Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம்

25 Aug 2021 12:01 pmFeatured Posted by: Admin

You already voted!
கருணாநிதி நினைவிட மாதிரி வடிவமைப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் 2.21 ஏக்கரில் நினைவிடம் கட்டப்படுமென்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ. 39 கோடியில் உதய சூரியன் வடிவத்தில் அமையவிருக்கும் இந்த நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவில் பெரிய தூணும் அமைக்கப்படும். கலைஞர் கருணாநிதி ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை நினைவு கூறும் வகையில் இந்த பேனா வடிவிலிருக்கும் தூண் இருக்குமென்று சொல்லப் படுகிறது.

கலைஞரின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும் சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று வணங்கி விட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
நெல்லை பைந்தமிழ்
நெல்லை பைந்தமிழ்
4 years ago

எவருக்கெல்லாமோ நினைவிடம் உள்ளது. மக்களுக்காக வாழ்ந்த தலைவர் கலைஞருக்கு நினைவிடம் என்பது வரலாற்றில் தேவையான ஒன்று.

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

104998
Users Today : 23
Total Users : 104998
Views Today : 33
Total views : 432188
Who's Online : 0
Your IP Address : 216.73.216.111

Archives (முந்தைய செய்திகள்)