03 Mar 2021 9:38 amFeatured

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் 68 ஆவது பிறந்த நாள் தமிழர் எழுச்சி நாளாக 01.03.2021 திங்கள் கிழமை மாலை 6.30 மணியளவில் மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக பாண்டுப் பிரைட் மேல்நிலைப் பள்ளியில் வைத்து கொண்டாடப்பட்டது.
மும்பை புறநகர் மாநில திமுக அவைத் தலைவர் ஜேம்ஸ்தேவதாசன் தலைமை தாங்கினார். செயலாளர் அலிசேக் மீரான் விழா பேருரை நிகழ்த்தினார். விழாவில் மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கரூர்.இரா.பழனிச்சாமி, மும்பை மாநகர தி.மு.க அவைத் தலைவர் வே.ம..உத்தமன், மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கிய அணி புரவலர் சோ.ப.குமரேசன், தானே கிளை திமுக ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், மும்பைமாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், திமுக பேச்சாளர் முகமது அலி ஜின்னா, இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், மும்பை புறநகர் மாநிலத் திமுக டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை.சோ.பாபு, பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா ,தானே கிளைக் கழகச் செயலாளர் ஆ.பாலமுருகன், முலுண்ட் கிளைக் கழகச் செயலாளர் சு.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பாண்டுப் கிளைக் கழக துணைச் செயலாளர் சேர்மன்துரை நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
'ஸ்டாலின் தான் வாறாரு' என்ற பாடலுக்கு சிறுவர் சிறுமிகள் ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது.
மேலும் இவ்விழாவில் பாண்டுப் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.தாசன், மும்பை புறநகர் மாநிலத் தி.மு.க கிளைக் கழகச் செயலாளர்கள், மால்வாணி கிளைக் கழகச் செயலாளர் எஸ்.பி.செழியன், வாசி கிளைக்கழக செயலாளர் ச.பழனி, பி.பேலஸ்துரை, இளைஞர் அணிதுணை அமைப்பாளர்கள் க.மூர்த்தி, கிளைக் கழகச் செயலாளர்கள் முகமது அலி, முஸ்தாக் அலி, பேராசிரியர் சு.சம்பத்,
கிளைக் கழகங்களைச் சேர்ந்த இரா.செல்வம், சக்தி வேல், ஆர்.இ.மணி, இ.மாடசாமி, அப்துல் லத்தீப், எம்.சதாசிவம், எஸ்.ஜெயசிங், ஆர்.செபஸ்டீன் எல். இராதாகிருஷ்ணன், எஸ்.இராமன், பொன்னுதுரை, சங்கரசுப்பு, பாலமுருகன், அ.அய்யனார், சு. வேல்முருகன், மாடசாமி, வள்ளியூர் மணி, சிவா ஆரே காலனி, செல்வன், அந்தோணி தாசன், ஐசக், டி. ஜெயக்குமார், கிஃப்ட் வின்ஸ்டன், ஏ.டி தானப்பன், ஜி. ருத்தன் சிங், ஏ. அருள் ரவி,
த. பாண்டியன், சு. ஜாண்சன், எஸ். பாலன், எஸ். சுந்தர் சிங், ஏ.யு பூமாரி,பலாவே, இ.குமாரசெல்வன், பி. மாரிமுத்து, அன்னப்பாண்டி, தங்கப்பன், எஸ். விஜய் பாண்டியன், உசேன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செலின் ஜேக்கப், ஜெஸ்டினா ஜேம்ஸ், ரூபி டேவிட், சாந்தி எட்வர்ட், பியூலா, ஜெயா ஜேக்கப், லில்லி அந்தோணி ராஜ், வசந்தி
ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
விழா இறுதியில் அனைவரும் வாழை இலை பிறந்த நாள் விருந்தில் பங்கு பெற்றனர்.






Users Today : 8
Total Users : 108821
Views Today : 8
Total views : 436857
Who's Online : 0
Your IP Address : 216.73.216.150