04 Mar 2025 10:46 pmFeatured
மும்பை மாநகர் திமுக சார்பில் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்த நாள் விழா 1.03.2025 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் மும்பை திமுக தலைமை பணிமனை கலைஞர் மாளிகை, தாராவியில் பொறுப்பாளர் கருவூர் இரா.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், மும்பை. திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன், அவைத்தலைவர் திரு வே.ம.உத்தமன், மூத்த தலைவர் திரு என்.வி.சண்முகராசன், தானே கே.ஏ. ஜாகிர் உசேன், வக்கோலா கிளைச்செயலாளர் சேலம் மா. சீனிவாசன்,மலபார் குன்று செயலாளர் சேரை பிரகாஷ் மும்பை திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு அமரன் உத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொய்சர் க.மூர்த்தி,ஸ்டிபன் ஜெபராஜ், க.இராசன், சி.பாண்டியன், வெங்கடேஷன், மகாவிஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.
விழாவில் ஏழைத் தாய்மார்களுக்கு அத்தியாவிசய உணவுப்பொருள்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை அடங்கிய பைகள் இலவச நல உதவி்களாக
புஷ்பா, ஸ்மிதா, சுமன் சிர்கே, எஸ்.மல்லிகா, அருள்ஜோதி, அமுதா, சந்தாராம், லட்சுமி பாரட், சுசிலா, சிந்தோ, சலபாய் நாராயண்கர், அமுந்தா பர்மர், காந்தி சவுர், நக்மாகான், லலிதா பால் ஆகியோருக்கு வழங்கப்பட்டது