Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்தும் கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள் – பட்டிமன்றம்

09 Nov 2019 7:29 pmFeatured Posted by: Dhanam

You already voted!

          தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கின்றது.
         முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் வைத்து நாளை ஞாயிறு மாலை 6 மணியளவில் மன்றத்தின் செயலாளர் அமலா ஸ்டான்லி தலைமையில் நடக்கவிருக்கின்ற நிகழ்வில் கவியரசரின் திருவுருவப் படத்தை மன்ற ஆலோசகர் கே.ஆர்..சீனிவாசன் திறந்து வைக்கின்றார். மன்ற ஆலோசகர் ஞான. அய்யாபிள்ளை வரவேற்புரையாற்ற மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரையாற்றுகிறார்.

தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்ற மன்றத்தின் இலக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து தமிழ்க் கலை இலக்கிய உலகத்தில் தனக்கென தனியிடத்தைப் பிடித்து தனித்து வாழ்ந்து மறைந்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் மக்கள் மனங்களில் பெரிதும் விஞ்சி நிற்பது தத்துவப் பாடல்களா! காதல் பாடல்களா ! சோகப் பாடல்களா! என்ற தலைப்பில் நடைபெறவிருக்கின்ற பட்டிமன்றத்தை மன்றத்தின் புரவலர் அலிசேக் மீரான் நடுவராகப் பொறுப்பேற்று நடத்தி வைக்கின்றார்.

தத்துவப் பாடல்களே! என்ற தலைப்பில்
அணித் தலைவர் மிக்கேல் அந்தோணி,  மீனாட்சி முத்துக்குமார் மற்றும் வே.சதானந்தன் ஆகியோரும்
காதல் பாடல்களே! என்ற தலைப்பில்
அணித் தலைவர் புவனா வெங்கட், கவிதா ராஜா மற்றும் வெங்கட் சுப்பிரமணியன் ஆகியோரும்
சோகப்  பாடல்களே! என்ற தலைப்பில்
அணித் தலைவர் கவிஞர்.வ.இரா.தமிழ்நேசன், பாவலர் நெல்லை பைந்தமிழ் மற்றும் சுப சத்யா வசந்தன் ஆகியோரும் வாதிடவிருக்கின்றார்கள்.

          நிகழ்ச்சியை மன்றத்தின் துணைப்  பொருளாளர் கவிஞர் அந்தோணி ஜேம்ஸ் தொகுத்து வழங்குகின்றார். இறுதியில் மன்றப்  பொருளாளர் அ .இரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றுகின்றார்

மன்றப்  புரவலர்களும், ஆலோசகர்களும், அங்கத்தினர்களுமான சேதுராமன் சாத்தப்பன், மெய்யப்பன், கருவூர் பழனிச்சாமி, பாவலர் முகவை திருநாதன், வே.பாலு, பாவலர் ஞாயிறு இராமசாமி,  கவிஞர் ஜி.வி.பரமசிவம், கவிஞர் .இரஜகை நிலவன், ந.வசந்தகுமார், பொற்செல்வி கருணாநிதி, கு,மாரியப்பன் , ஆறுமுகப்பெருமாள், சுந்தரி வெங்கட்,  பேரா.பத்மாவதி சீனிவாசன், அனிதா டேவிட், தி.அப்பாதுரை, திருநாவுக்கரசு, கொ.வள்ளுவன்,எஸ். தாசன், ஜான் சாமுவேல்,,கனகசபை, மெஹபூப் பாஷா, பாலமுருகன், அ.பாலசுப்ரமணியன்,'வணக்கம்  மும்பை' ஜெயா ஆசிர் எல்.பாஸ்கரன்  'தமிழறம்' இராமர், கவிஞர் பாபு சசிதரன், பு.தேவராஜன், காரை.இரவீந்திரன்,முனைவர் வைத்திலிங்கம், பிரவினா சேகர், செல்வி ராஜ்,  கைலாச கணபதி, கலைச்செல்வி இளைய பொற்கோ கோபால் எல்.ஐ.சி. மகேசன் எல்.ஐ..சி. ராஜமாணிக்கம்,கவிஞர் இறைசா. ராஜேந்திரன், தமிழ்மணி பாலா, மகேந்திரன், .தா.சே.குமார், வேலையா, மருத்துவர் மூர்த்தி,  எஸ்.பெருமாள், சமீர் சமீரா, எஸ்.பொன்னப்பன்,  சரத்பாபு,  எல். & டி  சிவா டி.சி.எஸ்,. .அறச்செல்வன் அஞ்சாமை ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்கின்றனர்.

          மும்பையின் பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்களான  கே.வி.அசோக்குமார்,பி.கிருஷ்ணன்,மா.கருண், டி.என்.முத்துக்கிருஷ்ணன், அ.இளங்கோ,  சுப்ரமணியன் - முலுண்ட்,  எஸ்.பி.செழியன்,  எஸ்.பி.குமரேசன்,  இராஜா  உடையார்
,செ. அப்பாதுரை,.அப்பாதுரை, சோ.பா.குமரேசன்,  வீரை சோ.பாபு, சைனுலாபிதீன்,முத்தமிழ் தண்டபாணி, காசிராஜன், வேல்முருகன் - எம்.என்.நரசிம்மன், அஞ்சனா, இரா.கணேசன், ம.பரமசிவம், டாக்டர் கோவிந்தசாமி, மொஹம்மத் அலி, கவிஞர் தமிழ் மாறன், முஸ்தாக் அலி, அப்துல் லதீப்,,  மொஹம்மத் அலி,  அருணாச்சலம்,  பாண்டுப் முருகேசன், திவா முருகேசன், முஸ்தாக் அலி,  பேரா.சம்பத் வள்ளியூர் மணி, லத்தீப் மொஹம்மத் வினோத் கல்வா, தமிழரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்கின்றனர்.
          கவியரசரின் பாடல்களில் மனம் விரும்புபவர்கள்  அனைவரும் தவறாது நிகழ்வில் கலந்துகொண்டு மும்பையின் மிகச் சிறந்த பேச்சாளர்கள் உரையாற்றும் பட்டிமன்ற உரைகளை கேட்டு மகிழும்படி நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092649
Users Today : 27
Total Users : 92649
Views Today : 33
Total views : 410392
Who's Online : 0
Your IP Address : 18.218.81.166

Archives (முந்தைய செய்திகள்)