01 Sep 2019 1:43 pmFeatured

தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்..
கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப் பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன் 2014 ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வந்தார். அவரது மாநில தலைவர் பதவி வரும் டிசம்பர் மாதத்தோடு முடிவுக்கு வரும் நிலையில் அவர் தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்னை தெலுங்கானா மாநிலத்துக்கு ஆளுனராக தேர்ந்தெடுத்த பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பாஜகவிற்கு நான் பணியாற்றுவேன்.
இந்தநேரத்தில் என் பெற்றோர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறேன். கடும் உழைப்பிற்கு பாஜக அங்கீகாரம் தரும் என்று நிரூபித்திருக்கிறார்கள். என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை தந்த மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டாவிற்கு எனது நன்றி எனக் கூறியுள்ளார்.
இடைக்கால தலைவராக யாரேனும் நியமிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, பின்னர்தான் பதில் தெரியும் என பதிலளித்தார்.






Users Today : 24
Total Users : 106634
Views Today : 25
Total views : 434384
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1