01 Jun 2019 8:36 amFeatured


புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தாதர் சுவாமி நாராயண் கோவிலில் இருந்து புறப்பட்ட சிவாஜி பார்க் வரை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
புகையிலையால்
ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டினை
குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக
புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் புகையிலை எதிர்ப்பு தினத்தின்
மையக் கருத்து 'புகையிலை
மற்றும் நுரையீரல்' என்பதாகும்.
புகைப்பது ஒரு தவறான பழக்கம் இதனால் உடல்நலம் கெடுவதோடு பணமும்
வீணடிக்கப்படுகிறது.
இதனால் புகையிலை பயன்படுத்துவரின் குடும்பமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. புகைபிடிப்பவருக்கு பாதிப்பு ஏற்படுவதோடு
மட்டுமின்றி அருகில்
இருப்பவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில்
தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு, இதய நோய் உள்ளிட்ட
பல நோய்கள் ஏற்படுகிறது.
இந்த புகையிலை பயன்பாட்டால் உலகில் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 10 லட்சம் பேர் புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள். இந்தியாவில் புகையிலையால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. மேலும் 10 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களில், 6.25 லட்சம் பேர் தினமும் சிகரெட் புகைத்து வருகின்றனர். ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. மேலும் அதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான் புகைப்பவர்களை அடிமையாக்குகிறது.
நேற்று நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ‘மது, புகையிலை போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள் என்ற வாசகம் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊர்வலமாக நடந்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






Users Today : 5
Total Users : 108818
Views Today : 5
Total views : 436854
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150