26 Jan 2021 3:42 amFeatured

-பேரா.குருபிரசாத், பத்லாபூர்
வெள்ளயனை வெளியேற்றி
அந்நியரின் ஆட்சி அகற்றி
நமக்கென எழுதி உருவானது
மக்களாட்சி
வானத்தில் பறந்து விட்டோம்.
வண்ண நிலவை தொட்டு விட்டோம்.
வேற்றுமையிலும் வன்முறையிலும்
வளர்ந்து விட்டோம்.
முடியரசு பல வென்று
உருவாக்கியது இந்த
குடியரசு ஒன்று தானே
வர்ணங்கள் மூன்றானாலும் கொடி ஒன்றுதானே.
இங்கு மனிதர்கள் வேறானாலும்
நம் வேர் ஒன்று தானே.
நாம் பாரத மண்ணின் மைந்தர்களே.
மனிதரை மதிப்போம்
மக்களாட்சியை மலரச் செய்வோம்






Users Today : 5
Total Users : 108818
Views Today : 5
Total views : 436854
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150
Very nice keep itup God bless you