Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அன்பின் வழியில் – வித்யா சுந்தரி

16 Jan 2022 11:56 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி-04
படைப்பாளர் - வித்யா சுந்தரி, டோம்பிவிலி

வான்மதி, தன் பெயருக்கு ஏற்றவாறு வானளவுக்கு மதியுடையவள்.  தன் சிறு வயதிலேயே சிந்திக்கும்
திறமை பெற்றவள் இந்த வான்மதி. எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுவாள். விடாமுயற்சி என்றால் வான்மதிக்கு மிகவும் பிடிக்கும்.  எந்த ஒரு செயலானாலும்
விடாமுயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்  ‘’அந்த வானளவிற்கு உயர வேண்டும் ‘’ என்பது
வான்மதியின் குறிக்கோளாக இருக்கும்.

நல்ல மன உறுதியுடைய வான்மதி ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவளுடைய பெற்றோர் அவளுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக்கு வசதி படைத்தவர்கள் என்று தான்
கூற முடியும்.  அவளுக்கு ஒரு தம்பி மற்றும் இரண்டு தங்கைகளும் உண்டு.

துன்ப படுபவருக்கு அவரின் துயர் துடைக்க உரியக் காலத்தில் உதவுபவள் இந்த வான்மதி.  வான்மதிக்கு அவளது பாட்டியை மிகவும் பிடிக்கும்.

வான்மதியின் கனிவான குணத்திற்கும், மன உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் மிக முக்கிய காரணம் அவளது பாட்டியே என்று கூடக் கூறலாம் .  பாட்டி தன்னுடைய பேரப் பிள்ளைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்    சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்த அவர் ஒரு விவசாயி.

தண்ணீர் பிரச்சினை மிகுந்த கிராமத்தில் வாழ்ந்த போதிலும் தன்னால் இயன்ற அளவு முயற்சி செய்து விவசாயத்தில் முன்னேற்றம் கண்டவர்  அதில் வந்த வருமானத்தில் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்ந்து
வந்தார்.  தன்னுடைய அடிப்படைத் தேவைகள் போக மீதமுள்ள பணத்தைத்  தேவையானவர்களுக்கு உதவுதற்காகவும் மற்றும் தன் பேரப்பிள்ளைகளுக்காகவும் செலவிடுவார் .

பள்ளி விடுமுறை நாட்களில் தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்று விடுவாள் வான்மதி. பாட்டியி்ன்வீட்டிற்குச் சென்றுவிட்டால் பிறகு என்ன? கொண்டாட்டம் தான்!  தனக்கு
விருப்பப்பட்ட தின்பண்டங்கள் உடைகள், எல்லாமே அவளுக்குக் கிடைத்து விடும்.  எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டியின் அன்பு நிறையக் கிடைக்கும் அவளுக்கு.

விடுமுறை நாட்கள் என்பதால் விளையாட்டிற்குப் பஞ்சமே இருக்காது.  வான்மதி தன்னுடைய
நண்பர்களான கார்த்தி, வள்ளி, பரிமளா, ரேவா இவர்கள் எல்லோருடனும் சேர்ந்து பல்லாங்குழி,
தட்டாங்கல், கண்ணாமூச்சி முதலிய விளையாட்டுக்களை விளையாடி தன்னுடைய விடுமுறை நாட்களைக் கழிப்பாள்.  தனது பாட்டியுடன் வயலுக்குச் சென்று வருவாள்.  பாட்டிக்கு வேண்டிய உதவிகளைச் 
செய்வாள். தன்னைப்போலவே மன உறுதியுடையவளாகவும் உழைப்பின் மேல் மிகுந்த நம்பிக்கையுடையவளாகவும் இருப்பதாலோ என்னவோ .  பாட்டிக்கு வான்மதியை மிகவும் பிடிக்கும்.
விடுமுறை முடிந்து வீடு திரும்பியதும் தன்னுடைய படிப்பின் மீது கவனம் தந்து பள்ளிப் படிப்பைத்
தொடர்வாள்.

வான்மதி விளையாட்டில் சுட்டி என்றால் படிப்பில் மிகவும் கெட்டி. தன்னுடைய பத்தாம் வகுப்புப் படிக்கும் பொழுது பள்ளியின் முதல் மாணவியாக வருவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தாள்.  தன்னுடைய தகப்பனாரின் அறிவுரைப்படி பன்னிரண்டாம் வகுப்பில் சிறப்பாக முயற்சி செய்து நிறைய மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டுமென்ற ஆசை அவளிடம் இருந்தது.  வான்மதி அதற்கான முயற்சிகளனைத்தையும் செய்தாள் .

வான்மதியின் தந்தை ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதால் தன் மகளின் விடாமுயற்சியையும் உழைப்பையும் பார்த்து பெருமைப்பட முடிந்ததே தவிர தன் மகளின் விருப்பமான மருத்துவப்படிப்பை நிறைவேற்ற இயலவில்லை.  தனது பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில் சேர்ந்து கல்லூரியின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாள்.

காலத்தின் கணக்கை யாராலும் கணித்துக் கூற இயலாது.  தன் படிப்பின் அடுத்த அத்தியாயத்தை யோசித்து பார்ப்பதற்கு முன்னரே ஒரு திருப்பு முனையாக வான்மதிக்குத்
திருமணம் நடந்தேறி விட்டது.  தனது பாட்டியின் விருப்பப்படி தன் தாய் வழிச் சொந்தமான
கருணாகரனைத்  திருமணம் செய்தாள். தனது இருபத்தி மூன்றாம் வயதில் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள் 

தன்னுடைய தோழியின் அறிவுரைப்படி ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெற்று ஒரு தனியார்ப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றினாள்.  தன்னுடைய பிள்ளைகளை அன்போடு அரவணைத்துக் காத்து வளர்ப்பதானாலும் சரி தான் எடுத்துக்கொண்ட மிக முக்கிய பொறுப்பான ஆசிரியப் பணியானாலும் சரி அனைத்திலும் தன்னுடைய முழு ஈடுபாட்டையும் முயற்சியையும் வெளிப்படுத்தினாள்.

உலகின் அனைத்து உயிர்களும் எந்த ஒரு நிலையிலும் தன்னை அன்போடு அரவணைத்துக் காப்பாற்றும் கரங்களையே வேண்டுகின்றன.

 ‘’அன்பின் வழியது உயிர் நிலை ‘’

தன்னுடைய பிள்ளைகளின் விருப்படி ஒருவரை மருத்துவராகவும் மற்றொருவரைப் பொறியாளராகவும் உருவாக்கி விட்டாள். 

தன் பிள்ளைகளுக்கும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவசியமானதும்,அடிப்படையானதும், ஆதாரமானதுமான தான் தன் பாட்டியிடம் பெற்ற
தன்னிகரில்லாத சுயநலமற்ற அந்த அன்பு அனைத்து உயிர்களுக்கும் கிடைக்க இறைவனிடம் வேண்டுகிறாள்.

                     அன்பின் வழியில்...... 

You already voted!
2 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092528
Users Today : 2
Total Users : 92528
Views Today : 2
Total views : 410189
Who's Online : 0
Your IP Address : 18.222.67.251

Archives (முந்தைய செய்திகள்)