03 Feb 2025 11:00 pmFeatured

மும்பை புறநகர் மாநில திமுக மற்றும் மும்பை மாநகர திமுக சார்பில் நடைபெற்றன
மும்பை புறநகர் மாநில திமுக
மும்பை புறநகர் மாநில திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 56வது நினைவேந்தல் கூட்டம் பாண்டுப் பிரைட் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் அலிஷேக் மீரான் உள்ளிட்ட அனைவரும் அறிஞர் அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில் மாநகர செயலாளர் கருவூர் இரா பழனிச்சாமி, புறநகர் திமுக துணைச் செயலாளர்கள் வதிலை பிரதாபன், இளங்கோ, பொருளாளர் பி. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வே .சதானந்தன், பிவண்டி மெஹபூப் பாட்ஷா ஆரே காலனி சிவக்குமார் சுந்தர்ராஜ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெய்னுல் ஆப்தின் ,பான்டுப் மாரியப்பன், முஸ்டாக் பாய் ,சீதா கேம்ப் மதியழகன் ,உதயகுமார் ,ஆழ்வார், கதிரவன் ,ஆதி திராவிட மகாஜன சங்க முன்னாள் தலைவர் கே வி அசோக் குமார் ,முலுண்ட் பெருமாள் ,வெங்கடேஷ், ராமானுஜம், யூசுஃப் முஷ்டாக் ,ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை மாநகர திமுக
மும்பை மாநகர திமுகவின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவேந்தல் நிகழ்வு கலைஞர் மாளிகை தாராவியில் மாநகர செயலாளர் கருவூர் இரா பழனிச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன்,

அவைத்தலைவர் வே.ம.உத்தமன்.மூத்த தலைவர் என்.வி.சண்முகராசன். தோ.செ.கருணாநிதி.
பூலாங்குளம் ஜெ.சுகுமாறன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமரன் உத்தமன் உள்ளிட்ட கழக முன்னோடிகள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.






Users Today : 26
Total Users : 106472
Views Today : 30
Total views : 434199
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37