Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தவறை அன்பு காட்டி திருத்தலாம் – சித்ரா பால்பாண்டி

12 Feb 2022 12:44 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Short Story Pictures Chitra

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-26
படைப்பாளர் - சித்ரா பால்பாண்டி

அழகழகாய் பெண்கள் வசிக்கும் அந்த பெண்கள் விடுதிக்கு மேலும் அழகு சேர்ப்பது அங்கு தங்கி இருந்த சுமதி என்ற பெண். அவள் ஒரு சகல கலா வல்லி என்று  கூறலாம்.  சுமதி அந்த விடுதியில் சமையல் மற்றும் அங்கு இருக்கும் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செய்து வருகிறாள். அறையில் இருக்கும் விளக்குகள் சரியாக எரிகிறதா, அறைகள் சுத்தமாக இருக்கிறதா, என்று சரி பார்ப்பதுதான் சுமதியின் வேலை.

சுமதிக்கு அம்மா, அப்பா, உடன் பிறப்புகள் என்று யாரும் கிடையாது. அவள் ஒரு அனாத ஆசிரம விடுதியில் ஒரு நாள் இரவு கண்டெடுக்கப்பட்டாள், அந்த ஆசிரமத்து சிஸ்டர் தான் சுமதியை எடுத்து வளர்த்து வந்தார். பின்னர் அந்த ஆசிரமத்திலேயே சுமதிக்கு ஒரு வேலையும் போட்டு கொடுத்து அவளுக்கு சம்பளமும் கொடுத்து வந்தார். அந்த விடுதியில் சுமார் 60 பேர் வசித்து வந்தனர். சிஸ்டருக்கு வசதிகள் இல்லாததால் சுமதியை 5ஆம் வகுப்பு வரை மட்டும் தான் படிக்க வைக்க முடிந்தது.

சுமதிக்கு நன்றாக சமைக்க தெரியாது, சுமாராக சமைப்பாள், அனால் மற்ற வேலைகளை சரியாக செய்து முடிப்பாள். சுமதிக்கு 16 வயசு தான் இருக்கும். கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள்.  விடுதி பெண்களும் சுமதியிடம் அன்பாக இருப்பார்கள். சுமதியை ஒரு சகோதரி போல் நடத்துவார்கள்.

அன்று பெண்கள் தினம் , கேட்கவா வேண்டும் எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள்.  சொல்லி வைத்து, அன்று அனைவரும் மாலை 6 மணிக்கு சீக்கிரமாக வந்து விட்டார்கள்.  ஏற்கனவே திட்டம் போட்டதுபோல் அன்று பெண்கள் தினம் என்பதால் விளையாட்டு போட்டிகள் , நடனம் , அலங்காரம் நடை அழகு , போட்டி , பாட்டு , ஆட்டம் , என மிக விமர்சையாக நடந்து கொண்டு இருந்தது. அனைவரும் சந்தோஷத்தில் இருக்கும் போது செல்வி என்ற பெண் தன்னுடைய அறையின் கதவை மூட மறந்து விட்டாள். செல்வி தன் அறையில், தங்க செயினும் 5000/- ரூபாயும்,  தன்னுடைய பையில் வைத்து கபோர்டில் வைத்து கதவை மூடாமல் வந்து விட்டாள்.

அன்று இரவு 10 மணிக்கு தான் எல்லா நிகழ்ச்சியும் முடிஞ்சுது. பின்னர் அவரவர் அறைக்கு சென்று விட்டனர். அசதியில் அன்று இரவு அனைவரும் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை 9 மணிக்கு தான், செல்வி தன்னுடைய அறையில் பர்சில் வைத்திருந்த காசு மற்றும் செயின் காணாமல் போனதை அறிந்தாள்.

இந்த சூழ்நிலையில் யாரை நம்புவது.  அந்த விடுதியில் சுமார் 60 பேர் இருக்கின்றனர், யாரை குறை சொல்வது அதுவும் சாட்சி இல்லாமல், யாரை  சொல்வது, என்று எதுவும் புரியாமல் திகைத்து போனாள் செல்வி . என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த செல்விக்கு ஓரு யோசனை தன்னுடன் தங்கி இருக்கும்,  கனி என்ற தோழியிடம் சொன்னாள். பின்னர் இருவரும் சேர்ந்து வார்டனிடம் இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தனர் .

பின்னர் கனி செல்வியை அழைத்து , செல்வி கவலை படாதே உன் பணத்தையும், செயின் 'யையும் எடுத்தது சுமதி தான், எனக்கு தெரியும் என்றாள், உடனே சுமதி அப்படியா இது உண்மை என்றால் நாம் உடனே சென்று வார்டன் இடம் சொல்வோம் வா என்றாள், அதற்கு கனி , அவசரப்படாதே செல்வி, நா சொல்வதை பொறுமையாக கேள், சுமதி நல்ல பெண் தான் ஆனால் இந்த ஒரு குணம் மட்டும் தான் அவளிடம் இருக்கும்  பழக்கம்.

நானும் உன்னை போல் ஒரு முறை ஒரு விலை உயர்ந்த பொருளை தொலைத்து விட்டேன், பின்னர் தான் தெரிந்தது அதை எடுத்தது சுமதி என்று, உடனே வார்டன் இடம் சொன்னேன், அவ்வளவு தான் சுமதி கூப்பிட்டு கடுமையான தண்டனை கொடுத்தார், எல்லோர் முன்னாடியும் அசிங்கப்படுத்தினார், பின்னர் அவளிடம் நான் மெதுவாக பேசினேன் அனால் அவளோ, ஒன்றும் நாடக்காது போல் பேசினாள். அடுத்த நாள் ஒரு சீப்பை திருடினாள், அதை நான் பார்த்து விட்டேன், பின்னர் புரிந்து கொண்டேன், அவளுக்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது என்று.

அதனால் அவளுக்கு தண்டனை ஒரு பொருட்டல்ல , மாறாக நாம் இந்த முறை அவளை திருத்த முயற்சிப்போம் என்றாள் . உடனே செல்வி , இது சரி பட்டு வராது என்றாள் , அதற்கு கனி, இம்முறை மட்டும் நான் சொல்வதை கேள், முயற்சி செய்து பாப்போம், இல்லை என்றால் விட்டு விடுவோம் என்றாள், செல்வி இதற்கு ஒப்புக்கொண்டாள்.

கனி- செல்வி, சேர்ந்து ஒரு பிளான் போட்டார்கள் , சுமதியை மாடிக்கு வரும் படி செய்து, அவள் காது பட பேச திட்டமிட்டார்கள், அது போல ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுமதியை மாடிக்கு அழைத்தார்கள், அவளும் வந்தாள், அவள் படி ஏறும்போதே செல்வி, கனி பேச தொடங்கினார்கள்:-

செல்வி: கனி ஒரு பிரச்சனை

கனி: என்ன செல்வி என்ன ஆச்சு?

செல்வி: என்னோட செயின் மற்றும் 5000 ரூபாய் தொலைஞ்சு  போச்சு

கனி: அய்யய்யோ !!  என்ன சொல்ற ரூம்'ல நல்ல தேடி பாரு

செல்வி: நல்ல தேடி பாத்துட்டேன் கனி, கிடைக்கல

கனி: சரி அப்போ என்ன செய்ய

செல்வி: அத நம்ம வார்டன் கிட்ட சொல்லலாமா?

கனி: வார்டன் சுமதிய தான் சந்தேகப்படுவாங்க

செல்வி: எனக்கு என்னோட பொருள் வேணும்

கனி: அந்த பொண்ணு பாவம் ஆனா அவ தான் எடுத்தானு சொல்ல முடியாதே

செல்வி: சரி எனக்கு ஒரு ஐடியா

கனி: என்ன?

செல்வி: நா லேடி போலீஸ் புகார் கொடுக்க போறேன்

கனி: அச்சச்சோ !! அப்படினா போலீஸ் வருவார்களா

செல்வி: போலீஸ் வருவாங்க

கனி: நம்ம ஹாஸ்டல் பேரு  கெட்டுபோய்டுமே

செல்வி: அதெல்லாம் ஒன்னும் ஆகாது, போலீஸ் கிட்ட ஒரு கருவி இருக்கு அது கண்டு புடிச்சுடும், அப்புறம் அந்த நபரை கூட்டிட்டு போய் தண்டனை கொடுப்பாங்க

கனி: ஓ ! அப்போ சரி

செல்வி: நாளைக்கு வேண்டாம் வர சண்டே எல்லாரும் இருப்பாங்க அன்னைக்கு வர சொல்றேன்

கனி: ம் நல்ல யோசனை

இவ்வாறாக இவர்கள் பேசிய அனைத்தையும் சுமதி ஒட்டு கேட்டாள். பின்னர் யாருக்கும் தெரியாமல் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைத்துவிட்டாள் .  (ஒரு நபர் தவறு செய்தால் அவர்களுக்கு புரியும் படி சொல்லி பார்க்கணும், அதன் பின்னர் மன்னித்து திருத்தணும். இந்த அறத்தை பின்பற்றினாள் 90% பேர் மாறி விடுவார்கள்

You already voted!
3.8 6 votes
Article Rating
Subscribe
Notify of
guest
7 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
மோகன்
மோகன்
2 years ago

அடைந்தே தீருவேன் என்ற வைராக்கியம் நமது வெற்றியை உறுதி படுத்தும்

ElangovanT
ElangovanT
2 years ago

Nice story

jancy
jancy
2 years ago

nice story sister

veni
veni
2 years ago

very nice

veni
veni
2 years ago

அருமையான கருத்து சகோதரி.. என்றைக்கும் அன்பு தான் முடிவில் வெற்றி பெறும்… 

krish
krish
2 years ago

concept is good

S MARIAPPAN
S MARIAPPAN
Reply to  krish
2 years ago

Very nice good cocept

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 10
Total views : 410197
Who's Online : 0
Your IP Address : 3.148.104.3

Archives (முந்தைய செய்திகள்)