16 Mar 2024 8:19 pmFeatured

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மும்பை வருவதையோட்டி மும்பை புறநகர் திமுக செயலாளர்அலிசேக் மீரான் மற்றும் மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கருவூர் இரா பழனிச் சாமி அறிக்கை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை :
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மும்பை வருகை தர இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மும்பையில் நிறைவு பெறுகிறது .
கடந்த அறுபத்தி நான்கு (64) நாட்களாக நாடு முழுவதும் அவர் மேற்கொண்டிருந்த நடைபயணம் மும்பையில் வைத்து நிறைவடைவதையொட்டி இந்தியா கூட்டணி சார்பாக ஒரு மாபெரும் பேரணிப் பொதுக்கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க மும்பை தாதர் சிவாஜி பூங்கா மைதானத்தில் ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.
அந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் பங்கேற்க தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 17-ஆம் தேதி ஞாயிறு காலை 11.30 மணிக்கு விஸ்டாரா விமானம் மூலம் மும்பை T2 விமான நிலையம் வருகிறார்.
மும்பை வரும் திராவிட மாடல் அரசின் நாயகன், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற திமுக தலைவர் T.R.பாலு ஆகியோரை வரவேற்க கழக உடன்பிறப்புகள் தமிழ் அன்பர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு வருமாறு அன்போடு வேண்டுகிறோம். அத்துடன் அன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் திரளாக திமுக கொடிகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
தேர்தல் நிதி பத்திர முறைகேடு அம்பலமாகி, பாஜக கட்சி மக்கள் வெறுப்புக்கு உள்ளாகி உள்ள இந்த தருணத்தில் இந்தியா கூட்டணி சார்பாக மும்பையில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் திமுக தலைவர் தளபதி கலந்து கொள்ளும் பேரணியை மராத்திய மாநில அனைத்து கூட்டணி கட்சி தோழர்களும் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.
என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.






Users Today : 7
Total Users : 108820
Views Today : 7
Total views : 436856
Who's Online : 2
Your IP Address : 216.73.216.150
Sir, you will win and you are the winner
Good news.