25 Sep 2019 9:42 amFeatured

இந்திய சினிமா துறையின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, மராட்டிய மாநில அரசின் விருதுகள் மற்றும் மத்திய அரசின் தேசிய விருதுகளை பலமுறை பெற்றுள்ளார்.
விருது பெற்ற முன்னோர்கள்
முன்னதாக பழம் பெரும் பாலிவுட் நடிகர்கள் திலீப்குமார், சசிகபூர், உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர். தமிழகத்தில் நடிகர் சிவாஜி கணேசன், இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாதா சாகேப் விருதுக்கு அமிதாப் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், பிரமுகர்கள், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






Users Today : 1
Total Users : 111143
Views Today : 1
Total views : 439532
Who's Online : 0
Your IP Address : 216.73.216.138