Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

வசந்தத்தை எதிர்நோக்கி – ம.செ.அ.பாமிலா பேகம்

23 Jan 2022 1:45 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-10
படைப்பாளர் - ம.செ.அ.பாமிலா பேகம், நாகர்கோவில்

பொழுது விடிந்தது தாயார் பாத்திமா மகளை எழுப்புகிறாள். மகள் பானு எழும்பவில்லை. மீண்டும் எழுப்புகிறாள். எனக்கு வேலைக்கு செல்ல வேண்டும், நீ பள்ளி செல்ல வேண்டும், வேலை எல்லாம் போட்ட படியே இருக்கிறது எழும்புமா மெல்லிய குரலோடு

பானுவும் எழும்பி தாயாருக்கு உதவியாக வேலைகள் அனைத்தையும் செய்து விட்டு இருவரும் புறப்படுகிறார்கள். பானு பள்ளியில் எல்லாவற்றிலும் முதலிடம். படித்து கல்லூரி படிப்பிற்கும் தயாராகிறாள்.  நாட்கள் நகர்ந்து ஓடின. 

பானு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார்.  தாயார் பாத்திமா பானுவிற்கு வரன் தேட ஆரம்பிக்கிறார்.  நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சில நாட்களுக்கு பிறகு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்த தகவல் பெண் படித்து இருக்கிறாள், எனக்கு வேண்டாமென்று ……

பானுவிற்கும் தாயாருக்கும் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.  என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பமே நின்றது.  ஒரு சில நாட்களுக்கு பிறகு அம்மாவும் மகளும் ஆறுதலாகி இருந்தனர். 

பானு ஆசிரியர் பணியில் இருந்துக் கொண்டே மேலும் படிக்க தொடங்கினாள்.  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு பானுவிற்கு திருமணம்  நடந்தது. இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயார் ஆனாள் பானு ஆனால் பானுவின் சந்தோஷம் ஒரு சில வருடங்களுக்குத் தான் நீடித்தது.  அதன் பிறகு நீடிக்கவில்லை.    

பானுவின் கணவர் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.  எந்த வித தகவலும் இல்லை. தொடர்பும் இல்லை. தன்னுடைய குழந்தைகளுடன் மீண்டும் பயணிக்கிறாள் தன் தாயார் பாத்திமாவுடன்…….

ஒரு பெண் குழந்தையை வீட்டு வேலை செய்து படிக்க வைத்தோமே, அவள் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று தாயார் பாத்திமா மனதில் நினைக்கிறாள். 

வேறு வழி தெரியாமல் இரண்டு பேரக் குழந்தைகளையும் காப்பாற்ற பாட்டியும் மீண்டும் வீட்டு வேலைக்கு செல்கிறாள்.  பானுவும் ஆசிரியர் பணிக்கு செல்கிறாள்.  வருடங்கள் ஓடின.  இரண்டு ஆண் குழந்தைகளும் வளர்ந்தன.

தன்னுடைய வாழ்க்கையை குழந்தைகளுக்காக தியாகம் செய்த பானு,

பேரக் குழந்தைக்காக பாடுப்பட்ட பாட்டி, இருவரின் கண்ணில் ஆனந்த கண்ணீர்.  ஊரே பாராட்டியது.  பேரக் குழந்தைகள் பெரிய வேலைகளில் பணியாற்றினார்கள்.

மகன்கள் அப்துல்லாவும், மாலிக்கும், ஒரு நாள் அம்மா பானுவிடம் மகன் அப்துல்லா வந்து என்னையும் தம்பியையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து  நல்ல நிலைக்கு கொண்டு வந்தீர்கள் என்றான். ஆனால் அம்மா உனக்கும் பாட்டிக்கும் ஓய்வு வேண்டாமா என்று கேட்கவில்லை.

பானுவின் மனதில் மிகப் பெரிய ஏக்கம்,  பானுவின் தாய் பாத்திமா மகளிடம் கேட்க ஏன் நீயும் நானும் வேலைக்கு செல்லத் தான் வேண்டுமா என்று கேட்க இருவரின் கண்ணில்  கண்ணீர் வந்தது.

பானு வைராக்கியத்தோடு சொல்கிறாள். 
தன் கையே தனக்குதவியென்று.  
இன்னும் இவர்களது வாழ்க்கையில் விடிவு பிறக்குமா ?
வசந்தத்தை எதிர் நோக்கி  காத்திருக்கிறார்கள்…………..

You already voted!
3.9 9 votes
Article Rating
Subscribe
Notify of
guest
4 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jansi
Jansi
2 years ago

Miga arumai

s.sabeetha banu
s.sabeetha banu
2 years ago

nice sagodhari

Karthik
Karthik
2 years ago

Balance story pls tell me mam

Karthik
Karthik
2 years ago

Super super

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092532
Users Today : 6
Total Users : 92532
Views Today : 9
Total views : 410196
Who's Online : 0
Your IP Address : 3.137.218.230

Archives (முந்தைய செய்திகள்)