09 Dec 2020 3:30 pmFeatured

06.12.2020 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு தென்னரசு மின்னிதழின் இலக்கியச் சோலை சார்பில் தென்னரசு மாத இதழின் நிறுவனர் பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலும், சங்க இலக்கியச் சொற்பொழிவும் நடைபெற்றது
தென்னரசு மின்னிதழின் புரவலரும், தமிழ் இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் பொருளாளருமான திரு.கு.மாரியப்பன் அவர்கள் அனைவரையும் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இவ்விரு நிகழ்விற்கும் மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் திரு அலிசேக் மீரான் அவர்கள் தலைமை தாங்கி பேராசிரியருடன் தனது பள்ளிபருவம் முதல் மும்பை வரையான நட்பையும் பேராசிரியரின் சிறப்பையும் பகிர்ந்து கொண்டார்
“இல்லாமலும் இயங்குபவர் பேராசிரியர் சமீரா மீரான்” என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவரும், தென்னரசு மின்னிதழின் சிறப்பு ஆசிரியருமான முனைவர் வதிலை பிரதாபன் அவர்கள் ஆற்றிய நினைவுரையில் பேராசிரியர் அவர்கள் பல இடையூறு சிரமங்களையும் தாண்டி அவர் ஆற்றிய இலக்கிய பணியும் மற்றும் கட்சி பணிகளை பற்றி நினைவு கூர்ந்தார்
இலக்கியச் சொற்பொழிவு
இரண்டாவது நிகழ்வாக மாதாந்திர இலக்கியச் சோலை என்ற நிகழ்வில் ”மணிமேகலை உணர்த்தும் நீதி” என்ற தலைப்பில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான ”மணிமேகலை” பற்றி பொதிகை டி.வி புகழ் பட்டிமன்ற நடுவரும், இலக்கிய உலாவின் தலைவரும், வேந்தர் ஆல்பாஸ் டுயுட்டோரியல்ஸ், சென்னையின் நிறுவனருமான திரு. நெல்லை சொல்வேந்தன் அவர்கள் மணிமேகலை சொல்ல்லுன் நீதி என்ற தலைப்பில் சிறப்பாக இலக்கிய உரையாற்றினார். அவரது உரையினை பலரும் பாராட்டினர்
இந்தியன் ஐ.ஏ.எஸ் அகடமி நிறுவனத்தின் தமிழ்த்துறை இணை இயக்குநர் நற்றமிழ் செ.வ.இராமாநுசன், திரு.கருவூர் இரா. பழனிச்சாமி, திரு.ந.வசந்தகுமார், பாவலர் முகவை திருநாதன், எஸ்.ஐ.எ பள்ளி, கல்லூரிகளின் தலைவர் திரு.டி.என்.முத்துகிருஷ்ணன், திரு.அ.இரவிச்சந்திரன், திரு.அரியக்குடி மெய்யப்பன், ஜெரிமரீ தமிழ்ச் சங்க தலைவர் திரு. கோ.சீனிவாசகம், திருமதி.பொற்செல்வி கருணாநிதி மற்றும் பேராசிரியர் சமீரா மீரான் அவர்களின் அண்ணன் திரு. சேனி ஷேக், அவரது மருமகன் திரு.ஷேக் போன்ற பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் பேராசிரியர் அவர்காளைன் சிறப்பினை எடுத்துரைத்து நினைவுரையாற்றினார்கள்.
நிகழ்வின் இறுதியில் தென்னரசு மின்னிதழின் முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விழா இனிதே நிறைவடைந்தது.






Users Today : 15
Total Users : 105749
Views Today : 22
Total views : 433263
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90