிதழ் பரிசளிப்பு விழா – இணைய வழியில்

19 Feb 2022 1:11 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures prize

ஆகச்சிறந்த கதைச்சொல்லிதிரு.பவா செல்லத்துரை 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் உறுதுணையுடன்
தென்னரசு மின்னிதழ் மின்னஞ்சல் வழியே நடத்திய சிறுகதைப் போட்டியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அப்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா நாளை (20.02.2022) ஞாயிறு அன்று இந்திய நேரப்படி மாலை 6.00 க்கு Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கிறது.

போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு முறையே 3000, 2000, 1000 பரிசுகள் வழங்கப்படுவதோடு சிறுகதைச் செம்மல், சிறுகதைச் செல்வர், சிறுகதை இளவல் விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்படுகின்றனர். போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவிருக்கிறது.

ஆகச்சிறந்த கதைச்சொல்லிதிரு.பவா செல்லத்துரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களை அறிவிப்பதோடு விருதுகளையும் வழங்கி சிறப்பிக்கிறார்.

மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் தலைவரும் தென்னரசு மின்னிதழின் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார்

தென்னரசு மின்னிதழின் துணை ஆசிரியர் திரு. வெங்கட் சுப்ரமண்யன் வரவேற்புரையாற்றுகிறார்

மேனாள் புரவலர், தென்னரசு குழுமம் மற்றும் மேனாள் கண்காணிப்பாளர், சுங்க வரித்துறை
கவிஞர் அரியக்குடி மெய்யப்பன் துவக்கவுரையாற்றுகிறார்.

தொழில் அதிபரும் தென்னரசு மின்னிதழின் புரவலருமான திரு. அலிசேக் மீரான்,
எழுத்தாளர் மற்றும் பத்லாபூர் தமிழர் நலச்சங்கத்தின் அமைப்பாளருமான திரு. கருவூர் இரா பழனிச்சாமி,
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவரும் தென்னரசு மின்னிதழின் சிறப்பு ஆசிரியருமான கவிமாமணி இரஜகை நிலவன்,
நிமிர் இலக்கிய வட்டத்தின் நிறுவனர் கவிஞர். பாபுசசிதரன்,
தொழில் அதிபரும் தென்னரசு மின்னிதழின் புரவலருமான திரு. ந. வசந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

திருமதி அமலா ஸ்டேன்லி , பாவலர் முகவை திருநாதன், கவிஞர் அரியக்குடி மெய்யப்பன்,
திரு. பெ.கணேசன், திரு. அ. இரவிச்சந்திரன், பாவலர் நெல்லைப் பைந்தமிழ், திரு. கனகசபை,
திரு. பு.தேவராசன், திரு. வீரை சோ பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தென்னரசு மின்னிதழின் புரவலர் திரு. கு. மாரியப்பன் நன்றி நவில்கிறார்.
தென்னரசு மின்னிதழின் முதன்மை ஆசிரியர் திரு.வே.சதானந்தன் நிகழ்வினை நெறியாள்கை செய்கிறார்.

அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்

நிகழ்வில் கலந்து கொள்ள
Meeting ID: 479 247 4658
Passcode: 444555

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/4792474658?pwd=U2FSVUR1TmMxLzhYSmdMOGdWeXQ5QT09

You already voted!
2.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ஆர்.முருகன்
ஆர்.முருகன்
2 years ago

நன்றி.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092526
Users Today : 11
Total Users : 92526
Views Today : 19
Total views : 410187
Who's Online : 0
Your IP Address : 18.220.1.239

Archives (முந்தைய செய்திகள்)