26 Jan 2021 11:07 amFeatured

-கவிஞர் பிரபு முத்துலிங்கம்.
வங்கத்தின் தலைவனே
தமிழ் சிங்கத்தின் நண்பனே
விடுதலையின் வேங்கையே
இந்திய வீரத்திருமகனே…!
புரட்சி கவி பாரதியோ
பெண் விடுதலை
நேதாஜியின் எண்ணமோ
ஜான்சி ராணிப் படை…!
உம் தேசப்பற்றும்
பேசும் நாட்டுப்பற்றும்
எம் குருதியாகக் கொதிக்கிறது…!
உமது உதயம்
எமக்கு
இரண்டாம் சூரியன்
உமது பெயரோ
எமக்கு
தினம் உச்சரிக்கும்
மந்திரம்…!
போராடுவதே
விடுதலைக்கான வழி
வாருங்கள்
வளமான தேசம் காக்க
உரிமைக்காக உரிமையுடன்
போராடுவோம்….
என்றும்
வங்க "மா" தலைவன் வழியில்…!!!
வாழ்க வளர்க
எம் தலைவன்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
எம் பாரதமே
தாய் திருநாடே
தேசியக் கொடியை
வான் உயர்த்தி
வாழ்த்து பாடுவோம்
வந்தேமாதரம்….!!!
மூவர்ணக் கொடியும்
பறந்திடுமே
உடன் தேசியகீதம்
பாடிடுமே
அன்பை பகிர்ந்து
ஆழ்மனதில் விதைப்போம்
வந்தேமாதரம்…!!!
மதங்கள்
நிறைந்த மனங்களும்
வணங்கும் முறைகளும்
பல விதம்
வேற்றுமையேனும்
ஒற்றுமை ஒலியாய்
வந்தேமாதரம்…!!!
மொழிகள்
மொழியில் பலவாயினும்
நிலங்கள்
பிரித்து தனியாயினும்
இருப்போம்
என்றும் இந்தியனாய்
வந்தேமாதரம்…!!!
வாழ்கவே
எங்கள் பாரதம்
வளர்கவே
வாழும் பூமியில்






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37