Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பாட்டி நீ நாட்டி-ஸ்கை முருகன்

15 Jan 2022 12:51 amFeatured Posted by: Sadanandan

You already voted!

தென்னரசு மின்னிதழ் சிறுகதைப் போட்டி
படைப்பாளர் - ஸ்கை முருகன், மும்பை

மும்பை மான்குரில், உள்ளடங்கிய குடிசைப்பகுதி. வீட்டை மட்டுமே மேலும் கீழுமாகப் பிரித்துத் தாய், தந்தை, மகன், மருமகள் என ஒற்றுமையாய் வாழும் குடும்பம். நேற்று, தாயும் தந்தையும் மகளைக் காண நவி மும்பை சென்றிருந்தனர். வீட்டில் விஸ்வநாதன் என்கிற விசுவும், அவன் மனைவி சுசீலாவும் தான். சின்னக்குட்டி அவள் செல்லப்பெயர். இருபெண்களில் இளையவள் என்பதால் வந்த காரணப்பெயரும் கூட. இரவு உணவை முடிந்தவரைச் சீக்கிரமாக உண்பது அவர்களின் வழக்கம். அன்று இரவு டிபன் சாப்பிட்டு முடித்ததும், இன்னிக்கி டிபன் எப்படி இருந்தது ?

உண்மையைச் சொல்லட்டா? பொய் சொல்லட்டா ?

உண்மையையே சொல்லுங்க.

இட்லி ஒரே புளிப்பு. சட்னியில காரம் அதிகம். சாம்பார் இனிக்குது.

எப்பவுமே குத்தம் சொல்றதே உங்க வேலையாய்ப் போச்சு.

நானேவா சொன்னேன் நீ கேட்டியேன்னுதான் தானே சொன்னேன்.

ஒரு பேச்சுக்காவது நல்லா இருக்குனு சொல்லக் கூடாது.

நீதானடி கேட்டே உண்மையைச் சொல்லச் சொல்லி

ஆமா இவுரு எப்பவும் உண்மையே பேசுவார். பெரிய அரிச்சந்திரன் பரம்பரை.

ஏய் என்னைப்பத்தி எதுனா சொல்லு. எங்க பரம்பரையைப் பத்தி பேசுன நல்லா இருக்காது ஆமா. டிபன் ஒழுங்கா பண்ணத்தெரியல பேச வந்துட்டா. தாயைப் போலப் பிள்ளைன்னு சும்மாவா சொன்னாங்க.

என்னைப்பத்தி எதுனா சொல்லுங்க. எங்க அம்மாவைப் பத்தி பேசுனீங்க கெட்ட கோவம் வந்திரும்.

அது என்னடி கோபத்தில நல்ல கோவம் கெட்ட கோவம்.

வாக்கு வாதம் முற்றி, நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன் என்பதாக முடிந்தது. அதுக்குதான் உள்ளூர்ல பொண்ணு கட்டக் கூடாதுன்றது. ஆம் அவள் தாய் வீடு மும்பை தாராவியில் இருக்கிறது.

* * * * *

மும்பை தாராவியில் மற்றுமொரு குடிசைப் பகுதி.

என்னடி இந்த நேரத்தில திடீர்னு. கேட்டது அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி வசித்து வந்த முருகாயி பாட்டி.

நாட்டி, ச்சும்மா என்றாள்.

அந்த வார்த்தை சுசீயின் உதட்டிலிருந்து வந்தவை உள்ளத்திலிருந்து வந்தவை அல்ல என்பதை  முருகாயி  உணர்ந்தாள்.  இந்தா, இந்தப் புஸ்தகத்தை எடுதுக்கிட்டுப் போ, பிறகு வந்து பேசிக்கலாம் என அனுப்பி வைத்தாள்.

அவளுக்கு மட்டுமல்ல அந்த ஏரியாவுக்கே அவள் பாட்டி தான். சுசிக்கு மட்டும் நாட்டி. அவள் சிறுகுழந்தையாய் இருந்த போது அப்படிக் கூப்பிட ஆரம்பித்தது. வளர்ந்தும் அதே நிலைத்து விட்டது. அவள் குடும்பத்தினர் எவ்வளவோ சொல்லியும் மாற்ற இயலவில்லை. ஆனால் அவள் தான் நாட்டி எனக் கூப்பிடுவதற்கான காரணங்களை அடுக்க ஆரம்பித்தாள். கேட்டால் நமக்குத்தான் தலைசுற்றும். ஏரியாவில், நாட்பட்ட பாட்டி அதனால் நாட்டி. குறும்பு கொப்புளிக்கப் பேசுவாள் அதனால் நாட்டி.

சுசீக்கு நன்றாக நினைவு தெரிந்த நாள் முதல், காலை தொடங்கி இரவு படுக்கப் போகும் வரை முருகாயி வீட்டில்தான் இருப்பாள். இருவருக்கிடையே ஓர் தனித்த அன்பு நிலவியது.

முருகாயி நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் வல்லவள். குழந்தை பிறந்த வீடு, பெயர் சூட்டு விழா, காதணி, பூப்பெய்தல், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, இறப்பு என ஏரியாவில் எங்கு எது நடந்தாலும் அவள் பாட்டுத் தவறாமல் இடம் பெறும். குறிப்பாக வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டு, நீண்ட காலம் படுக்கையில் கிடந்து இறந்தவர்கள் வீட்டில் மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளா விட்டாலும், அவ்வீட்டினரின் ஒவ்வொரு செயலிலும் அது எதிரொலிப்பதைக் காணலாம். அம்மாதிரி வீடுகளில் கூட முருகாயி, இறந்தவர், அந்த விட்டிலுள்ளோருக்குச் செய்த நன்மைகளைப் பாடலில் பட்டியலிட்டு உண்மையான சோகத்தை வரவழைத்து விடுவாள். சோகம் உச்சத்துக்குப் போகும் போது ஆறுதலாகச் சில பாடல்களைப் பாடி நிலைமையை இயல்பாக்கி விட்டுத் தான் திரும்புவாள். மொத்தத்தில் மனிதர்களின் உளவியல் தெரிந்தவள்.

அதோடு நீண்ட காலமாக அங்கேயே வசிப்பதால் ஒவ்வொருவரின் அந்தரங்கமும் அறிந்தவள். ஆனால் தேவையின்றி எதையும் வெளியிட மாட்டாள். ஏரியாவில் ஏற்படும் சிறு சிறு சச்சரவுகளுக்கும் பஞ்சாயத்து பண்ணி சமரசம் செய்வாள். அவள் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை. எதிர்வாதம் எதுவும் செய்தால், எதிராளியின் அந்தரங்ககளைச் சபைக்குத் தெரியாத வண்ணம் சொல்லி தன் வழிக்குக் கொணர்வதில் சமர்த்தி.

சிறு வயதில் சுசி ஒரு முறை, தனது பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில், முருகாயி பாட்டி போல வேடமிட்டு நாட்டுப்புறப் பாடலைத் தமிழில் பாடியது மட்டுமல்லாது, தனக்குத் தெரிந்த அளவு அதை மொழி பெயர்த்து நடுவர்களுக்கு விளக்கி முதல் பரிசும் பெற்றவள்.

* * * * *

திடீரென்று நாத்தனார் மட்டும் இரவு 8 மணிக்குத் தனியாக வந்ததை அறிந்த அவள் அண்ணி என்ன நடந்திருக்கும் என ஊகித்துக் கொண்டாள். எனினும் அவளாகவே சொல்லட்டும் எனக் காத்திருந்தாள்.

சாப்பிடுறியா ?

இல்லை சாப்பிட்டுதான் வந்தேன்.

சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு தூங்க போனார்கள். இரவு முழுவதும் கணவனைப் பற்றிய குறைகளைக் கூறிய வண்ணம் இருந்தவள், அப்படியே உறங்கிப் போனாள். திடீரென்று விழித்தவளுக்கு அப்புறம் தூக்கம் வரவில்லை. சரி யாருக்கும் தொந்தரவு இல்லாமல் இருக்கட்டுமே எனக் கருதி, நாட்டி தந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூமில் சென்று படிக்கலானாள். அதில் நாட்டி சிகப்பு மையினால் அடிக்கோடிட்டிருந்த ஒரு வரி, அவளை உலுக்கிப் போட்டது. "தன் வாழ்க்கைத் துணைவரைப் பற்றிக் குறைபட்டுக் கொள்பவர்கள், ஒரு நிமிடம் திருமணமாகாதவர்களைப் பற்றியும், திருமணமாகி வாழ்க்கைத் துணைவரை இழந்தவர்களைப் பற்றியும் எண்ணிப் பார்க்க வேண்டும் என இருந்தது.

நாட்டி தான் சொல்ல விரும்பியதை சூசகமாய் உணர்த்திய விதத்தை எண்ணி வியந்தவளாய், மீண்டும் உறங்கப் போனாள்.

வழக்கமாக 6 மணிக்கு எழும் சுசி அன்று 5 மணிக்கே எழுந்து காலைக் கடனை முடித்து விட்டு வந்தாள். இப்பொழுதும் காலைக் கடனை முடிக்க, பொதுக் கழிப்பிடத்திற்குத் தான் செல்ல வேண்டி இருந்தது. திரும்பி வந்து பல்துலக்கி குளித்தவள் மீண்டும் எங்கே போனாள் என அவள் அண்ணி அவளைத் தேடிக் கொண்டு வெளியே வந்த போது கடையில் நின்று சில்லறை மாற்றிக் கொண்டிருந்தாள்.

என்ன சுசி, காலங்கார்த்தால சில்லறை மாத்திகிட்டு இருக்கே. அதுவும் இரண்டு ரூபா, ஐந்து ரூபாயா ?

அண்ணி நான் எங்க வீட்டுக்கு போறேன்.

அப்ப இது ?

இது ஒங்க வீடு.

வழியில பிச்சைகாரங்களுக்குப் போட சில்லறை மாத்திக்கிட்டுருக்கேன்.

காலையில காப்பிக் குடிக்கல. டிபன் சாப்பிடல. இரு சாப்பிட்டுப் போலாம்.

காலையில, இந்தக் காப்பிக் குடிக்கிறது. டிபன் சாப்பிடறது இந்தப் பழக்கமெல்லாம் எங்க வீட்ல கெடையாது. அந்த வாண்டை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்து விடச் சொல்லுங்க. நான் கூப்பிட்டா ரொம்பப் பிகு பண்ணுவான்.

ஏண்டி ராத்திரியெல்லாம் வேற ஏதோ சொன்ன மாதிரி இருந்தது.

அப்போது அங்கு வந்த அவன் தம்பி குமார், "அது வேற வாயி" என ஒரு நடிகரைப் போல் அபிநயித்துக் காட்டினான். அவள் அடிக்கப் போவது போல் பாவனைச் செய்தாள். மான்கூரில ஸ்டேஷனிலிருந்து யார் கூட்டிட்டு போவா?

நான் எங்க வீட்டுக்காரருக்கு போன் பண்ணிட்டேன் அவரு வருவாரு.

ஷிப்ட் முடிஞ்சு அண்ணன் இப்ப வந்திடுவாரு. ஒரு வார்த்த சொல்லிட்டு போ.

இல்ல. நான் போன் பண்ணி பேசிக்கிறேன்.

அதற்குள் ரெடியான குமாரும் அவளும் புறப்பட்டனர்.

நாட்டி நான் போயிட்டு வரேன் எனக் காலில் விழுந்து வணங்கியவளை மகராசியாய் இருடா என முருகாயி, நா தழுக்கக் குங்குமமிட்டு வாழ்த்தினாள்.

மெயின் ரோடு வரை சென்ற அண்ணி பத்திரமாய்ப் போயிட்டு வா எனக் கூறி திரும்பினாள். வழக்கம் போல் முருகாயி பாடத் தொடங்கி இருந்தாள்.

சின்னக்குட்டி நாத்தனா
சில்லறையை மாத்துனா
ராவெல்லாம் பேசினா
ரயிலு வண்டி ஏறுனா

பாடலின் பொருளை உணர்ந்த சுசீயின் அண்ணி,
என் நாத்தனா உங்கள நாட்டினு கூப்புடுறது தப்பே இல்ல
என்றவாறு தன் இல்லத்துக்கு விரைந்தாள்

You already voted!
4.1 13 votes
Article Rating
Subscribe
Notify of
guest
7 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Prabhusubramaniam
Prabhusubramaniam
2 years ago

nice story the way of naati advice is super.

Ragavan
Ragavan
2 years ago

அருமையான கதை
சிறப்பான கதைகளம்
அழகான வசனங்கள்
வாழ்த்துக்கள்

SARAVANAN
SARAVANAN
2 years ago

இயல்பான கதை ஓட்டம் வாழ்வின் எதார்த்தத்தை காட்டுகிறது. தெருவிற்கு இது போல் ஒரு நாட்டி பாட்டி இருப்பது உண்மை. ஆசிரியர் கதையின் நடுவே, குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை எளிதாக சரி செய்யும் வழியையும் பாட்டி மூலமாக கூறியிருப்பது பாராட்டுக்கு உரியது.

வாழ்த்துக்கள்.

முனைவர். A. R.சரவணன்
சென்னை

K.Ganeshan
K.Ganeshan
2 years ago

To me, small chilly but too hot. Small story but deep thinking for the way of life. Let your insight create more and more short stories and novel and so forth.

Mehboob
Mehboob
2 years ago

Good

Jheeva
Jheeva
2 years ago

Seems to be real &Practical.

P R GOPINATH
P R GOPINATH
Reply to  Jheeva
2 years ago

Good story meaningful

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092530
Users Today : 4
Total Users : 92530
Views Today : 6
Total views : 410193
Who's Online : 0
Your IP Address : 18.117.72.224

Archives (முந்தைய செய்திகள்)