Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

இனமான பேராசிரியர் அன்பழகன் மறைந்தார்

07 Mar 2020 9:27 amFeatured Posted by: Sadanandan

You already voted!

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் காலமானார். அவருக்கு வயது 98.  

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காலமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாலை(07.03.2020) ஒரு மணி அளவில் அவர் காலமானார். 

மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சளி, மூச்சு திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் காட்டூர் கிராமத்தில் 1922 டிசம்பர் 19ஆம் தேதி பிறந்த க.அன்பழகன் அவர்களின் இயற்பெயர் ராமையா. சுயமரியாதை கொள்கைகளில் கொண்ட ஈடுபாட்டால் இராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றினார். அதன்பின் 1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றினார் அன்பழகன். அதோடு மட்டுமல்லாமல் 1957ல் திமுக முதன் முதலில் சந்தித்த சட்டமன்ற தேர்தலில் எழும்பூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்பழகன்.

அதன்பின் 1962 செங்கல்பட்டு ஆசிரியர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வென்று மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1967 ஆம் ஆண்டு திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 இல் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் சமூகநலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் அன்பழகன்.

ஒன்பது முறை சட்டப்பேரவைக்கு தேர்வானவர் என்ற சிறப்புக்குரியவர் மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன். 1984 இல் தமிழீழ கோரிக்கையை வலியுறுத்தி தனது எம்எல்ஏ பதவியை துறந்தவர்களில் அன்பழகனும் ஒருவர். தமிழினக் காவலர் கலைஞர், தமிழ் கடல் உட்பட 40க்கும் மேற்பட்ட புத்தகங்களையும்  எழுதியுள்ளார்.

மறைந்த அன்பழகன், கலைஞரின் நெடுங்கால நண்பராவார். பேரறிஞர் அண்ணாவால் திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து கலைஞரின் மறைவு வரை இருவரும் இணைந்து செயலாற்றினர். "1942ஆம் ஆண்டில் அண்ணாவால் அறிமுகம் செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவராக இவரை நான் அறிந்தேன். நான் தொடங்கிய தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழாவில் கலந்துகொள்ள வந்தார். அந்த விழாவிற்கு நான் அழைத்திருந்த பலர் வரவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த விழாவை நடத்தினோம். அன்று முதல் தொடர்கிறது எங்கள் நட்பு" என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். வயதால் கலைஞரை விட மூத்தவரான அன்பழகன் கலைஞரின் தலைமையை ஏற்று அவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர். நண்பரான அன்றிலிருந்து இறுதிவரை பேராசிரியர், கலைஞரின் நண்பராக திராவிட இயக்கத்தின் செயல்வீரராக, தன்னை முன்னிலை படுத்திக் கொள்ளாமல் கொள்கைக்காகவும் இயக்கத்துக்காகவும் வாழ்ந்தார். 

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கலைஞரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபொழுது திமுகவின் பொதுகுழுக்கூட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமையேற்று நடத்திய அன்பழகன், "கலைஞர் தலைமையேற்று நடத்தவேண்டிய இந்தக் கூட்டத்தை அவர் வராமல் நான் தலைமையேற்று நடத்தும் நிலை வந்ததற்காக மிகுந்த வருத்தப்படுகிறேன்" என்று கூறியே தனது பேச்சை  தொடங்கினார். அந்தக் கூட்டத்தில்தான் ஸ்டாலின், செயல்தலைவராக அறிவிக்கப்பட்டு அதை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞரின் உற்ற தோழர் ஆகவும், 43 ஆண்டுகள் தொடர்ந்து கழகத்தின் பொதுச் செயலாளராகவும், கழக ஆட்சியில் சமூகநலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் தமிழாய்ந்த பேராசிரியராகவும் விளங்கிய பொதுச் செயலாளர் பேராசிரியர் சில நாட்கள் உடல் நலிவுற்று  இருந்த நிலையில் 7-3-2020 அதிகாலை ஒரு மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார். கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட்டு கழகக் கொடிகள் ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் மாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

092649
Users Today : 27
Total Users : 92649
Views Today : 33
Total views : 410392
Who's Online : 0
Your IP Address : 3.144.39.16

Archives (முந்தைய செய்திகள்)