18 Dec 2022 1:34 amFeatured

இன்று ( 18-12-2022 ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் வில்லேஜ் ரோடு, பாண்டூப் மேற்கில் உள்ள பாண்டூப் பிரைட் மேனிலைப்பள்ளியில் வைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேனாள் பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது.
மும்பை புறநகர் மாநிலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
துணைச் செயலாளர் அ.இளங்கோ வரவேற்புரையாற்ற பாண்டூப் திமு கழகம் சார்பில் குமார செல்வன் நன்றியுரையாற்றுகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகப் பேச்சாளர் போடி காமராசு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ள நிகழ்வினை புறநகர் திமுக துணைச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தொகுத்து வழங்கவுள்ளார்.
திராவிட இயக்கச் சிந்தனையை தன் வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்ததோடு தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அன்பையும் கழக உணர்வுடைத்த செயல்வீரர்கள் அனைவரது நன்மதிப்பையும் பெற்று மொழியுணர்வும் இனவுணர்வும் காத்து மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் கலைஞரின் உற்ற தோழமையாகவும் இருந்து வந்தார் என்பது புதிய தலைமுறையினரால் உணரத்தக்கது.
இத்தகு சிறப்புமிகு நிகழ்வில் மும்பை திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் கருவூர் பழனிசாமி, திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், கழகப் பேச்சாளர் முகமதலி ஜின்னா, இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், புறநகர் திமுக இலக்கிய அணித் துணை அமைப்பாளர் சைநுலாபுதீன், தானே திமுக ஜாகீர் உசேன், கவிஞர் கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
புறநகர் திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன், மும்பை திமுக அவைத்தலைவர் வே.மா.உத்தமன், என்.வி.சண்முகராசன், பணகுடி சண்முகவேலு, மதிமுக தமிழ்மணி பாலா, இலக்கிய அணி புரவலர்கள் சோ.பா.குமரேசன், கவிஞர் இரஜகை நிலவன், டொம்பிவிலி கிளைச்செயலாளர் வீரை.சோ.பாபு, பிவண்டி கிளைக்கழகச் செயலாளர் மெஹபூப் பாஷா, ஜோகேஸ்வரி ரமேஷ்,
பாண்டூப் செயலாளர் கு.மாரியப்பன், தானே கிளைச்செயலாளர் பாலமுருகன், முலுண்டு பெருமாள், ஜோகேஸ்வரி கிளைக்கழக செயலாளர் தமிழினநேசன், சீத்தாகேம்ப் ராஜேந்திரன் மற்றும் பலர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அனைத்து கழக உணர்வாளர்களும் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து பேராசிரியர் அன்பழகனாரின் புகழைப் போற்றும்படி விழா குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.






Users Today : 5
Total Users : 108818
Views Today : 5
Total views : 436854
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150