Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அவசர கால தர்மம் – பா.நூருல்லா

12 Feb 2022 2:00 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures noorulla

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-28
படைப்பாளர் - பா.நூருல்லாஹ், மதுரை

குரு கோயில் வாசலில் புலம்பிக் கொண்டு இருந்தான். தம்பி இங்க எதுக்கு கத்திக்கிட்டு இருக்க உள்ள போ! பகவான் கிட்ட சொல்லு இல்ல வேற எங்காவது போ என்றார் பூசாரி. நா எங்க இருந்தாலும் ஏதாவது சொல்ல வந்துருங்க போங்க சாமி உங்க வேலைய பாருங்க  எனக்கு தான் வேலை இல்லை என்றான் குரு.

வேலை கிடைக்காத கவலையில் எல்லோரிடமும் சண்டை போடுவது என இருந்தான்.

அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பக்கத்திலிருக்கும் நலம் மருத்துவமனைக்கு நலம் பெற அழைத்துச் சென்றான். அண்ணன் அனுப்பும் பணம் ஏதோ அவர்களை நடமாட வைத்துக் கொண்டிருக்கிறது. பெயர்; பதிவிட்டதும் டோக்கன்  கிடைத்தது. வேகமாக அப்பாவை காட்டிவிட்டு சென்றிடலாம் என நினைத்துக் கொண்டான்.

 அங்கு  இருக்கும் நோயாளிகளைப் பார்த்து குருவிற்கு மயக்கம் வந்துவிடுவது போல் இருந்தது. நோயாளிகள் இரும்பும் போதும் தும்பும் போதும் அவன் இதயம் வேகமாக துடித்தது. நமக்கு எதுவும் வந்துவிடுமோ  நம்மளும் படுத்துட்டா அவ்வளவு தான்  அப்பா என்ன திட்டி தீத்துடுவாறு.. சும்மாவே வேலைக்கு போகாத உதாரின்னு கத்துறாரு.. என கண்ணை மூடி புலம்பிக் கொண்டு இருந்தான். இருமல் சத்தம் அமைதியானதும் மெதுவாக கண்ணை திறந்தான். அனைவரும் குருவையே பார்த்துக் கொண்டிருந்தாh;கள்.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

பக்கத்தில் அப்பாவை பார்த்தான்.

என்ன? அப்படி பாக்குற  வாயை மூடி புலம்ப மாட்டியா  இவ்வளவு சத்தமாவா புலம்புவ என்றதும்  இங்க வந்தும் அப்பாட்ட அசிங்கப்பட்டாச்சு. சார் புதுசா இது நம்மளுக்கு எனக் கூறிய படி வெளியே வந்து நின்றான் குரு.

கதவை திறந்து விட ஒருவர் பணியில் இருந்தார். அவரிடம் குரு  அண்ணே நல்ல வேலை கிடச்சுறுக்கு  அற்புதம். என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த நபருக்கு கோபம் வந்து கத்த தொடங்கினார் போப்பா  எதுக்கு வந்தயோ  அத பாரு என்றான். குரு எதுவும் பேசாமல் வந்து அமர்ந்தான். நா என்ன கேட்டே?. அவனோட வேலையவா? அய்யோ! அய்யோ! இப்படி ஒரு வேலையானு அவனும்  எனக்கு இப்படி ஒரு வேலை இல்லையேனு நானும் புலம்ப வேண்டியது தான்.

ஒருவர் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தார் அங்கு அமர்ந்திருக்கு நபர்களிடம் ஏதோ  விசாரிக்கிறார் பின் வரவேற்பரையில் இருக்கும் பெண்ணிடம் கேட்கிறார் மீண்டும் அங்கு அமர்ந்திருக்கும் நபர்களிடம் விசாரிக்கிறார் மீண்டும் வரவேற்பரைக்கு செல்கிறார் இறுதியாக  அந்த பெண் டோக்கன் வழங்கும் நோட்டை பார்த்து விட்டு  குருவை பார்த்து கையை காட்டினாள். குருவை நோக்கி  அந்த நபர் வந்து பேசும் போது தான்  அவனுக்கு முன்னால் ஒன்று முதல் நான்கு டோக்கன் வாங்கிய நபா;களிடம் இதைப் பற்றி தான் பேசியிருக்கிறார்; என்று புரிந்தது.

அய்யா  நீங்கள் வைத்திருக்கும் டோக்கன் எனக்கு வேண்டும். நான் இன்று இரவு 11.15 மணிக்கு வெளி நாட்டிற்கு செல்கிறேன். டோக்கன் எண் எனக்கு 13. டாக்டரை பார்த்து விட்டு போக நேரம் ஆகும். இந்த டாக்டர் ஒரு நோயாளியை பார்க்கவே அதிக நேரம் ஆகும். நா “பிளைட்ட மிஸ் பன்னிருவே” அம்மா   இந்த டாக்டர் தான் நல்லா பாப்பாருனு சொல்லுவாங்க. முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவராம். நா கிளம்பும் போது தான் இப்படி நடக்குமா. அதனால தான் கேக்கிறேன் என்று ஓரே மூச்சில் சொல்லி முடித்தார் அந்த நபர்

குரு பதில் கூறாமல் கொண்டு வந்த தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தான். என்ன சொல்லுவது என்று புரியாமல் தயக்கமாக  என்னால் முடியாது. அப்பாவுக்கும் அவசரம் தான். இங்க இருந்து எப்ப போகலாம்னு நா இருக்கே. போங்க சார்  வேற யாராவது பாருங்க என்றான்.

யாரும் என்னுடைய நிலைமைய புருஞ்சுக்க மாட்டிங்கிறாங்க. எல்லாரும் வயசான மக்களா இருக்காங்க. நீங்க தான் என்னுடைய நிலைமைய கொஞ்சம் பாக்கனும். நா பிளைட்ட மிஸ் பன்னா பணம் பாதி போயிரும். வேலைக்கு சரியான நேரத்துக்குள்ள போலனா என்ன அங்கயே அம்மாவ பாத்துக்கிட்டு இருனு சொல்லிருவாங்க என்று கண்ணீர் ததும்ப பேசினார்

குருவிற்கு வேலையில்லாத நிலைமை எப்படி இருக்கும்னு தெரியும்.. ஆனா இன்னக்கி டாக்டர பாக்க முடியலனா  அண்ணே திட்டுவாறு. அப்புறம் அண்ணே கொடுக்கும் பணம் கிடைக்காது. அப்பா வேற  யோசுசாலே தலை சுத்துது.. வேனா சார்  உங்களுக்கு உதவுனா  நான் தான் கஷ்டப் படனும்.. சோறு கிடைக்காது. இப்ப ஏதோ கிடைக்குது அத கெடுக்க பாக்குறீங்களே.

நீங்க டோக்கன் மாத்திக்க ஒத்துக்கிட்டா  நா பணம் தர ரெடி என்று சொன்னதும் குரு  டோக்கனுக்கு பணமா? என்று சொல்லுவதற்குள் ஐய்யாயிரம் தருகிறேன் என்றான்.

ஐய்யாயிரம்  ஒரு சின்ன கடை நடத்தலாம். நம்ம கடை என்று சிந்தித்தவாறு அப்பாவை பார்த்தான். அப்பா தெருவில் அசிங்கமா பேசியது நினைவிற்கு வந்தது. அம்மாடி  வேனா சார் பணம் தந்து என்னுடைய தன்மானத்த கெடுக்க பாக்குறீங்களே.

அம்மா கொஞ்சம் முடியாம இருக்கும் போதே வந்திருக்கலாம். இப்ப அவசரமா வந்து எப்படி சார் அம்மா முக்கியம் தான். இருந்து பாருங்க என்றான் குரு.

அந்த நபர் கோபமாக வெளியே சென்றவன் யாருக்கோ போன் செய்து பேசி கத்திக் கொண்டிருந்தான். அவர் வெளியே கத்தி பேசுவது ஏசி அறையில் அமர்ந்திருக்கும் அனைவரின் காதிலும் விழுந்தது. அங்கு வந்த நோயாளிகள் குணம் பெற்றது போல ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

மற்றவர்களுக்கு கஷ்டம் என்றால் வேடிக்கை பார்க்க மக்கள் ஆவலாக தான் இருக்கிறார்கள். எழுந்து நிக்க முடியாமல் தவித்த நபரை நான் தான் கை பிடித்துக் கொண்டு அமர வைத்தேன். இப்ப பாத்தா யாருடைய உதவியும் இல்லாமல் நிக்கிறார் இரும்பிக் கொண்டு இருந்த நபர் சத்தமில்லாமல் இருக்கிறார் யாருக்காவது பிரச்சனை வந்தா நம்மளுக்கு வந்த நோயும் போகுமா? என்று வந்த நபர்களை பார்த்து மனத்திற்குள் கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

அந்த நபர் போன வேகத்தில் மீண்டும் குருவிடம் வந்து நின்றார் அங்கு இருந்த நோயாளிகள் மீண்டும் நோயாளியாக மாறினார் இருமல் சத்தம் கேட்க தொடங்கியது. அனைவரும் ஆவலாக  இருந்தனர் அந்த நபர் என்ன கேப்பார்;  இவன் என்ன சொல்லுவான் என்று அவர்களின் மனக் குமுறல் குருவின் காதில் விழுந்தது..

ஐய்யாயிரம் வேணாமா  என்னுடைய நிலைமை  பரவாயில்லை. பக்கத்துல ஒரு சுழி போட்டுக்கோ. சுழியா  அப்படினா என்ன சாருனு கேட்டான். சுழி தெரியாதா சைபர் குரு அதிர்ந்து போனான். ஐம்பது ஆயிரமா  கடவுளே! தர்மம் பன்றதுனாவே யோசிக்கிறாங்க  இவரு அவசர கால தர்மம் பன்றாரு. பணம் இருக்கு  அது செய்யுது. அம்மா உயிருக்கு பணம்.

குரு எதுவும் சொல்லவே இல்லை. அமைதியா இருங்க  டாக்டர் வந்துட்டாரு. டோக்கன் ஒன்னு. ரெடியா இருங்க என்ற குரல் கேட்டது. அனைவரும் இங்கு எதுவுமே நடக்காதது போல் அமைதியானார்கள். அந்த நபர் பதட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்தார் அருகில் இருந்த அவரின் தாய்  விடுப்பா  நீ போ  நா பாத்துகிறேன். யாருடயும் நீ கெஞ்சுறது எனக்கு சுத்தமா புடிக்காது. என்றதும் அந்த நபர் என்ன செய்வது தெரியாமல் கொஞ்சம் அமைதியாக இருந்தார்

வரவேற்பரையில் இருந்த பெண் கூறியது போல்  சார் நீங்க கேட்டுப்பாருங்க  டோக்கன் வாங்குன மக்கள் மாத்திக்கிட்டா போதும்.. நாங்க எதுவும் செய்ய முடியாது. எல்லாமே கேமிராவில் பதிவாகும். அவசரத்துக்கு இங்க எதுவும் செய்ய முடியாது. வந்த எல்லாரும் சண்ட போடுவாங்க.

குருவிற்கு பணம் கேட்கலாம் என்று முடிவுக்கு வந்தான். ஆனால் இப்ப கேட்டா சார் தப்பா நினைப்பாரு  திரும்ப வந்து கேட்டா  ஓகே சொல்லலாம் என்று அமைதியாக அமர்ந்து விட்டான்.

டோக்கன் இரண்டு என்று குரல் வந்தது.

அவசரம் அவசரம் சொல்லிக்கிட்டு இருந்தார் இப்ப வந்து கேக்காம இருக்காங்களே! நம்ம கேக்கலாம் என்று முடிவுக்கு வந்தான் குரு. ஆனால் அந்த நபர் கண்களை மூடிய படி இருந்தார் கண்களை திறக்கட்டும் கேக்கலாம்.

நேரம் போனது.

டோக்கன் மூன்று என்று குரல் வந்தது.

பொறுமையாக இருந்த குரு. கண்ண திறக்க மாட்டாரு  ஓடி ஓடி தூங்கிடாரு  நம்ம பணம் கேக்கலாம் என்று எழுந்தான். அந்த நபரின் தாய்  செய்கையில் வராதே  அமரவும் என்றார் குருவிற்கு புரியவில்லை. வரும் போது கை அசைக்க முடியாம இருந்த அம்மா! எப்படி இப்படி? என்று அமர்ந்தான்.

டோக்கன் நான்கு என்று குரல்.

குருவின் அப்பா  நீ அப்பவே யோசிக்கனும். இப்ப போய் கேக்கப் போற  ஒரு தடவதான் வாய்ப்பு வரும். திரும்ப திரும்ப வராது என்று கூறி கண்ணை மூடிக் கொண்டார்

நீங்க தூங்கிட்டு இருக்கீங்கனு பாத்தா  இப்படியா  என்ன செய்வது புரியாமல் குரு அமைதியானான்.

டோக்கன் ஐந்து

குரு அப்பாவை அழைத்துக் கொண்டு போனான். டாக்டர் அப்பாவை முழுவதுமாக பரிசோதனை செய்து முடித்து விட்டு உடல் உபாதைகளை கூறினார் ஆனால் குருவிற்கு எதுவும் காதில் விழுகவே இல்லை. நினைவு முழுவதும் பணத்தை சுற்றிக் கொண்டிருந்தது. சொன்னது புருஞ்சுச்சா  என்று டாக்டர் கேட்டதும்  பணம் தாங்க மாத்திகலாம் என்று குரு வேகமாக கூறினான்.

டாக்டர் குழப்பமாக  என்ன ஆச்சு  நா பணம் தரனுமா. புரியலையே என்றார் குருவின் அப்பா  அவன் வேலை குழப்பத்தில் இருக்கான். நீங்க சொன்னது எனக்கு புரியுது என கூறி வெளியே வந்தனர்

குரு மருந்து வாங்க நின்று கொண்டிருந்தான். அந்த நபர்ன் தாய்  அருகில் வந்து தம்பி  நா பயந்துட்டேன். நீ பணத்த வாங்கி டோக்கனை தந்துருவேனு. எ புள்ள வெளி நாடு போறது எனக்கு புடிக்கல  நா சொல்லிப் பாத்தே கேக்குற மாதிரி தெரியல  அதனால நெஞ்ச புடுச்சு கீழ விழுந்து நடுச்சேன். நீ செஞ்ச உதவிக்கு அந்த பணத்த நா தரேன் என்று பணம் எடுத்தார்

பணமா  அதோட தேவை இப்ப எனக்கு இல்லை. உங்க ஆசைய காப்பாத்துறது அவரோட கடமை. அவருக்கு புரிய வைங்க என்றான் குரு. இதை மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்த அந்த நபர் ஓடி வந்து தாயிடமும் குருவிடமும் மன்னிப்பு கேட்டார். குருவின் அப்பாவும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் மருந்துகள் வாங்கிக் கொண்டு இருவரும் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தனர். குரு அப்பா  எனக்கு சந்தோமா இருக்கு. நலம் மருத்துவமனைக்கு போனதுல நா நலமா இருக்கேன். உன்னால அந்த அம்மா ஆசை நடந்துருக்கு என்று அன்பாக பேசினார் தினமும் திட்டும் அப்பா அன்பாக பேசியதை கேட்டு  குரு புன்முறுவலோடு வீடு வந்து சேர்ந்தனர்

You already voted!
4.7 9 votes
Article Rating
Subscribe
Notify of
guest
9 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
நிலேஷ் ம
நிலேஷ் ம
2 years ago

அருமை

Siddharth pandian
Siddharth pandian
2 years ago

சிறப்பான சிறுகதை

Mansur
Mansur
2 years ago

அருமை

Borgia Fabiola
Borgia Fabiola
2 years ago

Great story’teller Noorullah

Borgia Fabiola
Borgia Fabiola
Reply to  Borgia Fabiola
2 years ago

Great work

சங்கரமூர்த்தி கணித ஆசிரியர்
சங்கரமூர்த்தி கணித ஆசிரியர்
2 years ago

மிகவும் அருமையான சிறுகதை

HamA
HamA
2 years ago

நல்ல சிறுகதை. கதைக்கேற்ற தலைப்பு. தங்கள் இலக்கியப் பணி மென்மேலும் சிறக்கட்டும் ஆசிரியரே! வாழ்த்துக்கள்….

உஷா
உஷா
2 years ago

அருமை ஐயா!

S.MUTHU PANDI
S.MUTHU PANDI
2 years ago

அருமை

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 0
Your IP Address : 18.118.1.232

Archives (முந்தைய செய்திகள்)