07 Aug 2019 8:03 amFeatured

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்(67), மாரடைப்பு காரணமாக நேற்றிரவு மரணம் அடைந்தார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ், சிலகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகம் செயலிழப்புக் காரணமாக 2016ல் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நலக் குறைவு காரணமாக நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
நேற்றிரவு நெஞ்சுவலி காரணமாக உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அறிவோம் சுஷ்மா சுவராஜ்
பிறப்பு : 1953 பிப்ரவரி 14
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் 1973ம் ஆண்டு முதல்
தொடர்ந்து 7 முறை எம்பி
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்
(முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு, வெளியுறவுத்துறை பொறுப்பு வகித்த 2வது பெண் அமைச்சர்)
முன்னாள் டெல்லி முதல்வர்
ஹரியானாவின் மிக இளம் வயது காபினட் அமைச்சர்
1998 அக்டோர் 13ம் தேதி முதல் 1998 டிசம்பர் 3ம் வரை டெல்லி முதல்வர்
15வது மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்,
தகவல் தொடர்பு துறை ஆகியவற்றில் அமைச்சர் பொறுப்பு
இவரது மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பாஜ தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Users Today : 14
Total Users : 106595
Views Today : 15
Total views : 434340
Who's Online : 0
Your IP Address : 216.73.216.1