15 Jan 2020 12:38 amFeatured

பம்பாய் திருவள்ள்ளுவர் மன்றம், பிரைட் மேல்நிலைப்பள்ளியில் 16.01.2020 வியாழக்கிழமை அன்று பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் தின விழாவினை நடத்தவிருக்கிறது.
அன்று காலை 9 மணிக்கு பிரைட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து வளாகத்தில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.
இந்நிகழ்வில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மு.கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் சான்றோர் பெருமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி பம்பாய் திருவள்ளவர் மன்ற தலைவர் டி.சிங்காரவேலன், பொதுச்செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன், பொருளாளர் ஜெகதீசன், பிரைட் மேல்நிலைப்பள்ளி முதல்வர் செலின் ஜேக்கப்,, இன்பென்ட் ஜீசஸ் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸ்டினா ஜேம்ஸ் ஆகியோர் கேட்டுக்கொள்கிறார்கள்






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37