Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

உலகத்தரத்துடன் இந்தியாவில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ். காந்தேரி நீர்மூழ்கி போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.

29 Sep 2019 1:05 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

ஸ்கார்பியன்' வகை நீர்மூழ்கி கப்பல்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த வகை நீர்மூழ்கி கப்பல்கள் ‘கல்வாரி’ என்று அழைக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு ஒத்துழைப்புடன் 6 கல்வாரி வகை நீர்மூழ்கி போர்க்கப்பல்களை உள்நாட்டில் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.

முதல் கப்பல் கல்வாரி

அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு  ஐ.என்.எஸ். கல்வாரி என்ற முதல் நீர்மூழ்கி போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படையில் இணைத்தார்.

இரண்டாவது கப்பல் காந்தேரி

2-வது கல்வாரி வகை நீர்மூழ்கி கப்பலின் பெயர் ஐ.என்.எஸ். காந்தேரி. மும்பை மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில்கட்டப்பட்ட உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கி போர்க் கப்பலான இதன் எடை 1,615 டன் ஆகும். 221 அடி நீளமும், 40 அடி உயரமும் கொண்டது.

இந்த போர்க்கப்பல் கடலுக்கு அடியில் மணிக்கு 37 கிலோ மீட்டர் (20 கடல் மைல்) வேகத்திலும், கடல் மேற்பரப்பில் 20 கிலோ மீட்டர் (11 கடல் மைல்) வேகத்திலும் இயங்க கூடியது. இந்த நீர்மூழ்கி கப்பல் கடலுக்குள் இருந்தபடியும், கடலின் மேற்பரப்புக்கு வந்தும் எதிரிகளின் கப்பல்களை ஏவுகணையை வீசி தாக்கும் திறன் கொண்டது. எதிரி கப்பல்களின் கண்ணுக்கு புலப்படாமல் தாக்கும் வல்லமை கொண்டது என்பதுடன் இந்தக் கப்பல் பேட்டரியிலும், டீசலிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு. வெற்றிகரமாக சோதனை ஓட்டத்தை முடித்த நிலையில், இக்கப்பலை கடற்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று மும்பை கடற்படை தளத்தில் நடந்தது.

விழாவில் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். காந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல ஐ.என்.எஸ். நீல்கிரி என்ற போர்க்கப்பலை சோதனை ஓட்டத்துக்காக ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து விழாவில் பேசிய ராஜ்நாத் சிங்,

உள்நாட்டில் சொந்தமாக நீர்மூழ்கி கப்பல்களை கட்டமைக்கக்கூடிய உலக நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இது பெருமைக்குரிய விசயம். இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சியான பயங்கரவாத ஊடுருவல் நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை முறியடிக்கும் வகையில் கடினமான முடிவுகளை எடுக்க நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம்.

கடல் வழி வர்த்தகத்தில் நாம் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். அதே அளவுக்கு கடற்கொள்ளை அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை உணர்ந்து நாம் கடற்படையை வலிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதேநேரத்தில் சமீப காலமாக அரபிக்கடல் பகுதியில் கடற்கொள்ளை பெருமளவு குறைந்துள்ளது. இதற்காக கடற்படைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092648
Users Today : 26
Total Users : 92648
Views Today : 32
Total views : 410391
Who's Online : 0
Your IP Address : 3.21.46.181

Archives (முந்தைய செய்திகள்)