10 May 2025 12:08 amFeatured
மும்பை புறநகர் மாநில கழகப் பணிகள் செவ்வனே நடைபெற மும்பை புறநகர் மாநில கழகப் பொறுப்பாளர் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகம் அலிசேக் மீரான் அவர்களை மாவட்ட செயலாளராக கொண்டு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழக தலைமை கழகம் அலிசேக் மீரான் மீண்டும் பொறுப்பாளராக நியமித்துள்ளது.
பி கிருஷ்ணன், வதிலை பிரதாபன், ஜேம்ஸ் தேவதாசன், இளங்கோ அப்பாதுரை, வே.சதானந்தன், வெ.அ.ஜெய்னுலாப்தின். வீரை சோ பாபு, சிவக்குமார் சுந்தர்ராஜ், மெகபூப் பாட்ஷா, சோ பா குமரேசன், ச.சிலுவைதாசன் ஆகியோர் பொறுப்புக் குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இச்செய்தியை 09.05.2025 ம் நாளைய முரசொலி செய்தித்தாளில் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
மும்பை புறநகர் மாநிலக் கழகப் பொறுப்புக் குழுவை நியமித்தத் தலைமைக் கழகத்திற்கும்,
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கும், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவரும் அனைவரது பெயர்களையும் பரிந்துரை செய்து ஒருங்கிணைத்திருக்கும் செயலாளர் அலிசேக் மீரான் அவர்களுக்கும் அனைத்துப் பொறுப்புக்குழு உறுப்பினர்களும் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.
திமுக தலைமை அறிவித்துள்ள மும்பை புறநகர் திமுக மாநில கழகப் பொறுப்பாளர் திரு அலிசேக் மீரான் அவர்களுக்கும் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருவூர் இரா.பழனிச்சாமி
👌🏻 அருமை அய்யா.