08 Aug 2022 8:21 pmFeatured

07-08-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பாண்டுப் மேற்கில் உள்ள பிரைட் மேனிலைப் பள்ளியில் வைத்து மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் அலிசேக் மீரான் தலைமையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மும்பை புறநகர் மாநிலத் திமுக துணைச்செயலாளர் வதிலை பிரதாபன், இலக்கிய அணி அமைப்பாளர் வ.ரா.தமிழ்நேசன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், இலக்கிய அணிப்புரவலர் சோ.பா.குமரேசன்,
இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன், பாண்டுப் கிளை கழகச் செயலாளர் கு.மாரியப்பன், பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாஷா, அந்தோணி ஜேம்ஸ், மால்வாணி எஸ்.பி.செழியன் எஸ்.எஸ்.தாசன் ஆகியோர் நினைவேந்தலுரை ஆற்றினார்கள்.
தலைமை கழகப் பேச்சாளர் முகமது அலி ஜின்னா சிறப்புரை ஆற்றினார்.
பாண்டுப் கிளை பேலஸ் துரை, தானே கிளைச் செயலாளர் பாலமுருகன், முலுண்டு கிளைச் செயலாளர் எஸ்.பெருமாள், சங்கரசுப்பு, ஜெயசிங், ராமன், எம்.குணதாஸ், டி.எ.அரசன், அந்தோணி ரிஜில்டன், மற்றும் பல கிளைக் கழகங்களின் நிர்வாகிகளும் கழகத் தோழர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு கலைஞர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புறநகர் திமுக அவைத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் நிகழ்வின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.






Users Today : 62
Total Users : 105931
Views Today : 97
Total views : 433513
Who's Online : 0
Your IP Address : 18.97.14.90