18 Sep 2019 9:59 pmFeatured

பாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நியூயார்க்கில் நடக்கும்
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும்,
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வரும் 21 முதல் 27-ம் தேதி வரை அமெரிக்க பயணத்தை
மேற்கொள்ள உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் ஹாஸ்டன் நகரில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசவிருக்கிறார். பின்னர் வரும் 27-ம் தேதி ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடி ஐ.நா.வில் உரையாற்றிய பின், அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர பிரதமர் மோடி, வரும் 24-ம் தேதி ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்திலும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்திலும் பேசுகிறார். இதுதவிர பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு வரும் 21-ம் தேதி அமெரிக்கா பயணத்தின் போது பயணிக்கும் விமானம் பாகிஸ்தான் வான்வெளி வழியாக நியூயார்க் செல்ல வேண்டியுள்ளது. இதனால் முறைப்படி அந்நாட்டிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இதனை பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37