09 Apr 2020 5:48 pmFeatured

கவிஞர் ஜேம்ஸ் அந்தோணி
பனங்கிழங்கொடித்து பானைப்
பதினியிட்டு பதம் பிடித்து உண்போம்
அருவிக்கரை இறால் பிடித்து ஆற்றாங்கரை
சம்பா சமைத்துண்டு மகிழ்வோம்
செங்கழனி ஒடை நண்டு பிடித்து
யானைக்கரையில் சுட்டுண்போம்
குறிஞ்சிகுளம் அல்லி பறித்து
அன்னம்மாளுக்கு மாலை தொடுப்போம்
பொன்னகரச் சந்தியிலே பொழுதிலே
பொங்கலிட்டு மகிழ்வோம்
நெல் வளமும் நெய் வளமும் பொங்கும்
தென் பாண்டிநாடே, நன் பாண்டிநாடே
கடல் பெருகி நதியுடைக்க நீரேறி
மதகு கடந்து மறுகாலேறி கருவிறால்
கால் வாயேறி கதலிப்பழம் சிதறடிக்க
தேன் சிட்டு சிலிர்த்து பறக்க தேன்
கூட்டில் குழல் பதித்து மதுரமுரிய
மல்லிகை மணம் பெருகும் தென்
பாண்டி சீமையே, எம் பாண்டி மண்ணே!






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90