Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள் – பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது

12 Nov 2019 10:40 amFeatured Posted by: Sadanandan

You already voted!

          தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாக கவியரசர் கண்ணதாசன் நினைவலைகள் பட்டிமன்ற நிகழ்ச்சி முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் வைத்து ஞாயிறு (10.11.2019) அன்று மாலை 6 மணியளவில் மன்றத்தின் செயலாளர் அமலா ஸ்டான்லி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கவியரசரின் திருவுருவப் படத்தை மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன் திறந்து வைத்தார். மன்ற ஆலோசகர் ஞான. அய்யாபிள்ளை வரவேற்புரையாற்ற மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரையாற்றினார்.

பட்டிமன்றம்

         தொடர்ந்து நடைபெற்று வருகின்ற மன்றத்தின் இலக்கிய நிகழ்வுகளின் தொடர்ச்சியாக தமிழ்க் கலை இலக்கிய உலகத்தில் தனக்கென தனியிடத்தைப் பிடித்து வாழ்ந்து மறைந்த கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் மக்கள் மனங்களில் பெரிதும் விஞ்சி நிற்பது தத்துவப் பாடல்களா! காதல் பாடல்களா ! சோகப் பாடல்களா! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது

தத்துவப் பாடல்களே! என்ற தலைப்பில் அணித் தலைவர் மிக்கேல் அந்தோணி,  மீனாட்சி முத்துக்குமார் மற்றும் வே.சதானந்தன் ஆகியோரும் காதல் பாடல்களே! எனும் தலைப்பில் அணித் தலைவர் புவனா வெங்கட், கவிதா ராஜா மற்றும் வெங்கட் சுப்பிரமணியன் ஆகியோரும் சோகப்  பாடல்களே! என்ற தலைப்பில் அணித் தலைவர் கவிஞர்.வ.இரா.தமிழ்நேசன், பாவலர் நெல்லை பைந்தமிழ் மற்றும் சுப சத்யா வசந்தன் ஆகியோரும் சிறப்பாக வாதாடினார்கள்.

நடுவர் அலிசேக் மீரான்

மன்றத்தின் புரவலர் அலிசேக் மீரான் நடுவராகப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வைத்தார்.  கண்ணதாசனின் காதல் பாடல்கள், சோகப் பாடல்களைவிட காலங்களை கடந்து மக்களின் மனதில் விஞ்சி நிற்பது தத்துவப்பாடல்களே என்ற தீர்ப்பினை வழங்கினார்

          நிகழ்ச்சியை மன்றத்தின் துணைப்  பொருளாளர் கவிஞர் அந்தோணி ஜேம்ஸ் தொகுத்து வழங்க இறுதியில் மன்றப்  பொருளாளர் அ .இரவிச்சந்திரன் நன்றியுரை ஆற்றினார்.
          முன்னதாக, சமீபத்தில் மறைந்த பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிறுவனரும் செயலாளருமான கல்வித் தந்தை தேவதாசன் அவர்களின் மறைவையொட்டி மன்றத்தின் நலன்கருதி அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
          மன்ற  நிர்வாகிகளும் அங்கத்தினர்களுமான பொற்செல்வி கருணாநிதி, கு,மாரியப்பன் , திருநாவுக்கரசு,  மெஹ்பூப் பாஷா சேக், பாலமுருகன், 'தமிழறம்' இராமர், பிரவினா சேகர், மகேசன் எல்.ஐ.சி.  எஸ்.பெருமாள், ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
          மும்பையின் பல்வேறு தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்களான பெ.கணேசன்,அ .இளங்கோ, சுப்ரமணியன்-முலுண்ட், வீரை சோ.பாபு,  அ.கண்ணன்,விஜயகுமார் மலாட்,அருணாச்சலம்,சசி அருணாச்சலம்,  பாண்டுப் முருகேசன்,தோ.செ.கருணாநிதி, பெ.இராமானுஜம், ரா.வசந்தன், ஜி.குணசேகரன், மு.சதாசிவம், சு.முத்துக்குமார்,  மி.அப்துல் லத்தீப், நஹிமா பானு, அ.அனிஸ் பாத்திமா, பவுல் சத்தியராஜ் போன்றோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092625
Users Today : 3
Total Users : 92625
Views Today : 3
Total views : 410362
Who's Online : 0
Your IP Address : 18.219.73.146

Archives (முந்தைய செய்திகள்)