29 Apr 2020 5:29 pmFeatured

-வெங்கட், மும்பை
நீர் சூழல் மட்டுமல்ல ..
அடர்ந்த மௌனம் சூழ்
வீடுகளும் தீவே ...
வதிலையார் மன்ற படிவம்
வழங்காத நாளும்
மின்சார ரயில்கள்
முற்றிலும் நின்றதும்
வெவ்வேறு நிகழ்வல்ல
“அரசு இயந்திரம் முடங்கியது”
என்று
அறிவுறுத்தும் செய்தியது
வீட்டுச் சிறை
விரும்பிய வசதிகளுடன்
வாய்த்த போதும்
கூண்டுக் கிளியின்
குதூகலம் மட்டுமே..
அனிச்சையாய்
சுற்றி திரிந்த வீடு
மூச்சுக் காற்றுடன்
நகமும் சதையுமாய்
உறவாடுவது போன்ற
உணர்வு…
உழைத்து ஒய்வுக்காய்
ஏங்கிய கால்கள்
இன்று
ஒய்வின் சுகம்
வெறுத்து
ஒடத் துடிக்கின்றன.
நமது இரைச்சல்களில்
அமுங்கிப் போன
பறவைகளின்
சந்தோஷக் குரல்கள்
நாள் முழுதும்
என் ஜன்னல் நிறைத்து…
ஒரே ஒரு நாள்
தொலைக்காட்சி,இணையம்
இரண்டும் நிறுத்திவிட்டால்
“வாழ்தல்” வசப்படும்.






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90