Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

விடிந்தால் தீபாவளி – அண்ணா கதிர்வேல்

06 Feb 2022 1:02 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-20
படைப்பாளர் - அண்ணா கதிர்வேல், அம்பர்நாத், மும்பை

பொன்னுத்தாய்  ஏதோ தனக்குள்  புலம்பியபடி உள்ளே சென்றாள்.  ”அவனை சொல்லி  குத்தமில்லே எல்லாம் பொண்டாட்டிக்காரி தலகானி  மந்திரந்தான்” அவனை அப்படி பேசவைக்குது’ அவள் வாய்விட்டேசொல்லிப்புய்ட்டா...

“பாவு எடுக்க ஆரணிக்கு போனவன் அப்படியே வாழ்ப்பந்தல்ல இருக்கிற மாமியாரின் உறவுக்கார வீட்டுக்கு போயிட்டான் போல”

பொன்னுத்தாய்க்கு நாலுப் பெண்கள் ரெண்டு ஆண்பிள்ளைகள் ஆகமொத்தம் ஆறு மக்கள் இவர்கள் புருசன் மனைவி இரண்டுபேர் எட்டுபேருள்ள குடும்பம்.. அவர்களது குடும்பமோ  நெசவாளக் குடும்பம்.   ரெண்டு  வருசத்துக்கு முன்னாடி பெரியவனுக்கு உள்ளூரிலிருந்து நாலு தெரு தள்ளித்தான் மகனுக்கு பொண்ணு கட்டினாள்.

மருமகள் வந்த பிறகு மவன் ரோம்பவெ மாறிட்டான். தனிக் குடும்பம்  போயிட்டான்  அதுவும் ஒரே வீட்டில் ரெண்டுஅடுப்பு அந்த தெருவே வியந்து பார்த்தது.. ஒரு மாசத்துக்  குள்ளாற அவன் ஒன்னா வந்துட்டான்.

பொன்னுத்தாய்க்கு மூத்தவள் பெண்பிள்ளை ரெண்டாவதுதான் ஆண் மகன் பிறந்தான்.   மூணாவதாக பெண் பிள்ளை நாலாவதாக ஆண் பிள்ளை.  ஐந்தாவது  ஆறாவது  ரெண்டும் பெண்தான். மூத்தவள் அத்தை மகனை மணந்து சென்னையில்  செட்டிலாகி விட்டாள்

இப்போ அந்த குடும்பமே ஆண் பிள்ளையான மூத்தவனுடைய சம்பாத்தியத்தை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கு. மற்ற எல்லாப் பிள்ளைகளும் சிறியவர்கள். இதுவும் ஒருகாரணம்தான்.

அப்பாரு சம்பாதியத்தில் குடும்பம் நடத்த முடியாது. அதுமிக சொற்பமான வருமானம் அது அவரின் முதுமைக் கேற்றதாக இருந்தது.

அதே நேரம் மூத்தவன் கைத்தறியின் பாவு முடிய புதிய பாவு எடுக்க  பக்கத்து  டவுனான  ஆரணிக்கு போனான். அங்கு பாவும் எடுத்தான் அதற்குண்டான [பெரிய தொகையாக] பணமும் வாங்கிவிட்டான். 

பணம் வாங்கியவுடன்  நேராக அவன் மாமியாரின் தாய் வீடு உள்ள பகுதிக்கு போய் விட்டான்  அங்கு தேவையான ஒருவாடகை வீடும் பார்த்துவிட்டான். அதை மனைவிக்கும் அவன் தன்னோட கை பேசியின் உதவியால் மனைவிக்கும் சொல்லியும் விட்டான்.

இங்கே விடிந்தால் தீபாவளி. அண்ணன் வருகைக்காக உடன் பிறப்புகள் காத்திருக்க... அண்ணனும் வந்தான். வந்தவன் மனைவியை அழைத்துப்போக வந்தான்.

கல்யாணமான ஆறாவது மாசமே தனிக் குடித்தனம் போய்விட்டான். ஒருமாசமே இருந்திருப்பான் மீண்டும் ஒன்றுசேர்ந்தான்.. அவன் வந்தது .தாய்க்கு சந்தோசம்தான். ஆனா இப்போ இப்படி பண்ணிப்புட்டானே அதுதான் பொன்னுத்தாய் புலம்பிக்கொண்டு இருந்தாள்..

இளையவன் தங்கைகளை அழைச்சுக் கொண்டு அண்ணாவிடம் சென்றான். தீபாவளிக்கு வெடி வாங்கக் காசு வாங்குவதற்கு...

அண்ணன் கேட்டான் ‘’தீபாவளிக்கு வெடி வெடித்தே ஆகணுமா? கோபம் குரலில் கொப்பளிக்க... போங்க... போய்... வெள்ளாடுங்க” .என்றபடி. அவ்விடத்தை விட்டு    அகன்றான், போயே விட்டான்.

தீபாவளியும் வந்தாச்சு... !  

காலை மணி ஐந்துதான் ஆனது ஆனால் நடுச்சாமம் போல  இருட்டு இருந்தது.

இளையவன் யோசித்தான் வேகமாகச் சென்றான் நாகராசன் வீட்டை நோக்கி.

நாகராசன் அப்பாரு கவருமெண்ட்ல வேலை பார்க்குறாரு செழிப்பா வாழறாங்க அதனால ரெண்டுநாளைக்கு முன்னால் வெடி வாங்கிட்டான். நாகராசன் முன்னாடியே எழுந்து வெடியை வெடித்து விட்டான். தெருவெல்லாம் பட்டாசின் காகிதக் குப்பை அதனை வேகமாக ரெண்டு கையினாலும் உடன் கொண்டு வந்த பெரிய பையில்  திணித்து  திரும்பினான்.  தன்னோட வீட்டுவாசலில் போட்டு பரப்பினான் பள்ளி நண்பர்களை அழைத்து தான் வெடித்தாக நம்ப வைத்தான்.

அவனுடைய தீபாவளி  முடிந்தது.. அவனுடைய அப்பாரு...குமார் பழையதை நினைத்தார் அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அப்ப மூத்தவனுக்கு வயது 2 இருக்கும் “தத்துக்கா புத்துக்கான்னு” நடை பயில.. தோட்டத்தில் உள்ளத் தரைக் கிணற்றை எட்டிப் பார்த்தான் என்னும் ஒரே காரணத்துக்காக தன் மனைவிக்கு  இவர் ஆசை ஆசையாய் வாங்கித் தந்த ஆபரணமான அட்டிகையை விற்று அந்த கிணற்றை உரைக் கிணறாக மாற்றினார்.அப்படி வளர்த்த மகனா இப்படி பலவாறாக நினைத்தபடி... அவர் தனக்கு என எதையும் சேர்த்து வைக்கல... கலங்கினார்.

அந்த  வருடம் அவரின் நிலத்தில் கம்பு விதைத்து இருந்தார் அது அதிக மகசூல் தந்தது அதனால் வறுமை வரும் போதெல்லாம் அவர் வீட்டில் உணவு வேளையில் கம்பு களி, கம்பஞ்சோறு, கம்பங்கூழ் இப்படித்தான் நடமாடும். குமரன் யாரிடமும் கையை நீட்டி கடன் வாங்குவதில்லை எனும் கொள்கை உடையவர் ஆதலால் தீபாவளி தினமான அன்றும் கம்பங் கூழ்தான்..

பொன்னுத்தாய் குமாருக்கு வெங்காயம் ஒன்றை உரித்துக் கொடுத்தவாறு கூழை செம்பில் ஊற்றினாள் கண்களில் சுரந்த நீரை முந்தானையில் துடைத்தபடி தன் நிலையை நினைத்தாள்...மூத்த பிள்ளை இப்படிச் செய்வான் என அவள் நினைக்கவில்லை. அவனின் சிறுவயதில் கை,கால் சூம்பி வயிறுமட்டும் பெரியதாக இருக்கும். யாரோ சொன்னார்களாம் மடவிளாகம் எண்ணையால் இந்த நோய் குணமாகும் என்று... தான்  அந்த ஊருக்கு பத்துக் கல்தொலைவு இருக்கும் பஸ்சுக்கு காசில்லாமல் நடந்தே மூன்று முறை போனதை  நினைத்தாள். அந்தப் பிள்ளையா இப்படி? அவள் கண்ணீர் சுரந்தாள்...

மாதங்கள் பல உருண்டோடியது...

பஸ்சு ஒன்று கடைத்தெருவில் அதிக சத்தம் எழுப்பியவாறு செல்ல... அதிகாலை மணி  அய்ந்து  இருக்கும் மார்கழி மாதத்திற்கே உரியக் குளிரில் சேலை  தலைப்பைப்  போர்த்திக் கொண்டு பொன்னுத்தாய் வாசலில் சாணி தெளிக்கக் கதவைத் திறந்தாள்.

கதவைத் திறந்தவள் திண்ணையில் மூத்தவன் குளிரில் நடுங்கியபடி  படுத்திருப்பதைப்  பார்த்து, திகைத்து, பின் அவனை உள்ளே  அழைத்து  போனாள்.

அவன் அம்மா ... என்று..தயங்கினான்..

பொன்னுத்தாய் அவனை மேலே பேச உற்சாகப்படுத்தினாள். “உங்க மருமகள் மாசமாய் இருக்கிறாள். பிரசவம் 17 ந்தேதி ஆகிடும்னு டாக்டர் சொன்னார். அதான் உங்களை அழைத்துப்போக வந்தேன்”. என்றான்.

பொன்னுத்தாய் எல்லாவற்றையும் மறந்தாள்.

அடுத்த சில நிமிடத்தில் பொன்னுத்தாய் புருசனிடம் சொல்லிக் கொண்டு இருப்பதில் நல்ல சேலையாக இரண்டொரு சேலையை பையில் திணித்தபடி மகனுடன் சென்றுவிட்டாள். 

அவன் அப்பா... குமார் மனைவியை வியப்பு மேலிட உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்...

You already voted!
4.4 9 votes
Article Rating
Subscribe
Notify of
guest
11 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Meeran
Meeran
2 years ago

அருமை

குணசேகர் ன்ஸ் நெடுங்குனம்
குணசேகர் ன்ஸ் நெடுங்குனம்
2 years ago

அடுத்து கதை எப்போ வரும் அண்ணா கதிர்வேல் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் குணா என் எஸ் ஸ்டோர் நெடுங்குணம்

குணசேகர் ன்ஸ் நெடுங்குனம்
குணசேகர் ன்ஸ் நெடுங்குனம்
2 years ago

,அம்மாவின் உள்ளம்! அருமையணை தகவலுக்கு நன்றி! விடிந்தால் தீபாவளி அண்ணா கதிர்வேல் உங்க கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இதேபோல் மேலும் மேலும் கதைகளில் அவரை வரவேற்க படுகிறேன் நானும் ஒரு நெசவாலை தான்

Last edited 2 years ago by குணசேகர் ன்ஸ் நெடுங்குனம்
Pachai appan.m
Pachai appan.m
2 years ago

உண்மை, அருமை.

நெடுங்குன்றம்.
ம.பச்சையப்பன்

Dhayanithi
Dhayanithi
2 years ago

Very nice story

அய்யப்பிள்ளை
அய்யப்பிள்ளை
2 years ago

அருமையான கதை

Nehal sharma
Nehal sharma
2 years ago

Very nice story👏👏

Nehal sharma
Nehal sharma
2 years ago

Anytime

Smita G
Smita G
2 years ago

Very very nice story

Rajendran Venkatesan
Rajendran Venkatesan
2 years ago

Very nice story

Neelamegan R Nedungunam
Neelamegan R Nedungunam
2 years ago

super அம்மாவின் பாசம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 9
Total views : 410196
Who's Online : 0
Your IP Address : 13.58.82.79

Archives (முந்தைய செய்திகள்)