Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அவன் ஒரு அகதி இவன் ஒரு மறதி – மருத்துவர் இரா.சாரதி

27 Jan 2022 11:28 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-12
படைப்பாளர் - மருத்துவர் இரா.சாரதி, சென்னை.

அலுவலக ஆய்வுக்காக இருநாட்கள் திருப்போரூருக்குச் சென்றிருந்தேன்.காலையில் பணி முடிந்ததும் மாலையில் பனி விழும் வேளையில் கோயிலுக்குச் சென்றேன்.

அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. . . . . . . . ’ என்னும்  பக்திப்பாடலை பயபக்தியுடன் பையன் ஒருவன் மற்றொரு சன்னதியில் பாடிக்கொண்டிருப்பது கேட்டது.  மயக்கும் மழலை முகம் யாரது? என குரல் வந்த திசையில் விரைந்து பார்த்தேன்.  பையனைக் காணவில்லை. ஆனால் ஒரு வயோதிகர் சன்னதியின் முன் சிற்பமாக சலனமில்லாது சிலாகித்து சன்னக் குரலில், குயிலின் கீதமாகப் பாடிக் கொண்டிருந்தார்.

சிறார் குரலில் ‘பளார் பளார்’ என கணீர் வார்த்தைகளாக வயதானவர் பாடுகிறாரே! என வியந்தேன். ஆஹா! இவ்வயதில் இப்படி அனுபவித்து  பாடுகிறாரே! யார் இவர்?

“ஐயா, நீங்க நல்லா பாடுகிறீர்கள்.வாழ்த்..........’’ என் பாராட்டுகள் முழுமையடையவில்லை.  என்னை அவர் முழுமையாக நிராகரித்து நிமிராத் தலையுடன்  என்னை மேலே பாராமல் என் பாராட்டுகளைச் சட்டை பண்ணாமல் தன் சட்டைக் காலரை கடித்தவாறு கடந்தார்.

எனக்கு ஒரு பக்கம் ஏமாற்றம். மறுபக்கம் தடுமாற்றம். ஏனெனில் அவரது வயதுக்கும், குரலுக்கும், சட்டைக் காலரைக் கடித்த செய்கைக்கும் சம்பந்தமே இல்லை. பின்னால் வந்த ஒரு அகவை முதிர்ந்த அம்மையார் கூறலானார்.

“சார், அது அப்டிதான், நாப்பது வருஷமா இப்டிதான் கரீட்டா எட்டு மணிக்கு வந்துகினு, பாடிகினு, போய்கினு இருக்கு.  மேட்டர் என்னன்னா, இது, அப்போ சின்ன வயசுல இது இதோட அம்மாகாரியோட கோயிலுக்கு வந்திருக்கு. அவ ஒரு வேலையா கிளம்பிருக்கா. இதுவும் கூட வர்றேன்னு ஸ்டிட்டா சொல்லிருக்கு. தம்பி, நீ இந்த பாட்டை பாடிகினுரு அம்மா இப்ப ஓடியாந்துறேனு சொல்லி இவனை திசைதிருப்பிட்டு போனா. முனைக்குத்தான் போயிருப்பா, அதுக்குள்ள  நாலு ரௌடிங்க அவளை கொன்னுட்டு செயினை அறுத்துட்டானுங்க.

இந்தப் பயலை தள்ளி விட்டுட்டு இதோட செயினையும் இஷ்துக்கிட்டானுங்க. புள்ளை கீழே விழுந்ததுல மண்டைல அடிபட்டு கிராக் ஆகி இப்டி பழையஞாபகத்துலே தினம் இந்த பாட்டை பாடுது. பாடினா அம்மா வந்துரும்னு ஒரே நெனப்பா பாடுது. வேற எந்த நெனப்பும் இல்ல. என்னாத்த சொல்ல’’ என நாற்பது வயசு நாதத்தை நாடியில்லாமல், நரம்பில்லாமல், ராகமில்லாமல் ஒப்பித்தார்.

“ஏம்மா இவரோட சொந்தக்காரங்ககிட்ட சொல்லிருந்தா அவங்க இவரை கவனிச்சிருப்பாங்களே’’.

“சார்!  இது நடந்தது சிலோன்ல. சொந்தங்களெல்லாம் செத்துட்டாங்க.விடுவாங்களா அந்த காட்டுமிராண்டிங்க. இது பாவம் அகதியோட அகதியா இங்க வந்து இப்டி லூசாகி பாடிகினுருக்கு. அகதி கதி அதோ கதி! சீக்கிரம் வா சார், சுண்டல் போடுறாங்கா’’.

எனக்கு சுர்ரென்றது. இரு விடயங்கள் என் மனதைவிடாது சுற்றுகின்றன.

ஒன்று, இந்த வயதானவருக்கு வந்திருப்பது “ஆன்டிரோ கிரேட் அம்னீஷ்யா’ ( Anterograde Amnesia) என்னும் ஞாபகமறதி நோய்.  மூளையில் அடிபட்டால் அதாவது நினைவுகளின் தளமான “ஹிப்போ கேம்பஸ்’ (Hippocampus) செயலிழக்கும்பொழுது இம்மாதிரியான ஞாபக மறதி தாக்கும்.

அடிபட்ட நாளுக்கு முன்னால் நிகழ்ந்தவைகள் எல்லாம் ஞாபகத்திலிருக்கும். ஆனால் அடிபட்ட பிறகு நிகழ்பவை எதுவுமே ஞாபகம் இருக்காது. அதனால்தான் அந்த பெரியவர் சிறார் நிலையிலேயே உள்ளார். பாடினால் தன் அம்மா வருவாள் என அடிபட்ட பொழுது உள்ள நினைவு திரும்பத் திரும்ப தாக்கிக்கிட்டிருக்கு.  அடிபட்ட பின்பு நிகழ்பவை எதுவும்....... உதாரணத்திற்கு தனக்கு வயதாகிறது?இப்பொழுது என்ன சாப்பிட்டோம்? முதலியன நினைவில் தங்காது.

எனது நண்பனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட விபத்தால் இந்த அம்னீஸ்யா அவனுக்கு வந்தது. எனவே  அதைப் பற்றி எனக்கு பரிச்சயம்.

இரண்டு, ஒரு மனுஷன் தினம் ஏக்கத்தில் பாடுகிறாரே, ஏகப்பட்டமனிதர்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.யாரேனும் ஒருவர் இரக்கம் கொண்டு இறங்கி வந்து, “ராஜா, நான்தான் உன் சித்தி.  அத்தை, தமக்கை’ என்று பொய் சொல்லி அரவணைத்திருந்தால், அன்பிலேயே குழந்தையின் மனம் சரியாகியிருக்கும்.அந்த பாலகனின் வாழ்க்கை இப்படி பாழாகியிருக்காதே?ஏன் நம் மக்கள் முழுமையானஉதவியை செய்யமறந்தார்கள்?

இவரை ஒரு காப்பகத்தில் சேர்த்துவிட வேண்டும். இவர் நலம்பெற வேண்டும் என தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது அலைபேசி சிணுங்கி குலுங்கி கலைத்தது. என்னை அன்றே சொந்த ஊர் பணியிடத்துக்கு வரச் சொன்னார்கள்.  சொந்த ஊருக்கு வந்ததும் திருப்போரூரையும் திரு.அகதியையும் நான் மறக்கவில்லை.  அவர் பாடிய பாடல் என் காதில் ரிங்டோனாக ரீங்காரமிட்டவாறு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தது. ஆயினும் அலுவலக அயர்ச்சியில் அகதிக்கு உதவுவதை ஒரு மாதம் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். ஒருநாள் நித்திரையிலும் அகதியின் பாடல் காதுகளில் விழ, இதோ திருப்போரூருக்கு புறப்பட்டுவிட்டேன்.

கோயிலுக்கு சரியாக எட்டு மணிக்கு எட்டு வைத்து அவரைத் தேடினேன்.  இம்முறை எப்படியும் அகதியை தகுதியான காப்பகத்தில் சேர்த்துவிட வேண்டும் என காத்திருந்தேன், காத்திருந்தேன். அவர் வரவேயில்லை. விசாரிக்கையில் பத்து நாட்களுக்கு முன்பு அவர் பாடியவாறே நெஞ்சுவலி வந்து இறந்துவிட்டார் என்று தெரிந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது.தினம் தினம் தன் அம்மா வருவாள் என ஏகப்பட்ட ஏக்கத்தோடு காத்திருந்து கடைசியில் காலமாகிவிட்டாரே!

இப்படி ஆயிற்றே!!  நானும் மக்களில் ஒருவனாக உதவி செய்ய மறந்துவிட்டேனே! சலித்துக் கொண்டு சாலையில் நடக்கலானேன்.இன்னமும் அந்தஅகதி பாடிய பாடல் என்னை கைதி ஆக்கி என்னுள்ஒலித்துக் கொண்டிருந்தது.இம்முறை என் காதுகளில் அல்ல. மாறாக என் இதயத்திலிருந்து இசைத்துக் கொண்டிருந்தது.

You already voted!
4.4 20 votes
Article Rating
Subscribe
Notify of
guest
37 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Bharathiraja
Bharathiraja
2 years ago

It’s a simple story but powerful message to us.

SARATHY
SARATHY
Reply to  Bharathiraja
2 years ago

நன்றி பாரதிராஜா சார்

Kathirvel
Kathirvel
2 years ago

Nice story..Great !!

Anamica
Anamica
2 years ago

Saamaanyargalin kathai

SARATHY
SARATHY
Reply to  Anamica
2 years ago

Thanks madam

SARATHY
SARATHY
Reply to  Anamica
2 years ago

Thanks

SARATHY
SARATHY
Reply to  Anamica
2 years ago

Thanks Anamica

Kumaranji Sathiyamoorthy
Kumaranji Sathiyamoorthy
2 years ago

Very practical and in depth meaning…
Hats off sarathy….

SARATHY
SARATHY
Reply to  Kumaranji Sathiyamoorthy
2 years ago

Thanks kumaran

SARATHY
SARATHY
Reply to  Kumaranji Sathiyamoorthy
2 years ago

Thanks kumaranji:-)

Muthukumar
Muthukumar
2 years ago

Interesting story. Nice

SARATHY
SARATHY
Reply to  Muthukumar
2 years ago

Your words are a pat on my back

SARATHY
SARATHY
Reply to  Muthukumar
2 years ago

Muthu, thanks

SARATHY
SARATHY
Reply to  Muthukumar
2 years ago

Thanks Muthu.your wods do a pat on my back .very encouraging

கண்ணன்
கண்ணன்
2 years ago

அருமையான கதை களம் அருமை மிக அருமை

SARATHY
SARATHY
Reply to  கண்ணன்
2 years ago

கதை களத்தை பற்றி கருத்து கூறிய கண்ணன் அவர்களுக்கு நன்றி.

SARATHY
SARATHY
Reply to  கண்ணன்
2 years ago

நன்றி கண்ணன்

samy
samy
2 years ago

தாய் பாசம் காலத்தால் அழியாதது என்மதை அறிவியல் மூலம் உணர்த்தி யார் யார் குற்றவாளிகள் என்பதை சுட்டிகாட்டுவது அருமை

Kamatchi
Kamatchi
2 years ago

Nice story

SARATHY
SARATHY
Reply to  Kamatchi
2 years ago

Thanks

Sarath
Sarath
2 years ago

Science fiction, sentiments

நந்தகுமார்
நந்தகுமார்
2 years ago

நாட்டுப்பற்றும் அம்மா பாசமும் நிறைந்த ஒரு அருமையான கதை!!

SARATHY
SARATHY
Reply to  நந்தகுமார்
2 years ago

நன்றி

Thanikachalam
Thanikachalam
2 years ago

Nice story

SARATHY
SARATHY
Reply to  Thanikachalam
2 years ago

Thanks madam

SARATHY
SARATHY
Reply to  Thanikachalam
2 years ago

Thanks mrs.kumaran

பிரபா
பிரபா
2 years ago

நெகிழ வைக்கும் கதை. அறிவியல் மற்றும் தாய் மொழி நேசிப்பார்களுக்கான கதை

SARATHY
SARATHY
Reply to  பிரபா
2 years ago

ஓ நன்றி பிரபாமேடம்

T. Kumaran
T. Kumaran
2 years ago

மிக அருமை…. நகைச்சுவை உணர்வும், சோகமும் மிக இயல்பாக வெளிப்படுகிறது…. கதை நம் கற்பனையில் தங்குதடை இல்லாமல் உருவகமாகிறது. சிறப்பு….

த. குமரன்

SARATHY
SARATHY
Reply to  T. Kumaran
2 years ago

நன்ற திரு.குமரன்

Selvaraj
Selvaraj
2 years ago

நெஞ்சை விட்டு நீங்க மறுக்கும் கதை. வாழ்த்துகள் சாரதி.

SARATHY
SARATHY
Reply to  Selvaraj
2 years ago

நன்றி

Sarath
Sarath
2 years ago

Story is sentimental ,scientific society
Based

kskarunaprasad
kskarunaprasad
2 years ago

Nicely weaved story. Narrative style transforms the author’s mind to reader’s mind. Each and everyone is responsible for the protagonist’s loss.

SARATHY
SARATHY
Reply to  kskarunaprasad
2 years ago

Yes , almost all of us should bear the burden of not extending our help full fledged.,sir

Ramachandran
Ramachandran
Reply to  SARATHY
2 years ago

உள்ளத்தை உருக்கி விட்ட கதை.

SARATHY
SARATHY
Reply to  Ramachandran
2 years ago

தங்களது வார்த்தை எனை உலுக்கி விட்டது.நநன்றறிி

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 0
Your IP Address : 13.58.247.31

Archives (முந்தைய செய்திகள்)