28 Jan 2022 12:25 amFeatured

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-14
படைப்பாளர் - சங்கீதா.ஜெ, மரக்காணம்

காவிரி நீர் ஓடும் அழகான ஊர் காவேரிபூம்பட்டினம். காவிரி போன்ற தூய்மையான மக்கள் அங்கு வசித்து வந்தனர். கலைவாணி கண்ணன் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கலைவாணி மற்றும் கண்ணன் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.
கண்ணன் மிகவும் அருமையாக படிக்கும் . பள்ளியில் முதலிடம் பிடிப்பவன்.கலைவாணியோ சிறிது படிப்பில் பின் தங்கியவள்.கண்ணனுடன் பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவன் குமரன். கண்ணனும் குமரனும் வகுப்பில் முதல் மாணவனாக இருப்பவர்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இவர்கள் தன்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்து விடலைப் பருவத்துக்கு மாறும் தருணம். கலைவாணியோ சில காலங்கள் பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர் இதனை அறிந்து கண்ணனிடம் கேட்டபோது அவள் பருவ பெண்ணாகி விட்டாளாம் என்று ஊரில் கூறிக்கொண்டிருந்தார்கள், ஐயா என்று கூறினான். இனி கலைவாணி பள்ளிக்கு வர இயலாது என்றும் கூறினான்.
இதனை ஆசிரியர் அறிந்து மிகவும் வருத்தப்பட்டார். பின் , குமரன் இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்தனர். வகுப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வும் நடந்தது. ஆணுக்கும்பெண்ணுக்கும் என்ன வேறுபாடுகள். ஆண் பெரியவரா? பெண்பெரியவர்களா? என்று வினவினார். இதில் குமரனும்கண்ணனும் மற்றும் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டனர். அதுவரை கண்ணனுக்கு மூன்றாம் இடத்தில் இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள் நினைவில் கூட வரவில்லை.
இப்படி இருக்க குமரன் ஆண்தான் பெரியவர்கள் என்று பேச வந்தான் கண்ணன் பெண்கள்தான் அவர்களே குடும்பம் எனும் பெரிய தீபத்தினை ஏற்றி மற்றும் வரலாறு உருவாக அவர்களே காரணம் ஆகிறார்கள். இல்லையெனில் பூமியில் மனிதர்கள் இல்லை என்று கூறினான்.
குமரனோ ஆண்கள்தான் பெரியவர்கள் அவர்களுக்கே நாட்டில் நடக்கும் அனைத்து இன்பத் துன்ப காரியங்களும் தெரியும்.பெண்கள் அப்படி இல்லை அவர்கள் ஒரு நிலை வந்தவுடன் வீட்டை விட்டே வெளிவராத நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். அவர்களுக்கு படிப்பறிவு என்பதே பெண்புத்தி பின்புத்தி எனக்கூறினான். பின் ஆசிரியர் இருவரில் ஒருவர் இல்லை எனினும் இந்த உலகம் இல்லை என்று கூறி உரையை முடித்து விட்டார்.
பின்னர் கண்ணனுக்கு சிறு மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. அவற்றிற்கு அவன் உடம்பில் சுரக்கும் சுரப்பிகளே காரணம். திடீரென்று கையில் வளையல் அணிவது. காதுகளில் கம்மல் போட்டு அழகு பார்ப்பது என அவனிடமே சிறிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இவற்றை அவன் பெரிதாக கருதவில்லை.
திடீரென்று அவனுக்கு ஆண்கள் கழிப்பறையை உபயோகிப்பது கூட குற்றமாக கருதினான். இவன் மாற்றங்களை நன்கு அறிந்த அவனின் அம்மா கஸ்தூரி இதனை கண்ட உடன் அதிர்ச்சி அடைந்தாள். பல மருத்துவரிடம் கூட்டிச் சென்று என்னவென்று அறிய முயன்றாள். ஆனால் மருத்துவரோ இது இயல்பாக பருவகாலத்தில் மூன்றாம் பாலினத்தவர்க்கு ஏற்படும் அறிகுறிகள் என்று கூறினார்.
இதைக் கேட்டவுடன் மனமுடைந்து போன அவன் அம்மா வீட்டிற்கு கொண்டு சென்று அவனை ஆண் போல் நடந்து கொள்ள வேண்டும் . சூடு போட்டுவிடுவேன் என மிரட்டினான். எவ்வளவு முயற்சித்தாலும் கண்ணனால் அந்த இயல்பை மாற்றிக் கொள்ள முடியவில்லை . சில மாதங்களுக்குப் பிறகு இப்படியே இருந்தால் அம்மாவிடம் அடி வாங்கியே இறந்துவிடுவோம். நாம் வீட்டை விட்டுச்செல்வதே சரியான முடிவு என்று இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான். அப்போதுதான் அவனுக்கு பசி , அவமானம் ,வலி, வேதனை போன்றவற்றை உணர முடிந்தது
அவனிடம் உடைகள், நடைகள் பாவனைகள் என அனைத்துமே மாற்றம் அடைந்திருந்தது. இப்படி இருக்க 15 வயதேயான அவன். சில பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினான்.. இவ்வளவு நன்றாகப் படித்த கண்ணன். படிப்பில் ஈடுபாடு கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி இப்படி ஒரு அவல நிலையில் இருக்க நேரிட்டுள்ளது. பசி எனும் கொடுமையை அறிந்த அவன், பாலியல் தொழிலில் ஈடுபட்டால் ஒழிய நமக்கு உணவு கிடைக்கும் மற்றும் மக்களிடம் கைகள் தட்டி அவர்களை உற்சாகப்படுத்தி வரும் பணமே நம்மை காப்பாற்றும் என்று நம்பினான். சில காலம் கழித்து தன் நண்பனான குமரனை சந்தித்தான். குமரனிடம் தான் அனுபவித்த வேதனைகளை கண்ணீர் மல்க கூறினான். ஆனால் அவற்றை செவி கொடுத்துக் கூட கேட்கவில்லை குமரன்.
தன் நண்பனாக காணவில்லை மூன்றாம் பாலினத்தவரான திருநங்கையாகவே அவன் பாவித்தான். கண்ணீர் மல்க அந்த இடத்தை விட்டு நீங்கினான் கண்ணன். தன்னை போன்ற மூன்றாம் பாலினத்தவர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான். அவர்கள் கூறுவது போல் இவனும் பாலியல் தொல்லைக்கு ஈடுபட முயன்றான்.
அப்பொழுது அவனுக்கு சிறிய வயதில் நாம் கலந்துரையாடிய ஆண் பெரியவரா? அல்லது பெண் பெரியவரா? என்று கலந்துரையாடிய அந்த நிகழ்வு ஞாபகத்தில் வந்தது.
ஆண் பெரியவர் அல்ல பெண் பெரியவர் அல்ல அவர்களிடம் இருக்கும் மனநிலையே பெரியது . இங்கு அனைவரும் ஒற்றுமையே ஆண் பெண் என இரு சமூகம் இருப்பதை உணர்ந்த நம் மக்கள் பின் மூன்றாம் சமூகத்தில் இருக்கும் என்னை போன்ற மனிதர்களை கருத்தில் கூட எடுத்துக் கொள்ளவில்லை என கண்ணீர் மல்கினான்
சில நாட்கள் கழித்து எது நடக்கக்கூடாது என்று விரும்பினானோ அதுவே நடந்தது. பல நாட்கள் கழித்து பல வருடங்கள் கழித்து கலைவாணியை அவன் சந்தித்தான். கலைவாணி என்பவர் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர். அவளைக் காணும் பொழுது ஐயோ, என்னை இந்த கோணத்தில் கண்டால் அவள் என்னிடம் பேசக்கூடமாட்டாள், என்று நினைத்து உருகினான் ..
பின் கையில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் அவல நிலையையும் கண்டான். சிறிய வயதில் இவர்கள் இருவருமே படித்து ஒரு நல்ல மேல் பதவியில் இருக்க வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால் இப்பொழுது தலைகீழாக இருக்கிறது. கலைவாணி வாழ்க்கையும் கண்ணன் வாழ்க்கையும். கலைவாணி கையில் இருப்பது வேறு யார் குழந்தையும் அல்ல, அவள் பெற்றெடுத்த குழந்தையே! கண்ணனுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியே ஏனென்றால் தன்னைப் போன்ற ஒரு பெண்ணாக இல்லாமல் அவள் ஒரு குழந்தையை ஈன்று எடுத்து விட்டாள். சிறு துரும்பு கூட பல் குத்த உதவும் ஆனால் நானே எதற்கும் உதவாத கல்லாகவே உள்ளேன் என்று வருந்தினான்.
கலைவாணி எதிர்பாராமல் கண்ணனை கண்டால். கண்ணனின் இந்த நிலையை கண்ட உடன் அங்கேயே விழுந்து அழுது புலம்பினாள்.சிறுவயதில் பசியைக் கூட அறியாத கண்ணன் , இப்பொழுது ஒரு வேளை சோற்றுக்காக இந்த அவலநிலையைஅடைந்துள்ளான் என்று கதறினாள். அவளாகவே கண்ணனிடம் இது தன் குழந்தை என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
கண்ணன் நினைத்திருந்தான் கலைவாணி அருகில் கூட வர மாட்டாள் என்று ஆனால் கலைவாணியோ கண்ணனை கண்ணனாக பார்க்கவில்லை கண்ணகியாக பார்த்தாள்.
அவன் ஏதோ ஒரு வகையில் படித்து முன்னேறி உயர்ந்த பதவியை அடைந்து இருப்பான். ஆனால் அவற்றை ஒரு குறையாகவே கண்டனர் இவ்வுலகம்.
பின் கண்ணன் கலைவாணியை கண்டு நீ மல்லிகை பூ போன்றவள் என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றான்
ஆம் திருமணமாகி குழந்தையை ஈன்ற பெண்கள் மல்லிகைப்பூ போன்றவர்கள்
குழந்தை இன்மை இல்லாத பெண்கள் தாழம்பூ போன்றவர்கள்
ஆனால் நாங்களோ காகிதப்பூ போன்றவர்கள் என கூறி அவ்விடத்தை விட்டு சென்றான்.






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90
அருமை சகோதரி… நானும் இதையொத்த கருத்துகளை வைத்தே கதைக்களம் எழுதியிருக்கிறேன்.மிக்க மகிழ்ச்சி சகோதரி… வாழ்த்துகள்💐💐💐
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி…. இன்னும் நிறைய கருத்துள்ள கதைகள் எழுத வாழ்த்துக்கள்…. சகோதரி… 🤩
நன்றிகள் தோழி
அருமை
நன்றிகள் தோழி
அருமையான எழுத்துக்கள். என் மெய்சிலிர்க்க வைத்த படைப்பு❤️
நன்றி
Story super ❤️ all tha best 💐💐💐💐
நன்றி