18 Jan 2020 3:15 pmFeatured

(புதுக்கவிதை)
இரஜகை நிலவன், மும்பை
கொடு……
கொடுத்துக்கொண்டே இரு….
போடு…..
அள்ளிப் போடு….
திருப்தி கிடைக்கும்
என்று எதிர்பார்க்காதே!!!!!
இயலாதவன்…..
இன்னும்
இல்லாதவனுக்கு
கொடு….
இயலாதவனுக்கு
என்ன வேண்டும்
என்று கேட்டுக்
கொடு….
அறிவு இல்லாதவனுக்கு
இன்னும்..தெரியாததையும்
இல்லாததையும்
கற்றுக்கொடு!!!!!
கொடுங்கள்!!!!
உங்களுக்குக் கொடுக்கப்படும்!!!!!!
கொடுத்துக் கொண்டே இரு…..
எப்போதும் நிறுத்தாதே!!!!!!
கொடுப்பது எப்போதும்
கொடையாக இல்லாமல்
விரும்பும் செயலாக
இருந்தால்கூட போதும்…..
கொடுப்பது
மகிழ்ச்சி!!!!
அள்ளிப் போடு
எங்கிலும் கிடைக்காத
மகிழ்ச்சி!!!!
கிடைக்க வேண்டியநேரத்தில்
கிடைக்க வேண்டியதை
கொடு….
திருப்தி கிடைக்கும்…
இல்லாமலும்
இருக்கட்டும்..
உயிரையும் கொடு..
உண்மைக்காக
உயிர் நண்பனின்
உயர் நட்புக்காக……!!!!!!!!!!






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37