Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

வெற்றிக் கனவு

16 Feb 2022 12:02 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures vetrikanavu

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-59
படைப்பாளர் - ரா.சீனிவாசன்

அன்று காலை I0.00 மணி, மா, பலா, வாழை என முக்கனிகளும் தாம்பூழத்தில் வைக்கப்பட்டு மக்கள் சலசலப்புடன் ஆனந்தியின் வீடு நிறைந்து காணப்பட்டது. ஆம் அன்று ஆனந்தியை பெண் பார்க்கும் நிகழ்வு நடந்துகொண்டிருந்தது.

அவள் வீட்டில் மாப்பிள்ளை வீட்டார் ஒரு புறம் அமர்ந்திருக்க எதிர்புறம் பெண் வீட்டார் அமர்ந்திருக்க பெண் பார்க்கும் படலம் இனிதே தொடங்கியது. "அப்புறம் என்னப்பா பெண்ணை வரச்சொல்லுங்க"என்று பெண் பார்க்கும் படலத்தில் வரும் வழக்கமான வசனத்தை மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் கூற பெண் வீட்டார் பெண்ணை அழைத்து வர மணமகன் மணமகள் இருவரின் இருவிழிகளும் நேர்கோட்டில் சந்திக்க இருவரும் ஒருவரை ஒருவர் ஈர்க்கத்தொடங்கினர்.

அப்புறம் என்ன இருவருக்கும் இணைவதிலே சம்மதம்தான். இவ்விருவரின் சம்மதம் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் சம்மதத்தையும் உறுதிபடுத்தியது. இருவீட்டாரும் தாம்பூழத்தை மாற்றிக்கொண்டனர். அடுத்து நிகழவிருக்கும் நிகழ்வுகளை பற்றி அலோசிக்க இருவீட்டாரும் ஆயத்தமானார்கள். பெண் பார்க்கும் படலம் இனிதே நிறைவுற்றது.

இருவீட்டாருக்கு திருமண வேலையை தொடங்க இனிதே மணமகனும் மணமகளும் ஆனந்தக் கணவு காண ஆனந்தமாய் தொடங்கினார்கள். ஆனந்தம் இரு இல்லத்திலும் தொடர்ந்தது.மணமகன் மணமகள் இருவரும் மெல்லமாக ஒருவரை ஒருவர் சந்திக்க தொடங்கினர். தொடக்கத்தில் இருவருக்கும் இடையே சொற்கள் பல உலாவவில்லையென்றாலும் நாட்கள் நகர நகர மெல்மாக சொற்களும் இருவருக்கிடையே நகரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நேரம் காலம் தெரியாமல் இருவருக்கும் இடையே சொற்கள் துள்ளி விளையாடக் தொடங்கியது. இருவருக்குமான இடைவெளியும் குறுகியது. உணர்ச்சிகள் பொங்க இருவரின் மனமும் இணைந்து ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது.

குறுகிய சில நாட்களில் பல விசயங்களை ஒருவருக்கொருவர் பேசிக்கழித்தனர். இங்கோ இவர்கள் இருவரும் இணைந்து

உறவாடிக்கொண்டிருக்க அங்கோ இருவீட்டாரும் இணைத்து திருமண ஏற்பாடுகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்துகொண்டிருந்தனர். நாட்கள் வேகமாக கழிந்தது. திருமண நாளும் நெருங்கியது.

ஒருநாள் மணமகன் மணமகள் இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது மணமகன் தன்னுடைய வாழ்வின் இலட்சியத்தை பற்றி கூறக் தொடங்கினார். அதாவது தான் சொந்தமாக ஒரு உணவகம் தொடங்க வேண்டும் என்றும் அந்த உணவகத்திலிருந்து நாள் ஒன்றுக்கு  பசியால் வாடும் ஐந்து நபர்களுக்கு  இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்றும் கூறினான். தன் கனவை நிறைவேற்றுவதற்கும் இந்த உணவகத் துறையில் அனுபவம்

பெறுவதற்காகவும் தற்பொழுது தான் ஒரு உயர்தர தனியார் உணவகத்தில் செஃப்பாக வேலை செய்து வருவதாக கூறினான்.

அதில் வரும் சம்பலத்தில் தன் செலவு போக மீதமுள்ள பணத்தை தான் வருங்காலத்தில் தொடங்கப் போகும் உணவகத்திற்காக வங்கியில் சேமித்து வருவதாகவும் கூறினான்.

"சரி  உண்ணுடைய கனவு இலட்சியம் என்ன?” என்று  அவன் அவளிடம் கேட்க அவளோ "எனக்கு தங்களை போல் சொல்லும் அளவிற்கு கனவு இலட்சியம் என்று வாழ்வில் எதுவும் இல்லை வாழ்க்கை நகரும் வழியில் நானும் இதுவரை பயணித்துக் கொண்டிருக்கிறேன்"என்று கூறினாள். இப்படி இருவரும் தங்களின் உரையாடலை தொடர்ந்து கொண்டே காரில் நெடுதூரம் பயணம் செய்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது சடாரென்று இருவரின் உரையாடலும் நின்றது .டமாலென்று ஒரு சக்தம் .

எதிரே வந்த லாரி மோதி காருக்கு மிகப்பெரிய சேதாரம் காருக்குள் இருந்த இருவரின் உயிரும் ஊசலாடிக்கொண்டிருந்தது.  இருவரின் காதல் பயணத்தில் யாரும் எதிர்பாரா இடைவேளி அது.  விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்களில் சிலர் காவலர் உதவியுன் அவர்களை மருத்துவமணையில் அனுமதித்தனர். மேலும் காவலர் அவர்களின் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்தார். மருத்துவர் இருவரின் உடல் நிலையையும் பார்த்தவிட்டு பிழைப்பது கடினம் என்று கைவிரிக்க இருவீட்டாரும் இருண்டனர்.

சிறிது நேரத்தில் மணமகன் இறந்து விட்டார் மணமகள் பிழைத்து விட்டார் என்ற செய்தியை மருத்துவர் .அதுவரை சமமாய் இருந்த தராசு ஒரு புரம் கீழே சாய்ந்தது.ஆனந்தி உயிர்பிழைத்தாலும் காலில் பெரிய சேதாரம் எழுந்து நப்பத்தற்கு ஆறு மாத காலம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இரு வீட்டாருக்கும் நரக நாட்கள் அது .ஆறு மாத காலத்தை மிகவும் சிரமத்தோடு கடந்தாள் ஆனந்தி. தன்னுடைய காதலன் இறந்த செய்தி அவளை மிகப்பெரிய மன வருத்தத்திற்கு ஆளாக்கியது. அந்த சோகத்திலிருந்து மீண்டு வர அவளுக்கு ஓராண்டு காலம் தேவைப்பட்டது.

காதலனின் நினைவுகள் தன்னை நெருங்காதிருக்க ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய தொடங்குகிறாள் ஆனந்தி. அவளின் பெற்றோர் அவளை வேறொருவருடன் திருமணம் செய்ய வற்புருத்தியும் அவள் அதற்கு செவி சாய்க்கவில்லை.

காலம் கடந்தது. இரண்டு வருடம் கழிந்து. அவளின் பெற்றோரின் வற்புறுத்தலும் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. ஒருவழியாக அவளின் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு செவி சாய்த்தாள் ஆனந்தி. ஆனால் தான் திருமணத்திக்கு பின்பும் தன்னுடைய அலுவலகப் பணிகளை தொடர்வதாகவும் இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதித்தாலே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தன் பெற்றோரிடம் உரக்க கூறிவிட்டாள். அவளின் பெற்றோரும் வேறு வழியின்றி கோரிக்கைக்கு ஏற்றவாறு தேட ஆயத்தமானார்கள்.நாட்கள் பல நகர்ந்தது.ஒரு வழியாக ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் பணிபுரியும் ஒரு நபருக்கு தங்களது மகள் ஆனந்தியை திருமணம் செய்து கொடுக்க முடிவு

செய்தனர். மாப்பிள்ளையும் அவரின் குடும்பத்தாரும் ஆனந்தியின் தோரிக்கையை வரவேற்றதால் இருவீட்டாரின் பூரண சம்மதத்துடன் செல்வகுமாருக்கு ஆனந்திக்கும் திருமணம் சிறப்புர நடந்து முடிந்தது. ஆனால் ஆனந்திக்கு என்னவோ இத்திருமணத்தில் பெரிய ஈடுபாடு ஒன்றும் இல்லை. இருப்பினும் அவள் பெற்றோரின் பிடிவாதத்திற்காக திருமணம்  செய்துக்கொண்டாள்.

திருமணத்திற்கு பின் அவள் ஆசைப்படியே தொடர்ந்து தனது அலுவலகப் பணியை செய்து வந்தாள். தொடக்கத்தில் இல்லரவாழ்வில் அக்கரை காட்டாதிருந்தாலும் நாட்கள் நகர நகர சூழல் அவளின் மனதையும் மாற்றியது. அவளின் மாதச்சம்பளத்தை குடும்பச்சிலவு மற்றும் இதரச்சிலவுகள் போக மீதமுள்ள பணத்தை வங்கியில் சேமித்து வந்தாள். கணவனும் நல்ல வருமானம் ஈட்டிவந்ததால் குடும்பத்தில் பணச்சுமை என்று ஒன்று இல்லை. எந்த சிக்கலுமின்ற மென்மையாக நகர்ந்தது அவளின் குடும்ப வாழ்க்கை. பத்து வருடம்

கழிந்தது அதுவரை தான் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு தன் கணவன் இரு பிள்ளைகள், தனது பெற்றோர்  தன் கணவனின் பெற்றோர் என அனைவரின் சம்மதத்தோடும் இவர்கள் அனைவரின் முன்னிலையில் "வெற்றி உணவகம்" என்று ஒரு உயர்தர உணவகத்தை தொடங்குகிறாள். மேலும் அந்த உணவகத்தில் நாள் ஒன்றுக்கு பசியால் வாடும் ஐந்து நபருக்கு இலவச  உணவும் வழங்கி வந்தாள்.

உணவகம் நன்றாக செயல்பட்டு வந்தது. உணவகத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்ததால் மக்கள் கூட்டம் நிறைந்துகொண்டே இருந்தது. ஆனந்தி ஒரு நாள் தனது உடைமைகளை வைத்திருக்கம் ஒரு பழைய பெட்டியை சுத்தம்செய்துக் கொண்டிருந்தாள். தூய்மை செய்துகொண்டிருக்கும் போது அப்பெட்டியின் முளையில் ஒரு பழைய திருமண பத்திரிக்கை அவள் கண்ணுக்கு தென்பட்டது அதில் மணமகன் வெற்றிச்செல்வனுக்கும் மணமகள் ஆனந்திக்கும் வரும்  கார்த்திகை மாதம் 10ஆம் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தது. அனந்தி அதை பார்த்து புன்முறுவல் செய்தாள்.

ஆனந்தி  தன் வாழ்வில் கனவுகள் ஏதுமின்றி வாழ்க்கை போகும் போக்கில் நகர்ந்து சென்றாலும் வெற்றிச்செல்வனின் கனவு அவளின் மூலகமாக வெற்றிபெற்றுவிட்டது.

You already voted!
4.7 3 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092526
Users Today : 11
Total Users : 92526
Views Today : 19
Total views : 410187
Who's Online : 0
Your IP Address : 18.220.64.128

Archives (முந்தைய செய்திகள்)