11 Jan 2021 10:38 amFeatured

திராவிட முன்னேற்றக் கழகம் மும்பை மாநில இளைஞர் அணியின் சார்பாக நாட்காட்டி வெளியீட்டு விழா மற்றும் பீவண்டி கிளை உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நேற்று 09-01-2021 அன்று பிவண்டி கெமிஸ்ட் அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்றது. மும்பை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திமுக இளைஞரணி நாட்காட்டியை மும்பை புறநகர திமுக செயலாளர் திரு அலிசேக்மீரான் அவர்கள் வெளியிட்டு சிறப்புரை யாற்றினார்.
முன்னதாக பிவண்டி கிளைகழக செயலாளர் மெகபூப் பாஷா சேக் வரவேற்புரையாற்ற மாநில திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பொய்சர் க.மூர்த்தி தொடக்க உரையாற்றினார் .தந்தை பெரியாரின் படத்தை மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் அவர்களும் பேரறிஞர் அண்ணாவின் படத்தை மாநகர திமுக அவைத்தலைவர் வே. ம. உத்தமன் அவர்களும் முத்தமிழறிஞர் கலைஞரின் படத்தை பிவண்டி கிளை திமுக அவைத்தலைவர் முகமது அலியும் திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கரூர் இரா பழனிசாமி புறநகர் திமுக துணைச் செயலாளர்கள் வதிலை பிரதாபன், பொ.அ.இளங்கோ, இலக்கிய அணி புரவலர் சோ . பா.குமரேசன் பிவண்டி கிளை பொருளாளர் முஸ்தாக் அலி, ஜான் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மேலும் புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா. தமிழ்நேசன் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன், மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி துணை அமைப்பாளர் வெ.அ. ஜெயினுலாபுதீன், கிளைக் கழகச் செயலாளர் வீரை.சோ.பாபு, முலண்ட் கிளைக் கழகச் செயலாளர் பெருமாள், தானே கிளை நிர்வாகி ஜாகிர் உசேன், அம்பர்நாத் முத்தமிழ் தண்டபாணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இவ்விழாவில் கழக உறுப்பினர்கள் அமரன் உத்தமன் ,வாசி பழனி,பாஸ்கர், சாகுல் ஹமீது ,அன்வர் பாஷா ,அப்துல்லா ,மகேஸ்வரன், முத்துக்குமார், சூர்யபிரகாஷ், விஜயகுமார், செல்வமணி ,பிரேமா, சித்ரா ,சௌமியா ,ஆயிஷா சேக் ,ஷர்மிளா, செல்வி ,பேகம் சேக் ,பர்சானா, பாத்திமா,ரபீக், யூசுப் ,சத்யநாராயணன், கனிமுத்து, அஜய் ,காபூல்ஹசன், அரசன், நிஜாம் ,மலையாண்டி , ஜீவா, ஜெபர்சன் ,ஜெய குமார் ,பாஸ்கர், கோபால், கணேசன் செந்தில் குமார் ,ராஜா ,தில்லை ராஜன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக பிவண்டி கிளைக் கழக இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் சு.சம்பத் நன்றி உரையாற்றினார்.மோதே டீ உரிமையாளர் முஸ்தாக் அவர்கள் வந்திருந்த முக்கிய விருந்தினர்களுக்கு விருதுகள், வழங்கி சிறப்பித்தார். முன்னதாக
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் முள்ளி வாய்க் கால் நினைவு சின்னம் இடிக்க பட்டத்திற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க பட்டது.






Users Today : 3
Total Users : 113600
Views Today : 3
Total views : 442948
Who's Online : 0
Your IP Address : 18.97.14.86