24 Jun 2023 12:06 amFeatured

கவியரங்கம் - பட்டிமன்றம் - இசையரங்கம் நிகழ்ச்சி
மும்பை: மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்தும் கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் பட்டிமன்றம், கவியரங்கம், இசையரங்கம் நிகழ்ச்சி 25-06-2023 அன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை முலுண்ட் மேற்கு ஆஸ்தா மருத்துவமனை அருகே உள்ள (91/2 முலுண்ட் காலனி) பம்பாய் நகரத்தார் சமூக மற்றும் கலாச்சார சங்க அரங்கில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் எழுத்தாளர் மன்ற புரவலர் சேதுராமன் சாத்தப்பன் தலைமை தாங்க, தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரையாற்றுகிறார். அவரை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் அலிசேக் மீரான் மகிழ்ச்சி உரையாற்றுகிறார். முன்னதாக ஆட்சிமன்ற குழுவை சேர்ந்த கு.மாரியப்பன் வரவேற்புரையாற்றுகிறார். மேலும், மும்பை பிரபலங்கள் பலரும் முன்னிலை வகிக்கிறார்கள்.
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவரும், திரைப்பட இயக்குனருமான முனைவர் யார் கண்ணன் நடுவராக கலந்து கொள்கிறார்.
பட்டிமன்றம்
கவியரசு கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா? காதலா? பாசமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது. தத்துவமே என கல்வியாளர் அமலா ஸ்டேன்லி, நற்றமிழ் நாவரசி பிரவினா சேகர், கவிஞர் இரா. முருகன் ஆகியோரும், காதலே என சொற்போர் திலகம் புவனா வெங்கட், செல்லேருவழர் மிக்கேல் அந்தோணி, நிர்வாகக்குழு செயலாளர் வே. சதானந்தன் ஆகியோரும், பாசமே என உரைத்தென்றல் கி.வேங்கடராமன், முன்னணி பேச்சாளர் மீனாட்சி முத்துகுமார், செல்வி யாமினிஸ்ரீ குணசேகரன் ஆகியோரும் வாதிடுகிறார்கள்.
கவியரங்கம்
இதனைதொடர்ந்து கவியரங்கம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ’கண்ணதாசன் ஓர் ஆசான்’ என்ற தலைப்பில் பாவலர் முகவை திருநாதன், கண்ணதாசன் ஒரு சகோதரன் என்ற தலைப்பில் கவிஞர் இரஜகை நிலவன், கண்ணதாசன் ஒரு காவலன் என்ற தலைப்பில் கவிஞர் வ.ரா தமிழ்நேசன், கண்ணதாசன் ஒரு மாணவன் என்ற தலைப்பில் கவிஞர் சாந்தாராம், கண்ணதாசன் ஒரு தோழன் என்ற தலைப்பில் கவிஞர் வெங்கட் சுப்ரமண்யன், கண்ணதாசன் ஓர் இறைவன் என்ற தலைப்பில் கவிஞர் ஆறுமுகப்பெருமாள், கண்ணதாசன் ஒரு காதலன் என்ற தலைப்பில் கவிஞர் இராமர் பாஸ்கரன், கண்ணதாசன் ஒரு வழிகாட்டி என்ற தலைப்பில் கவிஞர் சே.குணவேந்தன், கண்ணதாசன் ஒரு தூதுவன் என்ற தலைப்பில் தொல்காப்பியன் சிவராசன் ஆகியோர் கவி பாடுகிறார்கள்.
இசை அரங்கம்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவு நடத்தும் இசை அரங்கம் நடைபெறுகிறது.
காலத்தை வென்ற கவிஞன் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த இசை அரங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் டி.எம்.எஸ் நரசிம்மன், துணை ஒருங்கிணைப்பாளர் இசையமுது வாணிஸ்ரீ, பாடகர்கள் மல்லிகா, லதா சுரேஷ் மற்றும் இசை அமைப்பாளர் ஆர்.டி ராஜன் குழுவினர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
நூல் அறிமுகம்
நூலாசிரியர் கவிஞர் பாபுசசிதரன் எழுதிய ‘கதவுகள்’ என்ற நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நூலை கவிஞர் முருகன் ராஜன் திறனாய்வு செய்கிறார்.
நெறியாள்கையை திரைப்பட நடிகை டி.பிரியாவும், நற்றமிழ் நாவரசி பிரவினா சேகர் ஆகியோர் கையாள்கின்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நிர்வாக குழு துணைச்செயலாளர் தேவராசன் புலமாடன் நன்றி கூறி நிறைவு செய்கிறார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தமிழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் 68வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37