Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தாகம் தீர்ந்தது – முகம்மது முஃபாரிஸ் .மு

13 Feb 2022 11:12 pmFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures thagam

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-31
படைப்பாளர் - முகம்மது முஃபாரிஸ் .மு

கோடை எந்த இடத்திலும் தண்ணீர் கிடைக்கவில்லை ,அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் எங்கெங்கேயோ சென்று பாட்டில்களில் தண்ணீரை வாங்கி வந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அதற்கும் மிகவும் தட்டுப்பாடு  இரண்டு நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்தால்  தான் மூன்றாம் நாள் தண்ணீர் கிடைக்கும். .

பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் மிடில் கிளாஸில்  இருப்பவர்கள் ,மாத வருமானத்தில் தண்ணீருக்கு என ஒரு பெருந்தொகையை  அவர்கள் செலவு செய்ய வேண்டி இருந்தது..அந்த சமயம்  எல்லோரும் தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருந்தனர்... கால சூழ்நிலை, மற்றும் தட்ப வெப்பநிலை, உலக வெப்பமயமாதல் நிலத்தடி நீரின் அளவை குறைத்து உள்ளது.. கடந்த இரண்டு வருடங்களாக பருவ மழை  இல்லாமல் பொய்த்து போனதும் இதற்கு ஒரு காரணம் ..

எட்டு வயதாகும் மீனா, தனது பெற்றோருடன் அந்த  அடுக்குமாடி குடியிருப்பின் 8வது தளத்தில் வசித்து வருகிறாள் ...அவளுடைய பொழுதுபோக்கு,தினமும் பால்கனியில் நின்று கொண்டு அங்கே செல்லும் வாகனங்கள்,  மனிதர்கள் என அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பதுதான்..  நாளடைவில் அது அவளின் அன்றாட செயல்களில் ஒன்றாக மாறிவிட்டது .. இப்போது கொரோனா ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது,  அதிலும் குறிப்பாக சிறுபிள்ளைகள் அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து வெளியே செல்ல அனுமதி இல்லை , வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டியதாயிற்று மீனா போன்ற சிறு பிள்ளைகளின் வாழ்க்கை ..

அவளுடைய ஆன்லைன் வகுப்பு  காலையில் மூன்று மணி நேரம் ,  மதியம் இரண்டு மணி நேரம் போக,மீதி நேரங்களில் பால்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள் .. அப்போது ஒரு நாள், ஒரு குருவி ஒன்று அங்கும், இங்கும் பறந்து ,அலைந்து திரிவதை  பார்த்தாள் மீனா ,   அது ஒரு நல்லவிதமாக சுறுசுறுப்புடன்  இல்லாமல் மிகவும் சோர்வுடன் இருப்பதையும் உணர்ந்தாள் .. அது ஒரு மரக்கிளை, அருகே உள்ளே பால்கனி, மீண்டும் மற்றொரு இடம் என மாறி மாறி, பறந்து கொண்டு இருந்தது....."மீனா...குருவி தண்ணீரை தேடி அலைந்து கொண்டிருந்தது என்பதை அறிந்து" , உடனே உள்ளே சமையலறை நோக்கி ஓடினாள்.. ஒரு சிறிய அகன்ற வாய் உடைய பாத்திரத்தில்  தண்ணீரை ஊற்றினாள் .. தன் அம்மா பார்க்கதவாறு மறைத்து எடுத்து வந்து பால்கனியில் வைத்தாள் மீனா, அவள் உள்ளே போய்  மறைந்து கொண்டாள் ,  ஒரு அரைமணி நேரம்  சென்று இருக்கும்   அந்த குருவி வந்து நீரை அருந்தியது.. மீனாவுக்கு மிகுந்த சந்தோசம் ,  மத்தாப்பு பூத்தாற்போல என்று சொல்வார்களே அதுபோல அவள் முகம் முழுவதும் ஒரு ஆனந்தம் ...

இரண்டாவது நாள், அதை போல தண்ணீர் வைத்து விட்டு மறைந்து கொண்டாள் மீனா, இன்று அவளுக்கு  இரட்டிப்பு சந்தோசம்,  இன்று இரண்டு குருவிகள் வந்து நீரை அருந்தியது , இப்படியே இதுவும் அவளது தினசரி வாடிக்கையாகிவிட்டது ..  இப்போது வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் சீக்கிரம் குறைவதை  கவனித்து கொண்டு இருந்த மீனாவின் அம்மா,  ஒரு நாள்  மீனா தண்ணீரை மறைத்து எடுத்து செல்லும் பொது கையும் களவுமாக பிடிபட்டாள் ...

"மீனா, அப்பா மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் வாங்கி வருகிறார் , நீ தினமும் இப்படி செய்து கொண்டு இருக்கிறாய்" ..  என்று கேட்க, என்ன  பழக்கம் இது தினமும் தண்ணீரை எங்கே எடுத்து சென்று வீணடித்து கொண்டு இருக்கிறாய்.. நாம் தண்ணீர் இல்லாமல் எவ்வளவு சிரமப்பட்டு கொண்டு இருக்கிறோம்.. என கோவமாக பேசினாள் மீனாவின் அம்மா...

அம்மா,  நான் செய்வது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள், நான் உங்களுக்கு தெரியாமல், தண்ணீரை எடுத்து வீணடிக்கவில்லை , குருவிகளுக்காக தான் நான் தண்ணீரை எடுத்து செல்கிறேன், என்று கூறினால் மீனா..அந்த சிறு குருவி எங்கே போய்  பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியும், நம்மை போன்றவர்கள் கொடுத்தால் தான் , இல்லையேல் அந்த இனமே அழிந்து விடும் என்று கூறினாள்,  மீனா .... மீனாவின் இந்த  பேச்சை அவளது அம்மா சற்றும் எதிர்பாக்கவில்லை , உடனே அவளை கட்டி அணைத்து பாராட்டினாள் ,மீனாவின் செயலை நினைத்து பெருமிதம் அடைந்தாள் அவளின் அம்மா..  அலுவலகம் முடிந்து மீனாவின் அப்பா வீட்டிற்கு வர, மாலை நடந்த விஷயத்தை  அவரிடம் சொன்னார், மீனாவின் அம்மா.. மீனாவின், அப்பாவும் அவளை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் , மீனாவின் இந்த தினசரி செயலை , குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது மற்றும் அவை அதை பருகுவதை வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டார் ...  இதை பார்த்த அனைவரும் , இந்த வயதில் மீனாவின் செயலை பாராட்டினர் ..

மீனாவின் செயலை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் தங்களால் முடிந்த அளவு தண்ணீரை ஒரு கோப்பையிலோ அல்லது சிறிய தட்டில் ஊற்றி அவர்களுடைய பால்கனியில் வைத்தார்கள்.. இதனால் பல குருவிகள் ,பறவைகள் தங்களுக்கான தண்ணீரை பெற்றன.. இதனால்  அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் , குருவி  மற்றும் பறைவைகளின் வாழ்வாதாரமாக மாறியது.. எப்போதும் வாகன இரைச்சல் நிறைந்த அந்த வளாகம் பறைவைகளின்  இன்னிசையில் மிதந்தது ...

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092527
Users Today : 1
Total Users : 92527
Views Today : 1
Total views : 410188
Who's Online : 0
Your IP Address : 3.147.54.6

Archives (முந்தைய செய்திகள்)