05 Aug 2023 9:08 pmFeatured

மும்பை புறநகர் மாநில திமுக சார்பில்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மேனாள் முதல்வருமான கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் 07-08-2023 திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் பாண்டூப் பிரைட் மேனிலைப்பள்ளியில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் வைத்து கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறவுள்ளது. மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழக மாநில செயலாளர் அலிசேக் மீரான், பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச்செயலாளர்கள் வதிலை பிரதாபன், அ இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர்.வ.ரா தமிழ்நேசன், இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன்,
இலக்கிய அணித் துணை அமைப்பாளர் ஜைனுலாபுதீன், இலக்கிய அணிப் புரவலர் சோ பா.குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், கவிஞர் வீரமணி, உதய் பாலமுருகன், மற்றும் கிளைக் கழக செயலாளர்களும் கழக உணர்வாளர்களுமான வீரை சோ பாபு, மெஹபூப் பாஷா சேக், குமாரசெல்வன், எஸ்.பி.செழியன், பாலமுருகன், பெருமாள், எஸ் எஸ். தாசன், தமிழினநேசன் ஆகியோர் கலைஞரின் சிறப்புகளை நினைவுகூர்ந்து மலர்தூவி மரியாதை செய்யவுள்ளார்கள்.
கலைஞரின் புகழேந்தல் நிகழ்வில் புறநகர் தி.மு. கழகத்தின் பல்வேறு கிளைக் கழகங்களிலிருந்தும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






Users Today : 67
Total Users : 105936
Views Today : 106
Total views : 433522
Who's Online : 1
Your IP Address : 18.97.14.90