Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

ஆகாயத்தில்-8

29 Jul 2020 10:05 amFeatured Posted by: Sadanandan

You already voted!

கவிஞர் இரஜகை நிலவனின்
குறுந் தொடர் கதை
அத்தியாயம்-8

சுவேதாவும் சங்கரும் பெட்டிப் படுக்கைகளை டிராலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு வர ”மாமியார் சொன்னதெல்லாம் மனசிலே வைத்துக் கொண்டிருக்காமல் மாப்பிள்ளையோடு ஒழுங்காக குடும்பம் நடத்து. முடிஞ்ச வரைக்கும் குவைத்திலேயே இருக்கப்பார்.

இங்கே வந்து பெருசுகளோட சண்டை போட்டுக் கொண்டிருப்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கும்.” அம்மா உபதேசித்துக் கொண்டே வந்தாள்.

வாயில் வந்ததும் “போயிட்டு வாங்க மாப்பிள்ளை. கண்ணை துடைச்சுக்கோ” சுவேதாவின் அப்பா வழியனுப்பினார்.

குவைத் செல்லும் விமானம் ஏரக்குறைய ஒரு ராட்சஸ பறவையைப் போல விமானத்திற்கான இறைச்சலுடன் பயணத்திற்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

விமானப் பயணிகள் எல்லோரும் ஏறிவிட சுவேதா,சங்கர், குடும்பம் முன் வரிசையில் அமர, டாக்டரோடு பார்வதி அம்மாளும் உதவிக்கு ஒரு உதவி செவிலியும் அமர்ந்திருந்தனர்.

அமைச்சர் தமிழரசன் விமான டி.வி யைத் தவிர்த்து. குவைத்தில் இறங்கியதும் தமிழர் அமைப்பு ஒன்றில் பேசுவதற்கு குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, விமானி குமார் விமானி ப்ரேம் சந்தோடு சேர்ந்து விமானத்தை ஓட்ட ஆரம்பித்தான்.

ஸ்வேதாவும் அவள் கணவனும்  புத்தகம் புரட்ட ஆரம்பித்தனர்.

இனிகோ தங்களுடைய நாடகக்குழுவினர் எல்லோரும் அமர்ந்து விட்டர்களா என்று சரி பார்த்துவிட்டு நாடகத்திற்கான கத்தி, வாள், மகுடம் மற்றும் மன்னன் வேடத்திற்கான உடைகள் அடங்கிய பெட்டியை காலுக்குள் தள்ளி வைத்து விட்டு தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீர் குடித்தான்.

தேவ் தன்னுடைய முதல் இன்னிங்ஸை எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்பதை மனதால் பேட்டிங் செய்ய ஆரம்பித்தான்.

கடைசி நிமிடத்தில் வந்த மெரீனா பயந்து கொண்டே தன் பைகளை மெல்ல வைத்துக்கொண்டு அமர்ந்தாள்.

தேவ் தன் முதல் இன்னிங்ஸ் எப்படி ஆட வேண்டும் என்று யோசித்தவாறு கையிலிருந்த பேட்டை திருப்பி பார்த்துக்கொண்டு இருந்த போது பணிப்பெண் வாங்கி மேலே வைத்தாள்.

விமானப் பயணிகள் எல்லோரும் தங்கள் இடுப்பில் கட்டியிருந்த பெல்ட்டுகளை விடுவித்துக்கொள்ள, விமானம் நடுவானில் பறந்து  கொண்டிருந்தபோது, “ குமார் நாம் எல்லாவற்றையும் செக் பண்ணினோம் ஆனா இந்த திராட்டிலே மறந்திட்டோம். இது வேலை செய்ய மாட்டேங்குதே” என்றார் ப்ரேம் சந்த்.

     “ என்ன இதை செக் பண்ணாம….. மண்ணாங்கட்டி வேலையா பார்த்துக்கிட்டிருந்தீங்க..” என்று கத்தியவாறு, அசைத்துப்பார்த்தவர், “சரி” எல்லோரும் பரலோகம் போக வேண்டியது தான். காதரினைக் கூப்பிட்டு எமெர்ஜென்ஸி எக்சிட்டை திறக்கச்சொல்லி எல்லோரையும் பாராசூட்டை எடுத்துக்கிட்டு குதிக்கச் சொல்லி அறிவிக்கச்சொல்லுங்கள்” என்றார் மிகக்கோபமாக.

அவர் உள்ளேயிருந்து கத்திக்கொண்டிருக்க, திடீரென்று பயணிகள் பக்கமிருந்து, ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் எழுந்து கொண்டார்கள்.

 ”யாரும் அசையக் கூடாது. விமானி குமார் தலையில் குறி வைத்து எங்கள் நண்பன் துப்பாக்கியோடு அமர்ந்திருக்கிறான். இந்திய அரசாங்கம் எங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால் நாங்கள் இந்த விமானத்தைக் கடத்துகிறோம்” என்றனர்.

விமானம் ஆட ஆரம்பித்தது.

முற்றும்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092531
Users Today : 5
Total Users : 92531
Views Today : 7
Total views : 410194
Who's Online : 0
Your IP Address : 3.19.211.134

Archives (முந்தைய செய்திகள்)