12 Aug 2019 6:07 pmFeatured

தலைமை
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக தலைவர் கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டம் 11.08.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் பள்ளியில் வைத்து நடைபெற்றது. கலைஞர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் புகழ் வணக்கக் கூட்டத்திற்கு மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமை தாங்கி புகழ்வணக்க உரையாற்றினார்.
படத்திறப்பும்-வரவேற்பும்
மும்பை புறநகர் மாநில திமுக , இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ் நேசன் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ வரவேற்புரை நிகழ்த்தினார்.
புகழ் வணக்க உரை
மும்பை மாநகர பொறுப்பாளர் கருவூர்.இரா.பழனிச்சாமி, மும்பை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணித் தலைவர் வே..சதானந்தன், இளைஞரணி துணை அமைப்பாளர்,இரா.கணேசன், பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெஹபூப் பாட்சா, தானே கிளைக் கழகச் செயலாளர் ஆ.பால முருகன், முல்லுண்ட் கிளைக் கழகச் செயலாளர் பெருமாள்
கவிஞர் பாபு சுசீதரன், ஆசிரியர் அந்தோணி ஜேம்ஸ், முத்தமிழ் தண்டபாணி, செம்பூர் கிளைக் கழகச் செயலாளர் நம்பி, எம்.பரமசிவம், முல்லுண்ட் கிளை வள்ளியூர் மணி, அப்துல் லத்தீப், திருமதி நுகிமா பானு, முலுண்ட் நம்பி,பாண்டுப் கிளை சேர்மன் துரை, வாஷி கிளை பி.ஆறுமுகம், வாஷி தில்லை, பொய்சர் கிளை எஸ்.சதாசிவம்,அம்பர்நாத் எம்.அப்துல், இராமு காத்தவராயன், கிருஷ்ணன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மலரஞ்சலி செலுத்தி நினைவேந்தல் புகழ் வணக்க உரை நிகழ்த்தினார்கள்.
அவையோரின் பாராட்டை பெற்ற பள்ளி மாணவி
பள்ளி மாணவி அனீஸ் பாத்திமா தலைவர் கலைஞர் அவர்களைபற்றி கவிதை வாசித்து அவையோர் அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
முடிவில் மும்பை புறநகர் மாநில திமுக அவைத் தலைவர் ச.சுப்பிரமணியன் நினைவேந்தல் புகழ் வணக்க உரையும் , நன்றியுரையும் ஆற்றினார்.






Users Today : 27
Total Users : 106473
Views Today : 31
Total views : 434200
Who's Online : 0
Your IP Address : 216.73.216.37