Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

படைப்பு குழுமத்தின் சிறந்த படைப்பாளர் பரிசு- மும்பை கவிஞருக்கு

11 Sep 2019 7:34 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

படைப்பு குழுமத்தின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை அரசு அருங்காட்சி அரங்கத்தில் நடைபெற்றது. கல்கி துணை ஆசிரியர் அமுதன் சூர்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க செய்தி பிரிவு செயலாளர் தமிழன் பிரசன்னா,  கவிஞர் விக்ரமாதித்யன், ஓவியக் கவிஞர் அமுத பாரதி, கவிஞர் இந்திரன், எழுத்தாளர் பவா செல்லத்துரை உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். விழாவில்  கவிதை, கட்டுரைகள் அடங்கிய 16 நூல்கள் வெளியிடப்பட்டது. மேலும் பல கவிஞர்களும் "கவிச்சுடர்" உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டதோடு "சிறந்த படைப்பாளி"க்கான சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மும்பை கவிஞர் வ.இரா.தமிழ்நேசன்

மும்பை கவிஞர் வ.இரா.தமிழ்நேசனுக்கு ஜனவரி-2019 "சிறந்த படைப்பாளி" சான்றிதழும் , பரிசும் படைப்பு குழுமத்தின் சார்பாக இயக்குநர் லிங்குசாமி மற்றும் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா வழங்கினர். மும்பை கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் மும்பை புறநகர் மாநில திமுகவின் இலக்கிய அணி அமைப்பாளரும், ஜெரிமரி தமிழ்ச் சங்க மேனாள் நிர்வாகிகளில் ஒருவருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது

விழாவை படைப்பு குழு அமைப்பாளர் கவிஞர் ஜின்னா ஆஸ்மி மற்றும் படைப்பு குழுமத்தைச் சேர்ந்தவர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

118872
Users Today : 13
Total Users : 118872
Views Today : 15
Total views : 449974
Who's Online : 0
Your IP Address : 18.97.9.172

Archives (முந்தைய செய்திகள்)