15 Feb 2022 5:36 pmFeatured

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-54
படைப்பாளர் - பா.சுரேகா

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
என்று பாடிக்கொண்டிருந்தாள் மிருதுலா.அடுத்த பாட்டு பாடு டி என்று சொன்னாள் அவள் பாட்டி இளம்பாவை. பாட்டி எனக்கு ஒரு சந்தேகம் கேட்கவா... உனக்கு வேலையே இல்லையா என்று கேட்டாள் அவள் அம்மா விதுபாலா. அம்மா உனக்கு தெரியாத.. பாட்டிய பார்த்த இவளுக்கு நாமலா கண்ணு தெரியமாட்டோம்னு என்று கிண்டலடித்தாள்.
அக்கா தமிழ்வாணி.சட்டென்று விழித்தாள் மிருதுலா. ச்சா இதெல்லாம் கனவா என்று புலம்பினாள்.அம்மா, எனக்கு பசிக்கிது என்று தயாளினி அழுகிறது. இருடி வரேன் என்று சொல்லிவிட்டு தட்டில் சாப்பாடு போட்டுகொண்டு வந்து தன் குழந்தை தயாளினிக்கு ஊட்டினாள்.
கதை சொல்லு அம்மா என்று தயாளினி கேட்டது. ஓர் அழகான கூட்டுக் குடும்பம். அம்மா, அப்பா, அக்கா, தங்கை.பாட்டி, தாத்தா என்று தினமும் சந்தோசமாக நாட்கள் நகன்றது.இந்த கதையில் கதாநாயகி தங்கை தான். வீட்டில் அனைவருமே அவளுக்கு செல்லம் கொடுப்பார்கள். ஏன் என்று கேட்டால்அவள் தான் எங்கள் வீட்டு கடைக்குட்டி என்று சொல்லுவார்கள்.
அவள் மிகவும் திறமையானவள். சிறந்த பேச்சாளர். அனைவரிடமும் அன்பாய் நடந்துக்கொள்வாள்.அவள் பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றாள்.கல்லூரியில் சேர்ந்த பிறகு இவளை பொண்ணு கேட்டு நிறைய பேர் வந்தார்கள். ஆனால், இவளோ நான் படிக்கனும். எனக்குனு கனவுகள் இருக்கு அதுனால எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.
அம்மா அவளிடம் சென்று, ஏன் டி இப்போ கல்யாணம் உனக்கு வேணாம். உங்க அக்காவை பார்த்தியா அவ கையில இன்னும் இரண்டு மாசத்துல ஒரு குழந்தை இருக்கும். நீ, என்னனா கல்யாணம் வேணாம். எனக்கு கனவு தான் முக்கியம் சொல்லிக்கிட்டு இருக்க.பொண்ணா பொறந்தா கல்யாணம் செஞ்சு தான் ஆகனும் டி மனசுல வைச்சுக்கோ.. என்றாள்.அம்மா,
கொஞ்ச நாள் போகட்டும் என்றாள். ஒரு நாள் இவள் யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து அழுதுக்கொண்டிருந்தாள். இவள் அழுவதைப் பார்த்த அம்மா, என்னடி ஆச்சு என்று கேட்டாள். இவளோ அப்படி இப்படி என்று மழுப்பி சென்று விட்டாள். சில நாட்கள் கழித்து தான் அவள் அம்மாவுக்கு தெரிய வந்தது இவள் யாரையோ காதலிக்கிறாள் என்று.
ஒரு நாள் அவளுடன் அம்மா தனியாக பேசினாள். ஏன் டி இப்படி செஞ்ச இந்த குடும்பமே உன்ன மட்டும் தானடி நம்புச்சு, ஆனா நீ இப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டு வந்து நிக்கிற. என் வயித்துல பொறந்துட்டு இப்படி செஞ்சுட்டியே.. என்று கதறி அழுதாள்.
அம்மா, எதுக்கு அழகுற ,நான் என்ன மா செஞ்சேன் என்று கேட்டாள் மகள்.என்ன செஞ்சியா அவள் கையை இழுத்து தன் தலைமேல் வைத்து நீ இன்னிக்கு காலைல யாரோட வெளிய போன உண்மைய மட்டும் சொல்லு டி என்றாள். அம்மா... அது... அது , என்னடி அது அந்த பையன் யார் என்று மகளிடம் கேட்டாள்.அம்மா,
அவன் பெயர் அபிமன்யு. நானும், அவனும் மூணு வருசமா காதலிக்கிறோம். அவனோட தான் என் வாழ்க்கையை வாழனும்னு ஆசைப்படுறேன்மா என்றாள். சடக்கென்று மகளின் கன்னத்தில் ஒரு அறையிட்டாள்.என்னடி பேசுற உனக்கு உன் தாய்மாமன் மிதுன் இருக்கிறான் என்பதை மறந்துட்டியா, அவன் உன் மேல உயிரே வைச்சிருக்கான்டி,
அம்மா நிப்பாட்டு எனக்கு மாமாவ பிடிக்கல என்றாள்.எனக்கு அபிமன்யு வேணும் அம்மா. எங்களை பிரிச்சிடாதீங்க என்று அம்மாவின் காலில் விழுந்தாள். உனக்கு வர முகூர்த்ததிலேயே உன் மாமாவோட கல்யாணம் ஏற்பாடு செய்யப் போறேன். மரியாதையா இருடி, என்று சொல்லி விட்டு கீழே இறங்கி சென்றாள்.
அம்மா.இவள் அவசர அவசரமாக அபிமன்யுடம் வீட்டில் நடந்தவற்றை எல்லாம் குறுஞ்செய்தியாக போட்டாள். அடுத்த நாள் இருவரும் ஒரு இடத்தில் சந்தித்தார்கள். எனக்கும் எங்க மாமாக்கும் வீட்ல கல்யாண ஏற்பாடு செய்கிறார்கள். நான் என்ன செய்வது என்று கேட்டாள்.நீ பொறுமையா இரு நான் நாளைக்கு உங்க வீட்டிற்கு வந்து உன்ன பொண்ணு கேக்குறேன் என்றான் அபிமன்யு.
அடுத்த நாள் அபிமன்யு அவன் அப்பா, அம்மாவுடன் இவள் வீட்டிற்கு வந்தார்கள். ஆனால், அவள் அம்மா வோ, நீ கிறிஸ்தவன், நாங்களோ இந்து இது எப்படி நடக்கும். என் மகள் ஆசை நடக்காது என்று சொல்லிவிட்டாள்.
அடுத்த நாள் இவர்கள் இருவரும் ஒரு இடத்தில் சந்தித்து மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் ஆனால், நம் காதலுக்கு இல்லை என்று பேசினார்கள்.நீ இன்று இரவு 12 மணி போல் வீட்டை விட்டு வந்துவிடு நான் வெளியில் நிற்கிறேன் என்றான் அபிமன்யு.அவளும் தன் துணிமணிகளை எடுத்து வைத்துவிட்டு வீட்டை விட்டுவெளியேர தயாராக இருந்தாள்.
இவர்கள் இருவரும் சென்று திருமணம் செய்துக் கொண்டார்கள்.இப்போது, அந்தப் பெண்ணோ ஒரு மிகசிறந்த பேச்சாளராக திகழ்கிறாள். அனைவரும், காதல் என்பது தவறு என்று நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு அல்ல, காதலுக்கு ஜாதி, மதம் என்று எதுவும் கிடையாது. இப்போது அந்தப் பெண் தாயாகவும் இருக்கிறாள்.
அவள் பெயர் மிருதுலா. மகளின் பெயர் என்று இவள் இழுக்க.... குழந்தையோ தயாளினி என்று சொன்னது. ஆமாடி என்று குழந்தையை கட்டி அணைத்துக்கொண்டாள். என்னுடைய வெற்றிக்கு காரணம் உங்க அப்பா தான் தயாளினி என்று சொன்னாள் மிருதுலா
.இதெல்லாம் நடக்கும் என்று நான் சிறுவயதில் ஒன்றும் யோசித்ததில்லை. ஆனால், நடந்து விட்டது. இது தான் காலத்தின் கட்டாயம்.திருமணம் செய்தால் உங்கள் கனவை அடைய முடியாது என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு உங்கள் கனவை அடைய வேண்டும் என்ற இலட்சியம் இருந்தால் போதும். உங்கள் வீட்டில் உங்களுக்கு தூண்டுகோலாக உங்கள் பெற்றோர்கள் இருந்தார்கள் என்றால் திருமணம் ஆன பிறகு கணவன் இருப்பான் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.இந்தக் கதை உண்மையான காதலர்களுக்கும், திருமணம் ஆன பெண்களுக்கும் சமர்பிக்கிறேன்.






Users Today : 1
Total Users : 108814
Views Today : 1
Total views : 436850
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150