02 Aug 2020 3:29 pmFeatured

-கவிஞர் இரஜகை நிலவன், மும்பை
வாழக்கையின் வலிகளைச்
சொல்லித்தந்தவளுக்கு…..
இது தான் வாழ்க்கை
இதுதான் பயணம்…
என .. நிஜங்களைக்
கட்டியம் கூறியவளுக்கு..
என் கண்களைப்பார்த்து
நேருக்குநேர் பேசுவது …
பயமாகிப்போய்
விட்டதா?..
இல்லை..இதயத்தில்
பாறை வந்து
உறைந்துபோய்
விட்டதா?….
மண் பார்த்து…
நிலம் நோக்கி..
எப்போது பேசக்கற்றுக் கொண்டாய்…
யுவதியே..!!!!
நேர்படப் பேசுவதா?
நேர்மையைப்
பேசுவதா?
என யோசிக்கின்றாயா?
யாருக்கும் பயமின்றி பேசுவதை
தெள்ளத் தெளிவாகத்
துணிவாகப்
பேசச்சொல்லித்
தந்தவளா நீ என
இதயத்தை தட்டிக்கேட்கின்றேன்..
துவண்ட மனதில்
துள்ளலைத்தந்தவள் தூக்கத்தைக்
கலைத்து விட்டு
துக்கச்செய்தி சொல்லப் போகிறாயோ?
துள்ளும் மனதில்
சலளங்களை வீசி விட்டு.. கண்களைப்
பார்த்து
நேர்படப் பேசுவது
மறந்து விட்டு..
இன்னும் என்னச்
சொல்லப்போகிறாய்
விழியில் வழி
சொன்னவள்
விழி பிதுங்கி
நிற்க சொல்லப்
போகிறாயா?
வாழ்க்கை வழியில்
ஒதுங்கிப் போகச்
சொல்லப் போகிறாயா?






Users Today : 1
Total Users : 108814
Views Today : 1
Total views : 436850
Who's Online : 1
Your IP Address : 216.73.216.150